மகளிர் மட்டும்
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் படங்கள் மிக குறைவு. அந்த வகையில் தற்போது நயன்தாரா, அனுஷ்கா,
த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தால்
மட்டுமே நடிக்கின்றனர். அந்த வரிசையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க
வந்த ஜோதிகா கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும்
தான் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். அப்படி அவர் நடிப்பில் குற்றம் கடிதல்
என்ற தரமான படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம்
தான் மகளிர் மட்டும், இதிலும் ஜோதிகா ஜெயித்தாரா? பார்ப்போம்.
கதைக்களம்
புரட்சி,
முற்போக்கு கொள்கையுடன் 21st சென்ஜுரி மார்டன் பெண்ணாக ஜோதிகா. இன்னும்
சில நாட்களில் திருமணம் ஆக போகும் நிலையில் டாக்குமெண்ட்ரீ எடுத்து தன்
பொழுதை கழிக்கின்றார்.
அப்போது தன் வருங்கால மாமியார் ஊர்வசி தனியாக இருப்பதால்
அவருக்கு துணையாக ஜோதிகா அவர் வீட்டிற்கு செல்ல, அங்கு ஊர்வசி தன்
பள்ளிக்காலங்களில் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணனுடன் இருந்த தன் நட்பை
பற்றி ஜோதிகாவிடம் சொல்கின்றார்.
பள்ளியில் நாங்கள் செய்த ஒரு சில
தவறுகளால் தான் பிரிந்தோம் என ஊர்வசி சொல்ல, ஜோதிகா நீங்கள் எல்லோரும்
மறுபடியும் சந்தித்தால் எப்படியிருக்கும், இல்லை சந்திக்கிறீர்கள் என
மூவரையும் அழைத்து ஒரு டிரிப் அடிக்க, அதன் பின் பெண்களின் வாழ்க்கை என்ன
என்பதை மிகவும் யதார்த்தமாகவும் எமோஷ்னலாகவும் பிரம்மா ஒரு அருமையான
படைப்பை கொடுத்துள்ளார்.
படத்தை பற்றிய அலசல்
என்ன தான்
ஜோதிகாவை முன்நிறுத்தி இந்த படத்தை ப்ரோமோஷன் செய்தாலும், படம் முழுவதும்
சிக்ஸர் அடித்து தாங்கி செல்வது ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா தான்.
அதிலும் பள்ளிக்காலங்களில் இவர்களை காட்டும் போது மூன்று இளம் பெண்கள்
வருகின்றனர், அப்படியே இவர்களை போலவே உள்ளனர்.
ஊர்வசி தயவு செய்து
இவரை தமிழ் சினிமா தவறவிடக்கூடாது என்பதே எல்லோரின் விருப்பமும். ஒவ்வொரு
காட்சியிலும் தான் பேசும் வசனங்களிலேயே சிரிக்க வைக்கின்றார், அதேநேரம்
பிரிந்த தன் தோழிகளிடம் போனில் பேசும் போது அழுத குரலோடு கொஞ்சி பேசுவது
சூப்பர் மேம்.
ஊர்வசியை அடுத்து படத்தில் செம்ம ஸ்கோர் செய்வது
சரண்யா தான், குடிக்கார கணவன் லிவிங்ஸ்டனை மிரட்டுவது, என்ன தான் தன்னை
திட்டினாலும் படுத்த படுக்கையாக இருக்கும் மாமியாரின் கழிவை சுத்தம்
செய்வது வரை நடுத்தர பெண்களை அப்படியே கண்முன் நிறுத்துகின்றார். அதிலும்
போனில் தன் தோழிகளிடம் சந்தோஷமாக பேசி போனை கட் செய்த அடுத்த நொடி கணவனிடம்
கோபமாக முகத்தை காட்டுவது என க்ளாப்ஸ் அள்ளுகின்றார்.
லிவிங்ஸ்டன்
ஒன்று இரண்டு காட்சியில் வந்தாலும் போதையில் அவர் பாடும் பன்னீரைத் தூவும்
மழை பாடல் படம் முடிந்தும் நம்மை முனுமுனுக்க வைக்கின்றது. பானுப்பிரியா வட
இந்தியாவில் பெண்களையே மதிக்காத கணவன், மகனிடம் விதியே என வாழ்கின்றார்.
அதிலும் ஊர்வசியின் மகனாக வரும் ‘மெட்ராஸ்’ புகழ் பாவேல் முதலில் கோபமான
தன் அம்மாவை மதிக்காத முரட்டு இளைஞனாக வர, பிறகு கிளைமேக்ஸில் கண்கலங்கும்
இடம், நல்ல எதிர்காலம் வெயிட்டிங் சார்.
படத்தில் ஊர்வசி,
பானுப்பிரியா, சரண்யா தன் முதல் காதலை கூறும் போது அதை படமாக்கிய விதம்,
ஆணவக்கொலை, பெண்களை ஏமாற்றுபவன், பயந்து ஓடும் இளைஞன் என மூன்று
காதல்களையும் பாடல்களாக மட்டுமின்றி ஒரு குறும்படம் போல் காட்டியவிதம்
ரசிக்க வைக்கின்றது. அதேபோல் ஒரு இடத்தில் சரண்யா, பானுப்பிரியா
குடித்துவிட்டு தங்கள் கவலைகளை சொல்லி கணவர்களை திட்டும் இடம் சிரிக்கவும்
வைத்து ஆண் வர்க்கத்தையே சிந்திக்க வைக்கின்றது.
என்ன படத்தில்
ஜோதிகா பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே என்று கேட்காதீர்கள், இப்படி ஒரு
படத்தில் இவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தும் சீனியர்களுக்கு இடம் கொடுத்து
நடித்ததற்காகவே பாராட்டுக்கள். மணிகண்டனின் ஒளிப்பதிவு வட இந்தியாவின் பல
பகுதிகளை அத்தனை அழகாக கண்முன் காட்டுகின்றது, நாமே டூர் சென்ற அனுபவம்.
ஜிப்ரான் தான் இசையா? ஒரு நிமிடம் ரகுமானா? என ஆச்சரியப்பட வைக்கின்றது.
க்ளாப்ஸ்
நடிகர்,
நடிககைகளின் பங்களிப்பு, எல்லோருமே சீனியர் என்பதால் செம்ம ஸ்கோர்
செய்துள்ளனர், இளம் வயதில் வரும் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா
கதாபாத்திரங்கள் கூட மனதை கவர்கின்றன.
ஏதோ நாட்டிற்கு மெசெஜ் சொல்கின்றேன் என கருத்துக்களை வலுக்கட்டாயமாக திணிக்காமல் கதையோடு சொன்ன விதம்.
இசை, ஒளிப்பதிவு டெக்னிக்கல் விஷயங்கள்.
‘நீ
தாஜ்மஹால மும்தாஜுக்காக கட்டினதா பாக்குற, ஆனா 14 குழந்தை பெத்து இறந்த
மனைவிக்கு கட்டிய கல்லறை தான் இந்த தாஜ்மஹால்’ போன்ற வசனங்கள் கவர்கின்றது.
பல்ப்ஸ்
பானுப்பிரியாவை
பேஸ்புக்கில் கண்டுப்பிடிப்பது போல் காட்டுகிறார்கள். ஆனால், அவர்
இருக்கும் நிலையில் மொபைல் கூட ஆன் செய்ய முடியாது, அப்படியிருக்க அந்த
இடத்தில் மட்டும் தான் கொஞ்சம் லாஜிக் மீறல் போல் இருந்தது.
மொத்தத்தில் மகளிர் மட்டும் இல்லை ஆண்களும் பார்த்து பெண்களை கொண்டாடப்பட வேண்டிய படம்.
Cast:
Music:
நன்றி CineUlagam
No comments:
Post a Comment