.
சனிக்கிழமை 13.01.2018 அன்று காலை 9.30 மணிதொடக்கம் மதியம் 1.00 மணிவரை Parramatta
Centenary Square , (Parramatta Town hall) முன்றலில் இடம் பெற்றது தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா.
Community Migrant Resource Centre, Settlement Services
International, Marist 180, Jesuit Refugee Services ஆகிய சமூக
நிறுவனங்களின் அனுசரணையுடன்
சந்திப்போம்; வாழ்த்துவோம்
குழுவினர் - அன்பாலயம் - தமிழ்
மகளீர் அபிவிருத்திக் குழு - தமிழ் கலை
மற்றும் பண்பாட்டு கழகம் – கம்;பன் கழகம் - தமிழ்
முரசு அவுஸ்திரேலியா- அவுஸ்திரேலிய
தமிழ்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இணைந்து நடாத்திய 6 வது வருடாந்த விழாவாக இவ்விழா
இடம்பெற்றது.
இதன் இணைப்பாளராக CMRC
யின் கொன்சிலா ஜெரோம் மிகவும் சிறப்பாக பணியாற்றியிருந்தார்.
பரமட்டா சதுக்கம் எங்கும் வாழைகள் ,தோரணங்கள், கோலம் , பொங்கல் பானை என்று தமிழர்
கலாசார அடையாளங்கள் காணப்பட்டது. நாம் நிற்பது அவுஸ்திரேலியா தானா என்ற கேள்வி
எழுந்தது. வேட்டி சால்வை அணிந்த ஆண்கள், சேலை அணிந்த மாதர்கள், பட்டுப் பாவாடை, தாவணிகள் அணிந்து பெண்கள் , சிறுமிகள் என்று சிட்னியின்
இரண்டாவது பெரிய நகரத்தின் சதுக்கம் தமிழ் மணம் வீசிநின்றது.
பொங்கல் விழா நாதஸ்வர இசையுடன் ஆரம்பித்தது.
தொடர்ந்து கொன்சிலா ஜெரோம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பொங்கல் நிகழ்வை Aurelia Raman ( Manger SSP) அவர்களும் Joanna Brook ( Community Development Officer- JRS ) அவர்களும் Mamtimin Ala (Manager Asylum Seeker Services ) ஆகியோர்
தொடக்கி வைத்தார்கள்.
தொடக்க நாட்டிய நிகழ்வை CMRC யின் ஆட்டக் குழுவினர் நிகழ்த்தினார்கள்.
நிகழ்விற்கு கௌரவ Prospect MP Hugh Mcdermott அவர்களும் Dr. Geoff Lee ( Member For Paramatta ) அவர்களும் பல தமிழ் அமைப்புக்களின்
தலைவர்களும் வந்திருந்ததோடு உரையாற்றியும் பரிசில்கள் வழங்கி கௌரவித்தும் இருந்தார்கள்.
கலை நிகழ்ச்சிகள் கம்பன் கழக மாணவர்கள், Bollyfit Dance Studio மாணவர்கள் ஆகியோராலும் இசை நிகழ்வு
கலைச்சூரியன் இசைக் குழுவினராலும் மிக சிறப்பாக கொடுக்கப் பட்டது.
பரமட்டா பொங்கல் நிகழ்வு புலம் பெயர்ந்த
நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment