"சாட்சிகள் சொர்க்கத்தில்" - திரை விமர்சனம்



ஆஸ்திரேலியாவில்ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, 'சாட்சிகள் சொர்க்கத்தில்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதுஇத்திரைப்படத்தின்சிறப்பு காட்சிகள் சிட்னி- Blacktown Arts Centre ல் Preview show (அதிக்ரப் பூர்வ வெளியீடுக்கு முன்திரையிடப்படும் காட்சிநான்கு காட்சிகள் சனிக்கிழமை 16/06 2018 அன்று திரையிடப்பட்டது.

மாலை 6.30 காட்சியில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களில் நானும் ஒருவன். ஈழன் இளங்கோவன் படக் குழுவினர்களின் இரண்டாவது படம்.  படத்தின் கரு காட்சியமைப்புகள் , திரைக்கதைவசனம் , ஒளிப்பதிவு இசையமைப்பு என்று எல்லா நிலைகளிலிலும் நல்லதிரைப்படத்திற்கான நேர்த்தியும்தரமும் மிகச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் உள்ளூர் கலைஞர்கள் நடிகர்,நடிகைகளாக நடித்துள்ளனர்.
கதையின் நாயகிசூரி வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் ஈழன் இளங்கோபாலகன் பாலச்சந்திரனாக நடித்துள்ள சிறுவன்அகதியாகவந்து தந்தையை தேடும் மகள் நால்வரின் நடிப்பும் மனதைத் தொடுகிறதுமனைவியையும்மகளையும் 26 ஆண்டுகளாக தேடும் தந்தை,இறுதியில் பிரான்சில் இருப்பதாக அறியவந்து தேடி வரமகளையும் பேத்தியையும் ஈழத் தமிழினப்படுகொலையில் இழந்துவிட்டோம் என்றதுயர செய்தியை கேட்பதாகவரும் காட்சி தொண்டையை அடைக்கிறது.

ஈழத்தின் நடந்த கொடுமைகளால் , தங்களது குடும்பங்களை இழந்த பல்லாயிரகணக்கனவர்களின் வலியைஆழமான காட்சிகளின் முலம்முன்னிறுத்திருப்தில்இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. எழுத்தாளர்மாத்தாளை சோமுஇந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும்எழுத்தாளர் சிதம்பர பாரதிமற்றும் black town councillor Susai Benjamin போன்றவர்களும் இந்தக்காட்சியை பார்வையிடவந்திருந்தனர். நீண்ட காலமாகக் வெளி வரக் காத்திருந்த இப்படத்தை தற்போது இலங்கையரசு தடை செய்துள்ளது . தமிழ் நாட்டில்இப்படம் விரைவில் வெளியிடப்படும்.படம் வெற்றிப்பெறும் என்பது உறுதி.
ஈழன் இளங்கோ மற்றும் அவரது குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

Sydney, Australia











No comments: