12/10/2017 அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார்.
மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி