முருகபூபதியின் புதிய நூல்வெளியீடு - சொல்லவேண்டிய கதைகள்

.
இலங்கை ' ஜீவநதி'


ஜீவநதியின்  82  ஆவது வெளியீடாக எழுத்தாளர் லெ.முருகபூபதியின் ‘சொல்ல வேண்டிய கதைகள்’ பத்திக்கட்டுரைகளின் தொகுப்பு வெளியாகின்றது.
 இந்த பத்திக் கட்டுரைகள் 2013 தை மாத ஜீவநதியில் வெளிவரத் தொடங்கி ஜீவநதியின் 20 இதழ்களில் தொடராக வெளியானவை. இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
முருகபூபதி  தனது வாழ்வில் சந்தித்த மனிதர்கள், தன் வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகள், மனதில் பதிந்த நிகழ்வுகள், சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவாரஸ்யமான மொழியில் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம் தந்திருக்கின்றார். ஒவ்வொரு பத்தியில் இருந்தும் மக்களுக்கான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
முருகபூபதி  நீண்டகால இலக்கிய அனுபவம் மிக்க பல்துறை ஆற்றல் மிக்கவர். பல்வேறு இலக்கியகாரர்களுடன் தொடர்பில் இருப்பவர்.  தொடர்ச்சியான எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் உன்னத படைப்பாளி.  பல மாநாடுகளை நடத்தியர். இலக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்து வருபர். பல்வேறு இலக்கிய பரீட்சயமிக்க இவர் பல நூல்களை வெளியிட்டு வாசகர் மனதை கவர்ந்தவர். ஜீவநதியுடன் நீண்ட காலமாக தொடர்புடையவர். முருகபூபதி அவர்களின் இந்தத்  தொகுப்பும் வாசகர்களிடையே வரவேற்பை பெறும் என்ற எண்ணத்துடன், மகிழ்வுடன் இந்த தொகுப்பை வெளியிட்டு வைக்கின்றோம்.
க.பரணீதரன்
ஆசிரியர் ஜீவநதி
jeevanathy@yahoo.com

No comments: