மெல்பனில்: முருகபூபதியின் "சொல்லவேண்டிய கதைகள்" நூல் வெளியீடும் 'ரஸஞானி' ஆவணப்படம் திரையிடலும்
-->
                                        இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும்  முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்  30 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு  அவுஸ்திரேலியா  மெல்பனில்,   பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும்.
சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும்.
இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஸஞானி ஆவணப்படம் - எண்ணமும் எழுத்தும் : எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி. ஒளி, ஒலிப்பதிவு,  தயாரிப்பு:  கலை, இலக்கிய ஆர்வலர் சண்முகம்  கிருஷ்ணமூர்த்தி. பின்னணிக்குரல் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் நவரத்தினம் அல்லமதேவன்.
முருகபூபதி வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பகுதியில் தொடர்ந்து பத்திக்கட்டுரைகள் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
திருமதிகள் ஜெஸி ரவீந்திரன், சாந்தநாயகி  கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி,  சித்ரா லயனல் போப்பகே,  யாழ். இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையின் தலைவர் 'லயன்' திரு.' லயன்'  சக்தி கிருஷ்ணபிள்ளை,   மூத்த கல்விமான்  யூசுப் முஸ்தபா,  கலாநிதி மு. ஶ்ரீ கௌரிசங்கர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைப்பர்.

இலங்கையின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர்க்கனியின்  மகள் மருத்துவ கலாநிதி (திருமதி) வஜ்னா ரஃபீக்,  தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழா,   செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.  செல்வி ஹரினி ஶ்ரீதரன் தமிழ்வாழ்த்துப்பாடுவார்.
திருமதிகள் கலாதேவி பாலசண்முகன், ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார்,  கலாநிதி  கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்துவர்.
நூலாசிரியர் லெ. முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.
இவ்விழவை  திருமதி மாலதி முருகபூபதி, திரு. செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒழுங்குசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியின்  82  ஆவது வெளியீடாக சொல்ல வேண்டிய கதைகள் பத்திக்கட்டுரைகளின் தொகுப்பு வெளியாகின்றது.
 கலை,இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
----0---
No comments: