இலங்கைச் செய்திகள்


மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

 புங்குடுதீவு வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கில் தீடீர் திருப்பம்

வடமாகாண சபையினை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள் !

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன்!

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மோடி

பிரதமர் மோடி - மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள்  சந்திப்பு  


மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

11/05/2017 சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) விசேட இராப்போசன விருந்து ஒன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் அவர்களை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.  நன்றி வீரகேசரி 










மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

11/05/2017 ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று இரவு விருந்­து­ப­சா­ர­மொன்றை அளிக்­க­வுள்ளார்.
ஜனா­தி­பதி மாளி­கையில் நடை­பெறும் இந்த இர­வு­விருந்­து­ப­சா­ர­மா­னது இரவு 8.30 மணியளவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த விருந்­து­ப­சா­ரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்­கையின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன்,  அமைச்­சர்கள், மாகாண முத­ல­மைச்­சர்கள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த விருந்துபசாரத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்­ளிட்ட முக்­கிய அதி­கா­ரி­களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விருந்­து­ப­சா­ரத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர்கள் பங்­கேற்க மட்­டார்கள் என அறி­விப்­பட்­டுள்­ளது. நாளைய தினம் மலை­ய­கத்­திற்­கான வர­லாற்று விஜ­யத்தை இந்­தியப் பிர­தமர் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்­கு­ரிய ஏற்­பா­டு­களை கவ­னித்­துக்­கொள்­வ­தற்­காக அட்­டனில் அவர்கள் முகா­மிட்­டி­ருப்­பதால் அக்­கு­ழு­வினர் இதில் பங்­கேற்­ற­மாட்­டார்கள் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 
இதே­வேளை நாளை­ய­தினம் அட்டன் செல்லும் இந்­தி­யப்­பி­ர­தமர் மோடி அங்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யி­ன­ரையும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸையும் தனித்­த­னி­யாக டிக்­கோ­யாவில் சந்­திக்­க­வுள்ளார்.
அந்­நி­கழ்­வு­களை பூர்த்தி செய்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பும் இந்தியப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியை எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினரை கட்­டு­ந­யாக்க விமான நிலை­யத்தில் விசேட பிர­மு­கர்­க­ளுக்­கான கேட்போர் கூடத்தில் மாலை 5 மணி­ய­ளவில் சந்திக்க­வுள்­ளனர். 
இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களான மாவை.சோதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்ந்திரன். செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.   நன்றி வீரகேசரி 













புங்குடுதீவு வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கில் தீடீர் திருப்பம்

10/05/2017 யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளது.
குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த வழக்கின் முதல் ஒன்பது சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பான வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் கடந்தவாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த வழக்கின் குற்றப் பத்திரத்தை இம் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உறுதியளித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி இவ் வழக்கை ரயலட்பார் முறையிலான மூன்று சிங்களம் பேசும் பெரும்பான்மை இன நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யும் வகையில் குறித்த மூன்று நீதிபதிகளையும் பிரதம நீதியரசர  நியமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 











வடமாகாண சபையினை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள் !

09/05/2017 வடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகத்தின் வாயில்களை மறித்து முற்றுகைப் போராட்டத்தினை ஆரம்பித்த வேலையற்ற பட்டதாரிகள், உறுப்பினர்களை மாகாண சபைக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
கடந்த 72 நாட்களாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக நியமனம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். அந்த நிலையில், கடந்த நாட்களாக பல்வேறு தரப்பினர்களுடனும் தமது வேலைவாய்ப்பு குறித்து பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த போதும், இதுவரையில் வேலைவாய்ப்புக் குறித்து எவரும் உறுதியான பதில் அளிக்கவில்லை. 
விரக்தியடைந்து இன்று  வடமாகாண சபையின் முன்பாக காலை ஒன்று கூடிய பட்டதாரிகள் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகத்தின் இரு வாயில்களை மூடி போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.
போராட்டத்தின் போது, சபைக்கு வருகை தந்த முதலமைச்சர் உட்பட ஏனைய உறுப்பினர்களை அவைக்கு செல்ல விடாது தடுத்த போது, முதலமைச்சர் பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.
நேற்று முன்தினம் ஜனாபதி மற்றும் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, வேலை வாய்ப்பு குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதனால், அந்த சந்திப்பின் பின்னர் இறுதியான முடிவுகளை தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறினார்.
முதலமைச்சரின் கருத்தினை ஏற்க மறுத்த பட்டதாரிகள் நடைபெறவுள்ள (மாகாண சபை அமர்வின் போது,) இன்றைய தினமே, தமக்கான இறுதியான முடிவினை தெரிவிக்குமாறு கேட்டு முதலமைச்சரை மாகாண சபைக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தினார்கள்.
முதலமைச்சர் அங்கிருந்து சென்றதும், பட்டதாரிகள் ஏனைய உறுப்பினர்களை உள்ளே செல்லவிடாது தடுத்ததுடன், தமது போராட்டத்தினை தொடர்ந்தும் மாகாண சபையின் முன்பாக முன்னெடுத்தனர்.
நன்றி வீரகேசரி 












மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன்!

09/05/2017 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நேற்று (08) கண்டி ஆளுநர் அலுவலகத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு, முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனுசா சிவராஜா அவர்களின் பின் கடந்த அரசாங்கத்தினால் இல்லாது ஆக்கப்பட்டது. அதனால் தமிழ் மொழிமூல பாடசாலைகள் அபிவிருத்திக்காக ஒதுக்கி வந்த நிதி ஒதுக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் இக்கல்வி அமைச்சினை வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டது.
அதனை தொடர்ந்து கல்விக்கு பொறுப்பாக மத்திய மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் முழுமையாக அந்த அமைச்சு வழங்கப்படவில்லை.  இதனால் தமிழ் மொழிமூல பாடசாலைகளின் பிரச்சினை தீர்ப்பதில் சிக்கல் நிலையே நீடித்திருந்தன.
அதனை தொடர்ந்தே மத்திய மாகாண கல்வி அமைச்சு மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் அமைச்சரான மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 













தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மோடி

13/05/2017 நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளு க்கு காலம் கடத்தாது விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையி லான தேசிய அரசாங்கத்திடம் அழுத்தமாக கூறியுள்ளேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கமுடியாது. தமிழ் பேசும் மாகாணங்களான வடக்கு, கிழக்கை இணைத்து அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமர் மோடியிடம் தனது நிலைப்பாட்டினை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் இறுதி அம்சமாக பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முக்கிய சந்திப்பொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய தரப்பில் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 
40 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தாவது,
இந்திய பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்திருந்தது. அவர் இறுதி நேரத்தில் நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் எம்முடன் பொறுமையாக கலந்துரையாடினார்.  
இதன் போது சம்பந்தன் ஜயாஇ தற்போது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதவற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடமே அரசியலமைப்பு இடைக்கால வரைபொன்று வெளியிடப்பட்டு முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த விடயங்களில் பிரதான கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற கருத்தியல் தொடர்பிலான வேற்றுமைகள்இ கட்சி சார்ந்த விடயங்கள் தாமதங்களை ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாக புதிய அரசியல் சாசன செயற்பாடுகள் காலதாமதமாகி செல்கின்றன. எம்மை பொறுத்த வரையில் ஐக்கிய இலங்கைக்குள் பிளவு படாத பிரிக்க முடியாத நாட்டினுள் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இந்த அதிகார பகிர்வு ஒற்றையாட்சிக்குள் நிச்சயமாக மேற்கொள்ள முடியாது. சமஷ்டி அடிப்படையிலேயே அந்த அதிகார பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எட்டு மாவட்டங்களை கொண்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். நிலத்தொடர்ச்சியான அந்த பூமி ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் இணைக்கப்பட வேண்டும்.
அதிகார பகிர்வு விடயத்தில் சட்டம் ஒழுங்கு, காணி பொலிஸ் போன்ற விடயங்கள் இந்திய பிராந்தியங்களுக்கு காணப்படும் அதிகாரத்தை ஒத்தாக இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டார். 
அதனை தொடர்ந்து சம்பந்தன் ஐயா வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன காணி மீட்பு போராட்டங்கள் வேலையில்லாத பட்டதாரிகளின் போராட்டங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொண்டார்.
அத்துடன் இந்தியா பாரிய உற்பத்திஇ விற்பனைச் சந்தையை கொண்டிருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. ஆகவே விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குஇ கிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்தியை மையமாக வைத்து  முதலீடுள் செய்வதற்கு முன்வர  வேண்டும்.
இதன் மூலம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு .வேலையில்லா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அத்துடன் அரசியல் கைதிகள் மற்றும் வாழ்வாதார தேவைப்பாடுகள் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விடயங்கள் குறித்தும் தாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரினார்.
இச்சமயத்தில் பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை நாங்கள் அவதானித்தோம். அந்த விடயங்கள் கடந்த வருடமே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டெல்லிக்கு வருகை தந்திருந்த போது இலங்கையின் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக கலந்துரையாடினேன்.
அதன் போது இந்த விடயங்களை முழுமையாக முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன். தற்போதும் கூட அரசியலமைப்பு விடயம் உட்பட ஏனைய விடயங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன்.
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணாது கால தாமதம் தொடருமாக இருந்தால் சவால்களை சந்திக்க நேரிடும் என்பதையும் அவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளேன். 
அதேபோன்று வடக்குஇ கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா தொடர்ந்தும் தன்னாலான உதவிகளையும் பங்களிப்புக்களையும் செய்து வருகின்றது. இந்தியா தொடர்ந்தும் உங்களுடனையே இருக்கும் என்று கூறினார். 
அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பின் தலைவரை பார்த்து நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொறுமையாக கையாள்கின்றீர்கள் உங்களது தலைமைத்துவம் அவர்களுக்கு தொடர்ச்சியாக அவசியம் உங்களின் அணுகுமுறை செயற்பாடுகளை நாம் பாராட்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 













பிரதமர் மோடி - மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள்  சந்திப்பு  

12/05/2017 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 
இச் சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ் தானிகர் தரண்ஜித் சிங் சத்துவும் கலந்துகொண்டிருந்தார். 
இச் சந்திப்பு டிக்கோயா மைதானத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்தார்.
அதன்பின்னர், நோர்வூட் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உரையாற்றிய மோடி,  மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு சில உறுதிமொழிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிபேச்சுவார்ததை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











No comments: