தமிழ் சினிமா

நிபுணன்



பெரும் நடிகரின் படங்களுக்கு எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இருக்கும் முக்கிய நட்சத்திரமான அர்ஜுன் அவர்களின் நிபுணன் வந்துள்ளது. நினைத்த படி வந்துள்ளதா இந்த நிபுணன், அர்ஜுன் மீண்டும் ஆக்‌ஷன் கிங் என நிரூபித்தாரா என பார்ப்போம்.

கதைக்களம்

அர்ஜுன் ஒரு உயர் போலிஸ் அதிகாரி. இவருக்கு ஒரு குடும்பம் இருப்பது போல, காவல்துறையிலும் இவருக்கு ஒரு குடும்பமாக வரலட்சுமியும், பிரசன்னாவும் இருக்கிறார்கள்.
அர்ஜூனுக்கு ஒரு டாஸ்க் மேலிடத்தில் இருந்து வருகிறது. அதில் மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும் ஐவரை பிடிக்க வேண்டும் என்ற கட்டளை.
அதற்குள் பல விசயங்களுக்காக போராடும் சமூக ஆர்வலர் ஒருவர் கொடூரமாக கொலைசெய்யப்படுகிறார். இங்கு தான் கதை சூடுபிடிக்க தொடங்குகிறது.
வித்தியாசமான பிளான், மறைமுக எச்சரிக்கை, சீக்ரட் கோட் வேர்ட்ஸ் என பல நுணுக்கங்களை தடயமாக விட்டு செல்கிறான் அந்த கிரிமினல்.
நடந்ததை விசாரிக்க தொடங்கியதுமே அடுத்தடுத்து டாக்டர், வக்கீல் என இரண்டு கொலைகள். விசாரணை வலுக்க அடுத்தது யார் என்ற துப்பு கிடைக்கிறது.
முக்கிய கட்டத்தில் ஒரு பெரும் டிவிஸ்ட். அர்ஜூனுக்கு பெரும் ஆபத்து. பலியாகப்போகும் அந்த கடைசி நபர் யார். அர்ஜூன் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டாரா? சீரியல் கொலையாளி யார்? பிடிபட்டானா? அந்த நால்வரை கொல்வதன் பின்னணி உண்மை என்ன என்பது தான் முழுக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை ஏற்கனவே போலிஸ் அதிகாரியாக பார்த்திருப்போம். அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் அதே வேகத்தை இந்த ரோலில் காட்டியுள்ளார். குறிப்பாக அவருக்கு இது 150 வது படம்.
வரலட்சுமி சொல்லவே வேண்டாம். தன் திறமையை நிரூபித்து ஜாம்பவான்களிடம் பாராட்டை வாங்கியவர். தற்போது இந்த படத்தில் ஒரு துப்பறியும் போலிஸாக அவர் களமிறங்கியுள்ளார். சீஃப் சீஃப் என அர்ஜீனை சுற்றும் இவருக்கும் ஒரு எதிர்பாராத ஆபத்து.
அடுத்தது பிரசன்னா. இவரை ஹீரோ, வில்லன் என பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் சற்று வித்தியாசமான ஒரு ரோல். தன் திறமையை நிரூபிக்க ஒரு சான்ஸ். இவரும் தன் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
வைபவ் அர்ஜூனுக்கு தம்பியாக வந்தாலும் சிறு சிறு ரோல்கள் மட்டுமே. தனக்கே உரிய இயல்பான ஸ்டைலை வைபவ் விடவில்லை.
சுமன், சுஹாசினி என ஜோடியாக இருவரும் ஒரு முக்கிய காட்சியில் வருகிறார்கள். எதிர்பாராத ஒரு இடத்தில் நடிகர் கிருஷ்ணாவும் வந்துபோகிறார் இல்லை இல்லை, இறங்கி விளையாடியுள்ளார் என்றே சொல்லலாம்.
ஒரு கிரைம் ஆக்‌ஷன் ஸ்டோரிக்கு உரிய தீம் மியூசிக்

கிளாப்ஸ்

ஆக்‌ஷன் கிங் தான் அனைத்து இடங்களிலும் முழு ஸ்கோர் அள்ளுகிறார். அவருக்கே உரிய ஸ்டைல் சற்றும் குறையவில்லை.
தீம் மியூசிச், பேக்ரவுண்ட் பிளே, ஹைப் சீக்குவன்ஸ் என அனைத்திலும் பொருந்துமாறு இசையமைத்துள்ளார் நவீன்.
இயக்குனர் அருண் வைத்யநாதனின் இரண்டு வருட முயற்சியை பாராட்டலாம். கதையாக்கம், காட்சிகள் நகர்த்தும் விதம் என படம் முழுக்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.

பல்பஸ்

எல்லா விசயங்களும் சரியாக அமைந்து விட்டால் போதாது. ஏதாவது ஒரு குறை இருக்க வேண்டும் தானே. ஒரு சில இடத்தில் சிறியதாய் கண்ணிற்கு தென்படும்.
வரலட்சுமி டப்பிங் பேசுவதில் கொஞ்சம் நிறுத்தி பேசலாம் என தோன்றுகிறது.
பிரசன்னா, வரலட்சுமி இரு திறமைசாலிகளுக்கு இன்னும் சவால் வைத்திருக்கலாம்.
சூப்பர் ஸ்டாரே படத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக ஹிட் என கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். மொத்தத்தில் நிபுணன் நின்று விளையாடுகிறார். அனைவரும் பார்க்கலாம்.
நன்றி  CineUlagam



No comments: