தமிழ் சினிமா

Spyder


Spyder 

தெலுங்கு சினிமா நடிகர்கள் எல்லோரும் தற்போது தமிழ் சினிமா மார்க்கெட்டை தான் குறி வைத்துள்ளனர். ஏற்கனவே பிரபாஸ் பாகுபலியாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர, தற்போது மகேஷ் பாபு முருகதாஸ் உதவியுடன் ஸ்பைடரில் களம் இறங்கியுள்ளார். ஸ்பைடர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மகேஷ் பாபு கவர்ந்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

மகேஷ் பாபு போலிஸிற்கு தெரியாமல் ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களை தன் மக்களின் போனை ட்ராக் செய்து கண்டுப்பிடிக்கின்றார். அப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தெரிந்துகொண்டு போலிஸ் வருவதற்குள் காப்பாற்றுகின்றார்.
அந்த சமயத்தில் ஒரு பெண் இரவில் தனியாக பயந்து இருக்கிறாள் என்பதை மகேஷ்பாபு தெரிந்துகொண்டு ஒரு பெண் போலிஸை அந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.
அடுத்த நாள் அந்த இரண்டு பேரும் உடல் வெட்டப்பட்டு கொடூரமான நிலையில் இறந்துகிடக்கின்றனர். அதை தொடர்ந்து அந்த கேஸை மகேஷ் பாபு தேடிச் செல்ல மனிதர்களை கொன்று அதில் சந்தோஷம் அடையும் எஸ்.ஜே.சூர்யாவை அவர் கண்டுப்பிடிக்க, அதன்பின் இருவருக்குமிடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மகேஷ் பாபு தமிழில் அதிகாரப்பூர்வமாக எண்ட்ரீ கொடுத்துள்ளார். நடை, உடை, பாவனை என செம்ம ஸ்டைலாகவே தோன்றுகின்றார். என்ன தான் நன்றாக தமிழ் பேசினாலும் அவர் வரும் போது மட்டும் கொஞ்சம் டப்பிங் படம் போல் வருவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தின் ஒட்டுமொத்த பலமே எஸ்.ஜே.சூர்யா தான், நெகட்டிவ் கதாபாத்திரம் இனி குவியும். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ப்ளாஷ்பேக்கில் வரும் சிறுவன் மிரட்டியுள்ளான். இன்னும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.
படம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஏன் இப்படி, எதற்கு இந்த காட்சிகள் என்று தான் நகர்கின்றது. அதிலும் ராகுல் ப்ரீத் சிங் எல்லாம் எதற்கு வருகின்றார் என்றே தெரியவில்லை, அவரின் கதாபாத்திரம் மிக மோசமான சித்தரிப்பு.
என்ன தான் ஹீரோயின் போஷன் டல் என்றாலும், ஒரு காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்க பெண்களை வைத்தே மகேஷ்பாபு போடும் திட்டம் தியேட்டரில் விசில் பறப்பது உறுதி. காட்சிக்கு பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் ஹீரோயினுக்கும் கொடுங்கள் முருகதாஸ்.
படம் கதைக்குள் செல்லும் வரை தான் தடுமாறுகின்றது. எஸ்.ஜே.சூர்யாவை தேட ஆரம்பிக்கும் போது சூடுபிடித்து கிளைமேக்ஸ் வரை நன்றாக சென்று, கிளைமேக்ஸில் தடுமாறி மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை சேர்த்தது போன்ற உணர்வு.
ஹாரிஸ் இசையில் பாடல்கள் எல்லாம் பொறுமையை சோதிக்கின்றது. பாடலில் விட்டதை பின்னணி இசையில் மிரட்டி விட்டார், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்தில் கூடுதல் பலம்.

க்ளாப்ஸ்

கதைக்களம், எஸ்.ஜே.சூர்யாவிற்கான கதாபாத்திரம் மேலும் அதற்கான விளக்கமும்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு.
இரண்டாம் பாதியில் பெண்களை வைத்துக்கொண்டு மகேஷ்பாபு செய்யும் ஸ்பை வேலை.

பல்ப்ஸ்

ராகுல் ப்ரீத் சிங் வரும் அனைத்து காட்சிகளும்.
நன்றாக செல்லும் படத்தில் தேவையில்லாமல் வரும் பாடல்கள். CG படத்திற்கு செட் ஆகவே இல்லை.
மொத்தத்தில் மகேஷ் பாபுவிற்கு தமிழில் ஸ்பைடர் நல்ல எண்ட்ரீ என்றாலும், முருகதாஸிற்கான களமாக இந்த ஸ்பைடர் இல்லை.

நன்றி  CineUlagam

No comments: