உலகச் செய்திகள்


இந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்ட 'சென்னை' மாணவி 

பாகிஸ்தானுக்கே முதலிடம்

லிபிய கடற்பகுதியில் மேலும் 200 பேர் பலி

யோகாவில் கின்னஸ் சாதனை

படகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்



இந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்ட 'சென்னை' மாணவி 


20/06/2018 மிஸ்.இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

மிஸ்.இந்தியா அழகிப்போட்டி மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது.போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ்(19) என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கடந்த வருட மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார்.

போட்டியில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி செளத்திரியும், ஆந்திர மாநிலத்தைச்  சேர்ந்த ஸ்ரேயா ராவ் என்பவரும் பெற்றனர்.
முன்னதாக மிஸ்.தமிழ்நாடு வென்ற அனுக்ரீத்தி வாஸ் இவ்வாண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டிக்கு, இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி   









பாகிஸ்தானுக்கே முதலிடம்

20/06/2018 இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதென தெரிவித்துள்ளது.
அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் காணப்படுகின்றன.
பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானிலே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் மொத்தமாக 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டில் அமெரிக்கா, ரஷியாவில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால் அணு ஆயுதம் உற்பத்தி குறைந்தது எனவும் ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 








லிபிய கடற்பகுதியில் மேலும் 200 பேர் பலி

22/06/2018 ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 200 பேர் படகுகள் நீரில் மூழ்கியதில் பலியாகியுள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிர்தப்பியவர்களே இதனை தெரிவித்துள்ளனர்.
இதனை ஐக்கியநாடுகளின் அமைப்புகளும் உறுதிசெய்துள்ளன.லிபியா கடற்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய 100 பேரில் ஐவரே காப்பாற்றப்பட்டுள்ளனர் என யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாளில் 130பேருடன் ரப்பர் படகொன்று நீரில் மூழ்கியதில் 70 பேர் வரை பலியாகியுள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.
இதேவேளை காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகள் தங்களுடன் படகில் பயணித்தவர்களில் 50ற்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பெருமளவு அகதிகளும் குடியேற்றவாசிகளும் கடலில் தொடர்ந்து பலியாவது குறித்து யுஎன்எச்சீஆர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









யோகாவில் கின்னஸ் சாதனை

21/06/2018 உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 இலட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4ஆவது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 இலட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். 
ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையில் வழங்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இன்று யோகா பயிற்சியும், யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 









படகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்

20/06/2018 சுமத்ராவின்  டோபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 180 பேர் காணாமல் போயுள்ளனர்,
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுகளில் உள்ள டோபா ஏரியில் சுற்றுலா சென்ற 180 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் படகில் சென்ற அனைவரும் காணாமல் போயுள்ளனர்.
குறித்த காணாமல் போனரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்டுக் குழுவினரால் உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களை மீட்டுள்ளதோடு மேலும் காணாமல் போனோரின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  நன்றி வீரகேசரி 







No comments: