மதிப்புறு முனைவர் திருநங்கை. நர்த்தகி நடராஜ்

.
(விரைவில் அவுஸ்ரேலியா  வர இருக்கும் கலைஞர் பற்றி )
தமிழிசை நடனக்கலைஞர்

  

முத்தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் திருநங்கை  நர்த்தகி நடராஜ் அவர்கள் உலகிலேயே திருநங்கைத் தன்மை நாட்டியக் கலைஞராக விளங்கி தனிப்புகழ் பெற்று வருகின்றார். நடனமாடுவதற்கேற்ற தனது அழகிய உடல்வாகினாலும் நளினமான தன் நாட்டியத்தினாலும் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுள்ளவர் நர்த்தகி. இவர் பரத நாட்டிய உலகின் தந்தைகள் என உலகமே போற்றும் 'தஞ்சை நால்வர்களின் வழிவந்த மறைந்த நடனமேதை 'இசைப்பேரறிஞர் 'நாட்டியக்கலாநிதிதஞ்சாவூர் திரு.கே.பி.கிட்டப்பாபிள்ளை அவர்களின் நேரடி மாணவியாக 15-ஆண்டுகள் பயின்றவர். உலக அளவில் எண்ணற்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். குறிப்பாக இந்திய அரசு தொலைக்காட்சியின் TOP” GRADE ARTISTE, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர் எனத் தரவரிசைப்பட்டியலிலும் தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருதும் பெற்றுள்ள்ளார்.
 


இயற்கை நிகழ்வான தனது பால்திரிபு நிலையினையும் சமூகத்தின் எண்ணற்ற இன்னல்களையும் தனது தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியால் வென்று நடனக்கலைத்துறையில் இன்று தனக்கென்று தனியிடம் பெற்றுள்ளார். இவரது கலை மற்றும் தமிழாய்வுத் திறனையும் போற்றி தஞ்சாவூர் தந்தைப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர்பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்  திருநங்கை நமது .நர்த்தகி நடராஜ் என்பதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும்.


. உலக சமயங்கள் அனைத்திற்கும் பொதுவான பக்தியின் இலக்கணத்தை தன் நடனத்தின் வாயிலாக புதுமையாகவும் அதே சமயம் முறை வழுவாமலும் தெய்வீக நாட்டியமாக வழங்கி வருகின்றார். சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பிய இலக்கியங்களிலும் தமிழரின் கலைப்பண்பாட்டின் மரபின்; வேர்களைத்; தேடி ஆய்வு செய்து தன் நடனத்தின் வாயிலாக பதிவு செய்து வருகின்றார்.

இவரின் தனிச்சிறப்பான நாட்டியம் பற்றி...

மிகப்பழமையான தஞ்சாவூர் நடன முறைகளை முதன்மையாகக் கொண்டு வழங்கி வரும் இவரது நடனம் இந்தியா மட்டும் இன்றி உலகக் கலை ஆர்வலர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக இவர் செய்து வரும் தமிழிசை நடனத்தொண்டு சிறப்பு வாய்ந்தது.








தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள்...

உலகப்புகழ்பெற்ற பத்திரிகைகள் தொலைக்காட்சிகள்,வலைத்தளம்,நவீன ஊடகங்கள், இவரது சிறப்பு நேர்காணலும் நடன நிகழ்ச்சியும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது என்பதுவும் மிகப்பெருமைக்குரிய ஒன்றாகும்.

முக்கிய நிகழ்ச்சிகள்
-வெளிநாட்டுப் பயணங்கள்...

இந்தியா மற்றும் அமெரிக்கா,கனடா, லண்டன்,ஜப்பான்,மலேசியா,இலங்கை, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இவரது நடன நிகழ்ச்சி நடனப் பயிற்சிப்பட்டறை செயல்முறை - விளக்க நிகழ்ச்சிகள் மிகுந்த வரவேற்புடன் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.



நடனக் கலைக்கூடம்-
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களால் வருகைதரு கலைப்பேராசிரியராக அழைக்கப்படும் இவர் சென்னையில் 'வெள்ளியம்பலம் அறக்கட்டளைநடனக் கலைக்கூடம்' என்ற நாட்டியப்பள்ளியை நிறுவி இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவ - மாணவியர்களுக்கு தனது தோழி திருநங்கை. சக்தி பாஸ்கர் அவர்களின் உதவியுடன் பயிற்சி அளித்து வருகிறார். இவரது தனிச்சிறப்பான தமிழிசை நடனத்தையும் 'தஞ்சை நால்வர் மரபின் அரிய நாட்டிய வகைகளையும் நடனத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கும் சிறப்புப்பயிற்சி கொடுத்து வருகின்றார். தனக்கு கிடைக்கின்ற பெருமைகள் அனைத்தையும் தனது தன்னம்பிக்கை உழைப்பிற்கு கிடைத்த மற்றுமோர் பரிசாகக் கருதி நடன கலைக்கே தன்னை அர்பணித்து வாழ்ந்து வருகின்றார்.



முனைவர். நர்த்தகி நடராஜ்
மயிலாப்பூர் சென்னை – 600 004. இந்தியா.
தொலைபேசி : 0091 44 24660413 / 94448 44420
மின்னஞ்சல் :   narthakiandsakthi@yahoo.com
வலைத்தளம் : www.narthakinataraj.com

நர்த்தகியின் விருதுகள் பட்டங்கள்

1. 'நாயகி ஃபாவ ரத்னம்'

   ஸ்ரீமந்நடனகோபால நாயகி மந்திர் - மதுரை 1984

2. 'நாட்டிய ப்ரியா'

   பிரண்ட்ஸ் கல்சுரல் அகாடமி - சென்னை 1994

3. 'நாட்டியப் பேரொளி'

   மதுரை ஆதின மடம் 1996

4. 'நாட்டிய ஞான வாரிதி'

  ஓம் மிஷன் திருமுருக கிருபானந்த வாரியார்

  சுவாமிகள் அறக்கட்டளை  1996

5. 'கலை நன்மணி'

  தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப்பண்பாட்டுத்

  துறை தமிழ்நாடு அரசு 1996

6. 'நற்றமிழ் கூத்தர்'

   தந்தை பெரியார் தமிழிசை மன்றம் - சென்னை  2000

7. 'நாட்டியக் கலா ரத்னா'

  ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் வேத சிவாகம

  பாடசாலை ஆறக்கட்டளை  2001

8. 'நாட்டியப் பேரரசி'

  ஸ்ரீவாணி விலாச சபா - கும்பகோணம் 2001

9. 'நாட்டிய ரத்னா'

  புதிய பார்வை அமைப்பு - சங்கரன்கோயில்  2001

10. 'திருப்புகழ் நாட்டியச் செம்மணி'

   திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவு

   விருது சிறுவாபுரி முருகன் அபிNஷகக் குழு  2003



11. சிறந்த 'தமிழ் நாட்டிய நிகழ்ச்சி'க்கான விருது தமிழ்நாடு

   அரசு 6-ம் உலகத்தமிழ் இணைய நாடு 2003

12. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்

   சங்கீத நாடக அகாடமி ஃபெலோஷpப் (இளநிலை) 2003 - 2005

13. நற்றமிழ் நடனமணி

   வட சுரோலினா தமிழ்ச்சங்கம் அமெரிக்கா  2004

14. இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின்

   கலைஞர்  2005

15. இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்

   முதல் தரவரிசை பட்டியல் கலைஞர்' ( ICCR) 2007

16. தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது 2007

17. சிறந்த நடனக் கலைஞருக்கான 'தங்கப்பதக்க விருது'

   நாரதகான சபா சென்னை 2007

18. 'கலாசேவா பாரதி'

   பாரத் கலாச்சார் கலை அமைப்பு சென்னை 2007

19. 'சுவாதி திருநாள் மகாராஜா கிருதிகள்'    

   நடன ஆய்வு விருது, நாரதகான சபா சென்னை 2007

20. சிறந்த நடனக்கலைஞருக்கான பாராட்டுப் பத்திரம்

   ஓஸ்லோ நகர கலை அமைப்பு - நார்வே அரசு  2007

21. சிறந்த நடனக்கலைஞருக்கான விருது

   கனெக்டிக்கட் நகரத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கா 2004 - 2007


No comments: