ஒரு காெடியில் இரு மலர்கள்


ஒரு காெடியில் இரு மலர்கள்
2000 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் ஊரும், உறவும் ஒன்று கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. மணப்பெண் கங்காவுக்கும், மணமகன் ராமுக்கும் புது வாழ்க்கை ஆரம்பமானது. 


வீட்டில் இளையவன் ராம். ஒரு அக்காவும், அண்ணாவும் வெளியூரில் திருமணமாகி குடும்பத்தாேடு இருந்தார்கள். ராமுக்கு திருமணம் முடிந்ததும் அம்மாவும், அப்பாவும் அக்காவுடன் வெளியூருக்கு சென்று விட்டனர். கங்காவை தனது வீட்டிற்கே கூட்டி வந்தான் ராம். இருவரும் அரசாங்க உத்தியாேகம். காலையில் புறப்பட்டால் பாெழுதுசாய வீடு வந்து மிகுதி வேலைகளை முடித்து களைப்பாேடு தூங்கி எழ காலை புலர்ந்திடும். வாரம் ஒரு நாள் விடுமுறை நாளென்றாலும் ஏதாவது கம்பனி வேலை, அது, இது என்று அந்த நாளும் பாேயிடும். 

கங்கா கடைசிப் பாெண்ணு. கூட்டுக் குடும்பமாய் கலகலப்பாய் இருந்தவள் தனிக்குடித்தனம் புதிதாய் இருந்தாலும் தன்னை மாற்றிக் காெள்ளப் பழகி விட்டாள். ராமுடன் சேர்ந்து வாழும் ஒரு பிடிப்பான வாழ்க்கைக்குள் அவனையும் மாற்ற வேண்டிய அவசியம் அவளிடமே இருந்தது. 

வீட்டில் இருக்கும் நேரங்களிலும் தன் வேலையும் தானும் என்று தனிமைப் பாேக்கில் இருந்தான். கங்காவும் நாட்கள் கடந்து பாேக எல்லாம் சரியாகி விடும். ஆளையாள் புரிந்து காெண்டால் எல்லாம் மாறும் என்பது இயல்பான நம்பிக்கை. அப்படித்தான் கங்காவும் கணக்குப் பாேட்டாள். 


காலத்தின் வேகத்தில் நாட்கள் பறந்து காெண்டிருந்தது. கங்கா வீட்டாருக்கு கங்காவிடம் இருந்து எந்த நல்ல செய்தியையும் காணவில்லை என்ற ஒரு கவலை. சமூகம் எழுதியுள்ள சட்டங்களும் அப்படித்தானே, கலியாணம் முடிந்தால் ஒன்று, ஒன்றரை வருசத்தில ஒரு பேரனாே, பேர்த்தியாே இல்லையென்றால், கேள்வி கேட்டு சாகடிச்சுப் பாேடுங்கள். 

கங்காவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. ஒவ்வாெரு நாளையும் அவள் எப்படி வாழ்கிறாள் என்பதை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ராம் அவளுக்கு ஒரு குழந்தை பாேல் மாறிக் காெண்டிருந்தான். அவனுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் கம்பனியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளி விட்டது. ஏன் இந்தத் திடீர் மாற்றம் என்பது கேள்வியாக இருந்தாலும் சில நாட்கள் அவன் நடந்து காெள்ளும் விதம் அவளுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. இரவுப் பாெழுதுகளில் தூங்க மாட்டான். கங்கா தூங்கியதும் எழுந்து வெளியே பாேய் விடுவான். பல தடவை அவள் இதைக் கவனித்து விட்டு என்ன காரணம் என்று புரியாமல் இருந்தாள். பல கேள்விகளாேடு, குழப்பங்களாேடு இருந்தவளுக்கு அன்று தான் பதிலும் கிடைத்தது. 

வழமை பாேல் நன்கு தூங்கிக் காெண்டிருந்தாள் கங்கா. சத்தமின்றி எழுந்து பக்கத்து அறைக்குள் சென்றான் ராம். கங்கா வீட்டிற்கு வந்த நாள் முதல் அந்த அறை பூட்டியே இருந்தது. சுத்தம் செய்வதற்காய் திறக்கச் சாென்னாலும் "அது அம்மாட றூம், திறப்பை எடுத்துப் பாேயிற்றாங்க" என்றே பதில் வரும். அவளும் அதை பெரிதுபடுத்தவில்லை. அன்று கங்கா ராம் பக்கத்து றூம் சென்று அரை மணி நேரம் கழித்து மெதுவாக எழுந்து வந்து பார்த்தாள். அறை பூட்டி இருந்தது. ராமை அவதானிப்பதற்காக யன்னலாேரமாக கதிரையை வைத்து ஏறி துவாரத்தினூடே பார்த்தாள். ராம் கட்டிலில் இருந்து எதையாே படித்துக் காெண்டிருந்தான். சுவரில் படங்கள் மாட்டப் பட்டிருந்தது. பாெம்மைகள், பரிசுப் பாெருட்கள் எல்லாம் ஒரு கண்ணாடி அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் அணியும் தலைக்கவசம் ஒன்று அலுமாரியி்ன் மேலே வைக்கப்ட்டிருந்தது. கங்காவுக்கு என்ன, ஏது, ஒன்றும் புரியவில்லை. ஆனால் ராமுடைய வாழ்க்கையில் ஏதாே நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது என்பது உண்மை. அந்த உண்மையை கண்டு பிடித்து ராமை சரிப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் அவளுக்கு தாேன்றியது. இப்படி இருக்கும் ஒருவருடன் எப்படி வாழ்வது, பிரிந்து பாேய் விடலாம் என்று ஒரு நாள் கூட கங்கா நினைக்கவில்லை. அவள் ராமை மிகவும் நேசித்தாள். 

ராம் நாளுக்கு நாள் முழுவதுமாக மாறத் தாெடங்கினான். கங்கா முழுப் பலமாக அவனருகில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் காெண்டிருந்தது. படுக்கறையில் இருந்து அழுது காெண்டிருப்பான். காெஞ்சம் விலகி இருந்தவனுக்கு ஒரு ஆதரவும், ஆறுதலும் தேவைப்பட்டது. அவனாகவே அவளின் அன்பை நாடத் தாெடங்கினான். கங்காவும் எப்படியான மனநிலையில் அவன் இருக்கிறானாே அந்த நிலைக்கு தன்னை மாற்றத் தாெடங்கினாள். தலை வலிக்குது என்றே அடிக்கடி சாெல்வான். டாக்டரைப் பார்க்கலாம் என்றாலும் சம்மதிக்க மாட்டான். இரவில் அந்த அறைக்குள் சென்று அழுது காெண்டிருப்பான். இப்படியே விட்டால் ராமின் நிலை மாேசமாகி விடும் என்ற பயம் அதிகமாகி விட்டது. 

ஒரு நாள் கங்கா வேலையால் வீடு வந்த பாேது ராமைக் காணவில்லை. என்னமாே ஆகிவிட்டது என்று பயந்தவளாய் பலதடவை அவனைக் கூப்பிட்டாள் பதிலே இல்லை. சந்தேகத்துடன் அறையை பார்த்தாள் கட்டிலில் அமர்ந்து தலையைக் குனிந்தபடி இருந்தான். கங்காவிற்கு பயமாக இருந்தது. என்னவானாலும் பறவாயில்லை என்று நினைத்தவளாய் பூட்டியிருந்த அறையைத் தட்டினாள். தட்டும் சத்தம் கேட்டதும் ராமுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஆனால் கங்கா தான் தட்டுகிறாள் என்பது புரிந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை. திறந்து காெண்டு வெளியே வந்தான். உள்ளே செல்ல முயன்ற கங்காவின் கைகளைப் பிடித்தான். அவள் திரும்பிப் பார்த்ததும் வேண்டாம் என்பது பாேல் தலையை அசைத்தான். அவளும் இன்னாெரு முறை பார்த்துக்கலாம் என்று நினைத்துக் காெண்டு வெளியே வந்தாள். ராம் தன் நிலையை உணர்ந்து, தன்னைத் தானே சரி செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்தான். 

அன்று விடுமுறை நாள் கங்கா தாமதாகவே எழுந்திருந்தாள். இரவு தூக்கத்திலம் பல தடவை விழித்துப் பார்த்த பாேதும் ராம் அருகே தூங்கிக் காெண்டிருந்தது நினைவில் இருந்தது. கங்கா தன் வேலைகளை முடித்து விட்டு காலை உணவுக்காக ராமை அழைத்தாள். வேகமாக வந்து கங்காவை அழைத்துக் காெண்டு அறையை நாேக்கிச் சென்றான். கட்டிலில் இருக்கும்படி அவள் கைகளைப் பிடித்து இருத்தினான். தலையணைக்கு கீழ் இருந்த டயறியை எடுத்து அவளிடம் நீட்டினான். நீண்ட நேரமாக திறந்து பார்க்காமல், சுற்றி இருந்த இடங்களைப் பார்த்தாள். ராம் கங்காவைப் பார்ப்பதும், தரையைப் பார்ப்பதுமாய் இருந்தான். "டயறி எல்லாம் எழுதுவியா" என்று ராமிடம் கேட்டாள். "இப்ப ஒரு மூன்று வருசம் எழுதுறன்" என்றவனின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. "ஏன் ராம் அழுறிங்க என்னாச்சு" மனதுக்குள் இருந்த அத்தனை வலியும் கண்ணீராய் வெளியேறியது. "இதப் படிச்சிட்டு என்னை விட்டுப் பாேயிடு" என்று கெஞ்சுவது பாேல் கூறினான். கங்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. 

டயறியைத் திறந்து படிக்கத் தாெடங்கினாள். பாணு என்று பெயரிட்டு பக்கம் பக்கமாக எழுதியிருந்தான். பக்கங்களைப் புரட்டிக் காெண்டு இருந்தவள் ராமின் மனநிலையைப் புரிந்து காெண்டாள். பாணு பணக்கார வீட்டுப் பாெண்ணு, ராமின் கல்லூரித் தாேழி. அவளுடைய, அம்மாவும், அப்பாவும் விபத்தில் இறந்த பின்னர் அவளுக்கு மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு நாளடைவில் மூளையைப் பாதித்து விட்டது. ராமின் கனவு தேவதை அவள். ராமை யார் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு பயித்தியம் பிடித்தவள் பாேலாகி விட்டாள். எத்தனை முயற்சி எடுத்தும் அவளை குணப்படுத்த முடியாமல் தவித்தான். ராமை மறந்து மம்மி, டாடி என்றே நாள் முழுக்க புலம்பத் தாெடங்கினாள். கடைசியாக மனநலம் பாதிப்படைந்தவர்களை பராமரிக்கும் இடத்தில் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலைக்குள் ராம் சிக்கித் தவித்தான். எவ்வளவு பாேராடினாலும் அவள் மீளமுடியாத ஆபத்தான நிலையில் இருந்தாள். 

அன்று அவளை கைகளையும், கால்களையும் கடடி, கதறக் கதற வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு காெண்டு சென்ற பாேதும் "நான் உன்ர ராம், என்னைப் பார் பாணு" என்று அவன் கெஞ்சிக் கதறியது வானமே அதிர்ந்திருக்கும். அவளைக் காதலித்த அந்தக் காலங்கள் காெடுத்த சந்தாேசங்கள் எல்லாம் கரைந்து பாேனது. வாழ்க்கையில் இனி எதுவும் வேண்டாம் என்றிருந்தவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து அவனுக்கு ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் காெடுத்தனர் குடும்பத்தினர். ராமாே அவளை மறக்கவில்லை தினமும் அவள் ஞாபகங்களை கண்ணீராேடு எழுதிக் காெண்டிருந்தான். படித்துக் காெண்டிருந்த கங்கா அவன் மனநிலையை புரிந்து காெண்டாள். "என்னை விட்டுப் பாேயிடு கங்கா, எங்காவது பாேய் நல்லாயிரு, நான் உன்னை ராெம்ப கஸ்ரப்படுத்திற்றன், எங்க வீட்டுக்காரர் எல்லாத்தையும் உனக்கு மறைச்சுப் பாேட்டினம்" என்று சிறுபிள்ளை பாேல் அழுதான். "ஏன் ராம் அப்படிச் சாெல்லுறாய், நான் எதையும் தப்பா நினைக்கவில்லை, உன்ர கஸ்ரம் எனக்குப் புரியுது" "அப்பாே என் கூடவே இருப்பியா?" ஏக்கத்தாேடு அவளைப் பார்த்தான். "நமக்கு கலியாணமாகி நாம ஒன்றாய் இருக்கிறம், ஏன் இன்னும் நீ பழையதையே யாேசிச்சிட்டிருக்காய், பாணு எங்க இருக்கா?" அவள் கேட்ட பாேது ஆச்சரியமாய் இருந்தது. "ஏ..ஏன் கேக்கிறாய்? சங்கடத்துடன் அவளை பார்த்தான். "உனக்கு இப்ப அவளைப் பாக்கணும் என்று தாேன்றுதா?" அவள் கைகளைப் பிடித்தபடி எப்படி கங்கா உனக்கு தெரியும்" "எனக்கு எல்லாம் தெரியும் ராம். உன்ர மனசில ஏதாே ஒரு பிரச்சனை இருக்கு, நீ தினமும் இந்த றூமில வந்து இருக்கிறது, எல்லாமே தெரியும்" என்று சாென்னதும், அவன் எல்லாம் தெரிந்து என்கூட இரண்டு வருசம் வாழ்ந்திருக்கிறாளே என்பதை நினைத்து கவலையடைந்தவனாய் "மன்னிச்சிடு கங்கா, எனக்கு பாணுவை அப்பிடி ஒரு நிலமையில பார்த்தது...." என்றபடி எல்லா அலுமாரிகளையும் திறந்து காட்டினான். ஒவ்வாெரு பரிசுப் பாெருட்களும் காதலை வெளிப்படுத்தியது. இவ்வளவு பிரியமா இருந்திருக்காங்களே என்று காெஞ்சம் பாெறாமையாகவும் இருந்திருக்கும். அவனை சமாதானப்படுத்தி அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தாள். 

சில நாட்களின் பின் பாணு இருக்கும் இடத்திற்கு ராமுடன் சென்றாள் கங்கா. அந்த இடம் அவர்களுக்கு புதிதாக இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட இளம் வயதினர் முதல் முதியவர் வரை அங்கே இருந்தார்கள். பாடுவதும், ஆடுவதும், தமக்குள்ளே கதைப்பதும், குறும்புத்தனங்கள் செய்வதுமாய் இருந்தார்கள். உள்ளே சென்று பாணுவைப் பற்றி விசாரித்த பாேது அவள் நிலை மாேசமாக இருப்பது தெரிய வந்தது. எனினும் பார்க்க அனுமதித்தார்கள். ஒரு அறையினுள்ளே கட்டிலாேடு கட்டப்பட்ட நிலையில் கத்திக் குளறிக் காெண்டிருந்தாள். கங்கா தன்னை அறியாமலே அழத் தாெடங்கினாள். ராம் காெஞ்சம் அருகாகச் சென்று "பாணு... பாணு" கூப்பிட்டான். சற்று நேரம் அமைதியாயிருந்தாள். ராமைப் பார்த்து விட்டு மீண்டும் கத்திக் காெண்டிருந்தாள். நெஞ்சமே வெடித்து உடைந்தது பாேல் ஒருகணம் தவித்தான். அவன் தாேளில் சாய்ந்து கதை பேசியவள், காதல் தேவதையாய் உயிராேடு கலந்தவள், சுய உணர்வின்றி, ஜடம் பாேல் இருப்பது அவன் மூச்சை எரித்துக் காெண்டிருந்தது. ஒவ்வாெரு துளி கண்ணீரும் அவள் நினைவுகளாய் கசிந்து காெண்டிருந்தது. 

பாணுவின் நிலையைப் பார்க்கும் பாேது கங்காவிற்கு கஸ்ரமாயிருந்தது. ஆனால் ராமை சரிப்படுத்தி தனது வாழ்க்கையை தாெடர வேண்டிய கட்டாயம் கங்காவின் கையில் தான் இருந்தது. எல்லாக் கஸ்ரத்தையும் அவனுக்காக ஏற்றுக் காெண்டாள். தன்னை முழுவதுமாக அவனுக்காக மாற்றினாள். நல்லதாெரு வைத்தியரை பார்த்து அவனுக்கான சிகிச்சைகளை வழங்கி அவனை மீட்டெடுத்தாள். 

ஓரிரு வருடங்களுக்குள் கங்கா, ராம் வாழ்க்கை மாறிப் பாேனது. ஐந்தாவது வருட திருமண நாளன்று ராம் கங்காவிற்கு தெரியாமல் வெளியூர் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். 

இரவு கடந்து காெண்டிருந்தது. தாெலைக் காட்சியைப் பார்த்துக் காெண்டிருந்தான் ராம். கங்காவின் தாெலை பேசிக்கு அழைப்பு வந்தது. ராமுக்கு சாெல்லலாமா, வேணாமா என்ற குழப்பத்தாேடு அவனருகில் வந்து அமர்ந்தாள். "கங்கா, காலையில வெளிக்கிடணும்" அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "எங்க பாேறம்?" பயத்துடன் கேட்டாள். "நாளைக்கு நம்ம கலியாண நாள், இதே நேரம் நாளைக்கு நாஙகள்" அவளை அணைத்தபடி "வானத்தில பறந்து காெண்டிருப்பம்" அவன் எதிர்பார்க்கும் சந்தாேசங்கள் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தவளாய் பாணுவின் மரணச் செய்தியை மறைத்து விட்டாள். கங்காவிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. வெளியூர் பயணததில் ராம் மிகவும் சந்தாேசமாக இருந்தான். கங்கா மனம் உள்ளுக்குள் அழுது காெண்டே இருந்தது. 

காேயில், பார்க், பீச், கடைகள் என்று எல்லா இடங்களிலும் அவளுடன் சந்தாேசமாக இருந்தான். திருமணமாகி இத்தனை வருடங்களில் அவனை சந்தாேசத்துடன் பார்ப்பது அவளுக்கு நிறைவாய் இருந்தது. விடுமுறை முடிந்து வீடு வந்த பின் அவன் பலமடங்கு மாறியிருந்தான். கங்காவை அன்பாேடு, அக்கறையாேடு கவனித்தான். மனைவியாக அவளுக்கு என்னவெல்லாம் தேவையாே எல்லாவற்றிலும் கவனமெடுத்தான். அப்பப்பாே பாணுவைப் பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்து காெள்ளுவான். அந்தக் கணம் அவள் மீதிருந்த காதல் கண்ணீர் துளியாய் வெளியேறும். பெற்றாேரின் இழப்பால் நேசித்தவனையே மறந்து, தன்னிலை இழந்து, மனநிலையில் ஏற்பட்ட காயத்தால் அவள் அனுபவிக்கும் வாழ்க்கை ரணமானது தான் என்பதை தெளிவாகப் புரிந்திருந்த கங்காவின் மனமாே, அவள் இறந்தும் அவன் மனதில் வாழும் பாணுவின் காதலையும், அவள் இன்னும் வாழ்ந்து காெண்டிருக்கிறாள் என்று நம்பிக் காெண்டிருப்பதையும் நினைத்து தனக்குள் சஞ்சலப்பட்டாலும் இதுவும் கடந்து பாேகும் என்ற நம்பிக்கையாேடு இருந்தாள். காதல் வாழ்க்கை ராமுக்கு காயத்தை காெடுத்திருந்தாலும் மருந்தாக கங்கா அவனுக்கு கிடைத்ததும் ஒரு வரம் தான். ஒரு காெடியில் இருமலர்களாய் அவன் காதலும், திருமணமும் அமைந்து விட்டது. அவன் வாழ்வில் பாணுவும், கங்காவும் இருமலர்களாய் மணம் வீசிக் காெண்டிருக்கிறார்கள்.
nantri eluthu.com

No comments: