மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்- 2018.


பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல்19-04-1988வரையா முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது நினைவுநாளும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய விடுதலைக்காக அயராது உழைத்து உயிர்நீத்து மாமனிதர்களாக கௌரவிக்கப்பட்டவர்களையும் இங்கு நினைவு கூரப்பட்டதுஇந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
21-04-2018 சனிக்கிழமையன்று மாலை 6.00மணிக்கு சென்யூட்ஸ் மண்டபத்தில் வானமுதம் வானொலியின் அறிவிப்பாளர்  திரு சிறீறஞ்சன் தலைமையில் அவுஸ்திரேலியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத்தேசியக் கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின.

அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை வைத்தியகலாநிதி திரு குணரட்ணம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியை தமிழ் உணர்வாளரும்தமிழ் தேசிய ஆதரவாளர் திரு செந்தில் செந்தில்நாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மூத்த  தமிழ்தேசிய செயற்பாட்டாளர்திருமதி ரஞ்சி  சோமசுந்தரம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தி வைத்தார்.
மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களது திருவுருவப்படத்திற்கு வரது துணைவியார் திருமதி ஜோகா ஜெயக்குமார்அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
மாமனிதர் சத்தியநாதன் அவர்களது திருவுருவப்படத்திற்கு திரு முகுந்தன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி லர்வணக்கம்செலுத்திவைத்தார்.
மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் ரட்ணா எலியேசர் அவர்கள்ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
மாமனிதர் குணாளன் மாஸ்ரர் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் கரிதாஸ் அவர்கள் ஈகைச்சுடரேற்றி  மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் அவர்களது திருவுருவப்படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசின்  விக்ரோறியா மாநில உறுப்பினர் திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
நாட்டுப்பற்றாளர் தருமராசா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் அனுஜன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்படத்திற்கு மருத்துவர் ராகவன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
அதனைத்தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்களது திருவுருவப்படங்களுக்கு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் மலர் வணக்கம் செலுத்தினார்கள்மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து தியாகத்தாய் அன்னை பூபதி நினைவாக வெளிவந்த “இது எங்கள் தேசம்” முழுநீளத்திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சிகளாக எடுத்து தொகுக்கப்பட்ட வீடியோக் காணொளி அகலத்திரையில் திரையிடப்பட்டது. இந்தக் காணொளிப் பதிவு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரதும் உணர்வுகளை தொட்டிருந்தது.
அடுத்து நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார்அவர் தனது உரையில் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்கள் ஈகைச்சாவடைந்து இவ்வாண்டு முப்பதாவது ஆண்டு நினைவென்பது ஒரு லைமுறையை கடந்திருக்கின்றது என்றும் அன்னை பூபதி அவர்கள் உண்ணாநோன்பிருந்த காலப்பகுதி முழுமையாக இந்தியப் படையினருக்கெதிரான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியென்பதால் அன்னை பூபதி அவர்களதுஉண்ணாநோன்பு தொடர்பான பதிவுகள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லைஎனவும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்குமுழுமையாக பக்கத்துணையாகச் செயற்-பட்டவர்களில் ஒருசிலரே தற்போது இருக்கிறார்கள்  எனவும் அவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி ஒரு வரலாற்றுப்பதிவு ஆவணமாக்குகின்ற செயற்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
ஈரோஸ் அமைப்பினரால் ஸ்தாபிக்கப்பட்ட அன்னையர் முன்னணி அமைப்பு தொடர்பாகவும்முதலில் டேவிற் ன்னம்மாமுன்னெடுத்த உண்ணாவிரதப்போராட்டம் இந்தியப்படையினரால் டுக்கப்பட்டதையும் அதன்பின்னர் அன்னை பூபதிதானாகவே முன்வந்து ண்ணாநோன்புப் போராட்டத்தை நடாத்தியதையும் அன்னை பூபதி அவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மறைந்த அருட் தந்தை சந்திரா அவர்களதும் அமரர் கிங்ஸிலி இராசநாயகம் அவர்களதும் காத்திரமான வகிபாகம் தொடர்பாகவும் திரு வசந்தன் அவர்கள் நினைவுரையில் விலாவாரியாக எடுத்து விளக்கினார்.
அருட்தந்தை சந்திரா அவர்கள் அன்னை பூபதி அவர்கள் ஈகைச்சாவடைந்து ஒருசிலமாதங்களில் இந்தியப்படைகளாலும் தேசவிரோதச் சக்திகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுவும்கிங்ஸிலி இராசநாயகம் 2004-ம்ஆண்டு இனம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்-பட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து மாமனிதர் குணாளன் மாஸ்ரரின் நினைவுகளைச் சுமந்து தயாரிக்கப்பட்ட காணொளி அகலத்திரையில் திரையிடப்பட்டது.
தொடர்ந்து நடந்துமுடிந்த தமிழர் விளையாட்டுவிழாவில் கயிறு இழுத்தல்ப்போட்டியில் வெற் றியீட்டிய வடமராட்சிக்கிழக்கு தயம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு ரவு 8.00மணியளவில் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்- 2018 நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
























No comments: