இலங்கைச் செய்திகள்

இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா

பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு

கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!

கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று

அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு







இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா

17/08/2017 ஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொட்ரிக் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாலின சமத்துவத்தை இலங்கையில் ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது அவர், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்து பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அதேசமயத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் சந்தித்து கலந்துரையாடி, இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் தனது வரவேற்புரையில்,
“அவுஸ்திரேலியாவானது பெண்களுக்கு தலைமைத்துவ பொறுப்புக்களையும் பொருளாதர தரத்தில் அவர்களை மேம்படுத்தவும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கவும் முழுமையாக ஈடுப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான முதலீடுகல் பெண்கள் மூலம் அரச மற்றும் தனியார் பொருளாதாரத் துறை வளர்ச்சியடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய எலிசபத் பிரொட்ரிக்,
“இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் பெண்களின் வகிபங்கு அவர்களது சுய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் ஈடுபாடு போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள தான் மிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி












பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு

16/08/2017 பாகிஸ்தானுக்கான இலங்கையிலுள்ள  உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானுடைய 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுமார் 2300 வருட தொடர்பை கொண்டாடும் வகையில் “என் என்டரிங் ஃப்ரென்டஸிப் : ஸ்ரீ லங்கா என்ட் பாகிஸ்தான்”  ( An Enduring Friendship; Sri Lanka and Pakistan ) எனும் புத்தகத்தை  நேற்று வெளியிட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸர்ப்ராஸ் அஹமட் கான் ஸிப்ரா,
பாகிஸ்தான் மற்றும் இலங்கையானது சமுத்திர தொடர்புடையது எனவும் இத் தொடர்பானது ஏறத்தாழ 2300 வருட பழைமையானதெனவும் 1948 இல் பாகிஸ்தான் சுதந்திரமடைந்ததன் பின்னர் அப்போதைய இலங்கை பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் பாகிஸ்தானுக்கான விஜயத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
மேலும் புத்தகத்தின் ஆசிரியரான அர்ஷாட் காஸிம் தனது உரையில்,
இப் புத்தகமானது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு, இராணுவ ஆக்கிரமிப்பு தலையீடு இல்லாத சுமுகமான உறவு முறை மற்றும் ஆரம்பகால தொடர்பு அது வளர்ச்சி அடைந்த விதம் என பல தகவல்களை சுமந்துள்ளது என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரியவும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பாண்டாரநாயக்க குமாரதுங்க,  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரிஷாட் பதியுதீன், தயா கமகே, எ.எச்.எம் பௌஷி, எம.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ், அனோமா கமகே, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு புத்தகத்தின் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள் தேசிய கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டமையானது அனைவரினதும் பாராட்டைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி











 கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!


Image result for கடுமையான வரட்சி

16/08/2017 நாட்டில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 19 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான வரட்­சி­யினால் மூன்று இலட்­சத்து  36 ஆயி­ரத்து 487 குடும்­பங்­களில் வாழும் 12 இலட்­சத்து 42 ஆயி­ரத்து 140 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகா­ணங்­களில் தற்­போது தொடர்ச்­சி­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தாலும் தொடர்ந்தும் வரட்­சி­யான சூழல் நீடிக்­கின்­றது. வரட்சி கார­ண­மாக சுமார் ஐந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் குடி­நீ­ரின்றி அவ­தி­யு­று­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
நாட்டில் தொடரும் வரட்­சி­யினால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பு தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.
அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
வட மாகா­ணத்தில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 45 ஆயி­ரத்து 802  குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து மூவா­யி­ரத்து 183 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  யாழ்ப்­பாண மாவட்­டத்தில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 28 ஆயி­ரத்தி 652 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
 கிழக்கு மாகா­ணத்தில் 46 ஆயி­ரத்து 841 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 58 ஆயி­ரத்து 841 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். குறித்த மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 35 ஆயி­ரத்து 951 பேரும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 65ஆயி­ரத்தி 642 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 57ஆயி­ரத்து 248 பேரும் கடும் பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.
 வட மேல் மாகா­ணத்தில் ஒரு இலட்­சத்து 6 ஆயி­ரத்து 163 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 166 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். குறித்த மாகா­ணத்தின் குரு­நா­கல் மாவட்­டத்தில் மாத்­திரம் 2 இலட்­சத்து 703 பேரும், புத்­தளம் மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்து 64 ஆயி­ரத்து 463 பேரும் கடு­மை­யான பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.
இதனை தவிர அம்­பாந்­தோட்டை, இரத்­தி­ன­புரி ,பதுளை மொன­ரா­கலை, கண்டி, கம்­பஹா, மாத்­தளை போன்ற மாவட்­டங்­க­ளிலும் வரட்­சி­யால் மக்கள் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகா­ணங்­களில் தற்­போது தொடர்ச்­சி­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தாலும் தொடர்ந்தும் வரட்­சி­யான சூழல் நீடிக்­கின்­றது. வரட்சி கார­ண­மாக சுமார் ஐந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் குடி­நீ­ரின்றி அவ­தி­யு­று­கின்­றனர் எனவும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை கடு­மை­யான வரட்­சிக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் மாவட்­டங்­களை சேர்ந்த மக்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் தொடர்ந்தும் குடிநீர் உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருட்­களை நிவா­ர­ண­மாக வழங்கி வரு­கின்­றது.  
அத்­துடன் வரட்சி நீடிக்­கின்­ற­மை­யினால் பிர­தான கு­ளங்கள் பலவற்றில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. அத்துடன் பெரும்போகம் மற்றும் சிறு போக பயிர்ச்செய்கையும் முற்றிலும் பாதிப் படைந்துள்ளது. மேலும் சரணாலயங்களில்  விலங்குகளும் பாதிப்பினை எதிர் நோக்கியுள் ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி











கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று



16/08/2017 கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் உள்ள  585 கிளிநொச்சி மாவட்ட நோயாளர்களில் அனேகமானோர் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து டெங்குநோய் தொற்றிய நிலையில் கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சைபெற்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் டெங்குநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்  சராசரியாக நாளொன்றிற்கு   டெங்குநோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில்   குறைந்தது 3 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குத்தினமும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ் நெருக்கடியான நிலையில் மாவட்டத்தின் மக்களைப் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் சிறு செய்திக் குறிப்பு ஒன்றினையும் வெளியிடுள்ளனர்.
குறித்த செய்திக் குறிப்பில்,
புகையிரத நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள் ஆகிய இடங்களை பொதுமக்கள்  பாவிக்கும்போது அவ்விடங்களில் டெங்கு நுளம்புகள் காணப்படுமாயின் அவை டெங்கினால் பாதிக்கப்பட்டநோயார்களின்  டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினை உறிஞ்சிக்கொள்ளலாம்.
இவ்வாறு  டெங்கு வைரஸின் தாக்கம்  காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம் இருந்து  டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினைக் கிளிநொச்சியில் காணப்படும் டெங்கு நுளம்புகள் உறிஞ்சுமாயின், அந்த நுளம்புகளினால் கடிக்கப்படும் அனைவரும் டெங்குநோயாளிகளாக நேரிடும். இதனால் கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளே டெங்கு காட்டுத் தீ போல அதிதீவிரமாக பரவத்தொடங்கும்.
இந்த அபாய நிலையைக் கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் நாளை மறுதினமும் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பொது இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்கள் மற்றும் பொது      அமைப்புகள் தத்தமது பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொண்டு இந்த உயிர்க்காப்புப் பணியில் ஈடுபட முன்வருமாறு வேண்டுகிறோம் என அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி















 அம்பிடிய சுமணரட்ன தேரர் தேங்காய் உடைத்து காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

15/08/2017 மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பை கண்டித்து மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்துக்கு முன்பாக அம்பிடிய சுமண ரட்ன தேரரின் தலைமையில் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்திலும் சாந்திக்கிரியையிலும் ஈடுப்பட்டனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தை சிங்கள தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஆரம்ப கட்டமாக சமய வழிப்பாட்டினை தொடர்ந்து தற்போதய காணி அபகரிப்பு தொடர்பாக சிறுபாண்மை மக்களின் உரிமைகளும் காணிகளும் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 
பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஈடுப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அபகரிக்கப்பட்டுள்ள மிராவோடை பாடசாலை மைதானத்திற்கு ஏற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களும் சென்றனர்.

நன்றி வீரகேசரி










வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு



15/08/2017 வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.
எனவே, இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்ட இடத்திற்கு விரைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் தியாகராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள்.
இவ் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிகமாக மூவரை மாதாந்தம் 7500 ரூபா சம்பளம் அடிப்படையில் நியமிப்பதாகவும் உங்கள் கிராமத்திலிருந்து மூவரை தருமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த தெரிவித்தார். அதனையடுத்து பொதுமக்கள் புகையிரத்திற்கு முன்னாள் நின்று அகன்று புகையிரதம் செல்வதற்கு  வழி விட்டனர்.
இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புகையிரம் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விரைவில் இவ்விடத்திற்கு பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்காவிட்டால் போராட்டம் தொடருமென பொதுமக்கள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி







No comments: