கேசி தமிழ் மன்றம் (விக்டோரியா), தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை ,
விக்டோரியா வாழ் தமிழர்களின் ஒன்றுகூடலாய் - ஊரெல்லாம் கூடிப் பொங்கும்
பெரும் பொங்கலாய் - கலை நிகழ்வுகள் , வணிக அங்காடிகள், சிறுவர் களியாட்டம்
என முழுக் குடும்பத்திற்கும் இதம் தரும் நாளாய் - தமிழர் எம் கலை
வளத்தை , சிறப்பான எம் இருப்பை பல்லின சமூகங்களோடு பகிர்கின்ற நிகழ்வாய்
கடந்த பல வருடங்காளாக கொண்டாடி வருகின்றது.
வருடா
வருடம் வளர்ந்து வரும் இவ்விழாவை , விக்டோரிய மாநிலத்தின் மிகவும்
குறிப்பிடத்தக்க பல்லினக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாய் மாற்றிட முனைந்து
நிற்கின்றோம். நீங்கள் இவ்விழாவிற்கு உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி
எம் முயற்சிக்கு கைகொடுக்க வேண்டுமென அன்போடு வேண்டி நிற்கின்றோம்.
ஊரெல்லாம் கூடிப் பொங்கும் பெரும் பொங்கலில் உங்கள் வீட்டுப் பானையும் சேர்ந்திட வேண்டுமானால்,
விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் உங்கள் வியாபாரமும் இடம்பெற்றிட வேண்டுமானால்,
இளவேனில் சஞ்சிகையில் உங்கள் - உங்கள் பிள்ளைகளின் ஆக்கங்கள் இடம்பெறவேண்டுமானால்,
விறுவிறுப்பான பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபெற விருப்பமானால்,
திறந்த வெளி மேடையிலே உங்கள் - உங்கள் பிள்ளைகளின் திறமைகளை அரங்கேற்ற விரும்பினால்
கு.சிவசுதன் என்பவரை தொடர்பு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment