உலகச் செய்திகள்


புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் : இந்தியாவின் 71 வது சுதந்தர தின விழாவில் மோடி

அமெ­ரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை.!

ஸ்பெயினில் தீவிரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 50 பேர் படுகாயம் 

4 வரு­டங்­க­ளுக்கு மௌன­மாகும் பிக் பென் மணிக்­கூடு

புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் : இந்தியாவின் 71 வது சுதந்தர தின விழாவில் மோடி

இந்தியாவின் 71 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.
15/08/2017 புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் சுதந்தர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
71வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது,
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச வைத்தியசாலையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.
சவால்களை கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. இயற்கை பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலை சந்திப்பது வேதனை. ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள்.
புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது.
தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மற்றும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். நன்றி வீரகேசரி 


 அமெ­ரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை.!

17/08/2017 அமெ­ரிக்கா ஈரா­னுக்கு எதி­ராக மேலும் புதிய தடை­களை விதிக்­கு­மானால்    அந்­நாடு தனது அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டத்தை ஒரு சில மணித்­தி­யா­லங்­களில் ஆரம்­பிக்கும் என ஈரா­னிய  ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி  எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.
மேற்­படி அணு சக்தி நிகழ்ச்சித் திட்­ட­மா­னது  2015  ஆம் ஆண்டில்  உலக அதி­கார சக்­தி­க­ளுடன்  செய்த உடன்­ப­டிக்­கை­யை­யடுத்து  ஈரான் தனது அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டத்தைக் கைவிட்ட போதி­ருந்­ததை  விடவும்  மிகவும் சக்தி வாய்ந்­த­தாக இருக்கும் என  அவர் தெரி­வித்தார்.
ஈரானின் ஏவு­கணை நிகழ்ச்சித் திட் ­டத்தை இலக்­கு­வைத்து அமெ­ரிக்­கா வால் விதிக்­கப்­பட்­டுள்ள ஒரு­த­லைப்­பட்­ச­மான  தடைகள் அந்த உடன்­ப­டிக்­கையை மீறு­வ­தா­க­வுள்­ள­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார்.
இந்த அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில்  வழி­மொ­ழி­யப்­பட்ட தீர்­மா­ன­மா­னது  ஈரான் அணு ஆயு­தங்­களை ஏந்திச் செல்­லக்­கூ­டிய வல்­ல­மையைக் கொண்ட  கண்டம் விட்டு கண்டம்  பய­ணிக்கக் கூடிய ஏவு­க­ணை­க­ளுடன் தொடர்­பு­பட்ட எந்­த­வொரு செயற்­பாட்­டையும் மேற்­கொள்ளக் கூடாது என  அழைப்பு விடுக்­கி­றது. ஆனால் தன்னால் ஏவிப் பரி­சோ­திக்­கப்­பட்ட ஏவு­க­ணைகள்  அணு ஆயு­தங்­களை ஏந்திச் செல்லக் கூடிய வல்­ல­மையைக்  கொண்­ட­வை­யல்ல எனவும் அந்தப் பரி­சோ­த­னைகள் முற்­றிலும் அமைதி நோக்­கி­லா­னவை எனவும் ஈரான் வாதிட்டு வரு­கி­றது.
அதே­ச­மயம் அமெ­ரிக்க ஜனா­திபதி டொனால்ட் ட்ரம்ப்  அணுசக்தி உடன் படிக்கையிலிருந்து வாபஸ் பெறப் போவதாக திரும்பத் திரும்ப அச்சுறுத் தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.  நன்றி வீரகேசரி

ஸ்பெயினில் தீவிரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 50 பேர் படுகாயம்
18/08/2017 ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேனால் மோதி தாக்குதல் மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் முக்கிய சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ்.

இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், அந்நாட்டு மக்களும் குவிந்திருப்பது வழக்கம்.

மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது.

கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட வேனின் சாரதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் 1989 ஆண்டு மொரோக்கோவில் பிறந்துள்ளதாகவும் குறித்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடற்கரையில் பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை தரவேற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, லாஸ் ராம்பலாஸ் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் எவரும் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என்று பெலிஸார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி4 வரு­டங்­க­ளுக்கு மௌன­மாகும் பிக் பென் மணிக்­கூடு

16/08/2017 மத்­திய லண்­ட­னி­லுள்ள 150  வரு­டங் ­க­ள் பழை­மை­யான  பிக் பென் மணிக்­கூட்டுக் கோபு­ரத்தில் மேற்­கொள்­ளப்­படும்  புதுப்­பித்தல் வேலை­க­ளுக்­காக  அதி­லுள்ள மணிக்­கூடு  எதிர்­வரும் 4  வருட காலத்­திற்கு  ஒலிக்­காது மௌன­மாக இருக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 2012  ஆம் ஆண்டில் எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரைக் கௌர­வப்­ப­டுத்தும் வகையில் எலி­ஸபெத் கோபுரம் என மீள பெயர் சூட்­டப்­பட்­டுள்ள  இந்த மணிக்­கூட்டுக் கோபு­ர­மா­னது 1859  ஆம்  ஆண்­டி­லி­ருந்து  அநேகமாக ஒவ்­வொரு மணித்­தி­யாலத்­துக்கும்  ஒலித்து வரு­கி­றது.
 இந்தக் கோபு­ரத்­தி­லான திருத்த வேலைகளில் ஈடுபடும் பணியாளர்கள் அந்தக் கோபுரத்திலுள்ள மணிக்கூட்டின்  மணி ஒலிப்பதால் தமது கேட்கும் திறன் பாதிக்கப்படலாம் என  அச்சத்தை வெளியிட்டதையடுத்தே அந்தக் கோபுர மணிக்கூட்டை மௌனமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில் இந்த மணிக்கூடு மெளனமாக்கப்படுவதற்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த மணிக்கூட்டு கோபுரத்திலான புதுப்பித்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 2021  ஆம் ஆண்டு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி


No comments: