உன்னதமானது - ஊடக சுதந்திரம் தி. சுவாமிநாதன், நாமக்கல்.


ஜனநாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுவது பத்திரிக்கைத் துறை. பத்திரிக்கை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை வகிக்கிறது. கிட்டத்தட்ட உலகின் கடைசி இடத்தில் வட கொரியா உள்ளது. இந்தியா 140-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா தொழில் நுட்பத்தில் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும்;, ஜனநாயகத்தின் ஆணி வேரான கருத்து சுதந்திரத்தில் நாம் பின்தங்கியே உள்ளோம் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
கொலம்பியா தேசத்தின் பத்திரிக்கையாளர் கிலெர்மோ கானோ கிசாகா என்பவர் 1986ம் ஆண்டு டிசம்பர் 17-ல் அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பேச்சு வலுப்பெற்றது. இவரது நினைவாக, உலக அமைதிக்காகவும், பேச்சு சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினுடான பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிக்கை எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 25000 டாலர் வெகுமதியான பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஆண்டுதோறும் மே 3ம் தேதி உலகப் பத்திரிக்கை சுதந்திர தினமாக(World Press Freedom Day கொண்டாடப்பட்டு வருகிறது. (World Press Freedom Day)ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக சட்டம் இயற்றுதல் நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் பத்திரிக்கைத்துறை ஆகியன இருக்கின்றன. 1882ம் ஆண்டில் முதல் முதலாக தமிழ் தினசரியான சுதேசமித்திரன் வெளியானது.
People - Royal - Education - Sound - Sight என்பதன் சுருக்கமே PRESS ஆகும். அதாவது, மக்கள் - இராஜ்ஜியம் - கல்வி - காதால் கேட்பது - கண்களால் பார்ப்பது, இவை எல்லாம் இணைந்துதான் பிரஸ் என்ற ஆங்கிலச் சொல் உருவானது.
North – East – West - South  என்னும் சொற்களின் முதல் எழுத்துக்கள் இணைந்துதான் NEWS  (நியூஸ்) என்ற சொல் உருவானது. நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது என்பதை குறிக்கிறது. ஒருவர் மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாமல், சட்டைப்பண்ணாமல் விட்டுவிடுபவர்கள் உண்டு. விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு, அதில் உண்மைத்தன்மை இருப்பின் தன்னை வருங்காலத்தில் மாற்றிக்  கொள்ள முன் வரும் நேர்மறையான நபர்கள் ஒரு வகை. உதாரணமாக, பொதுவாழ்க்கையில் ரொம்ப ஆடம்பரமாக இருக்கிறார் என விமர்சிக்கப்பட்டவர், பின்னர் எளிமையாக தன்னை மாற்றிக்  கொள்வது, பின்னர், விமர்சிக்கப்பட்டவராலேயே பாராட்டப்படுவது ஒரு வகை. தன் மீதான விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பவர்கள் உண்டு. சிலர் தன் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்தி, சப்பைக்கட்டு கட்டிப் பேசுபவர் உள்ளனர். இதைத்தாண்டி, சட்டத்திற்கு புறம்பாக என்னை எப்படி விமர்சிக்கலாம் என சம்பந்தப்பட்டவர் மீது வன்முறையை ஏவுவதுதான் கருத்து தெரிவித்தவரின் சுதந்திரத்தை பெரிதும் அச்சுறுத்துகிறது.
இளவரசி டயானாவின் மரணத்திற்கு பத்திரிக்கைகளின் இடைவிடாத துரத்தலே காரணம் என்று பேசப்பட்டது. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து எழுதும்போது பின்விளைவாக, தொடர்புடைய பிரபல பத்திரிக்கை அலுவலகம் தாக்குதலுக்கு ஆளாகி, அதன் ஊழியர்கள் உயிர் இழந்த சம்பவம் துயரமானது. சரியோ, தவறோ, ஒரு கருத்தை தெரிவித்த 10 நபர்களில் திரைப்பிரபலமும் ஒருவர். ரசிகர்களின் பேராதரவை பெற்று கோவில் கட்டி கொண்டாடப்பட்டவர். பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு இன்னல்களை சந்தித்தார் என்பதை மறுக்க இயலாது. நம் நாட்டில் சில பத்திரிக்கை ஆசிரியர்கள் தம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளுக்காக சில மாநிலங்களில் மாவட்டம், மாவட்டமாக பல வருடங்களாக சென்று நீதி மன்ற வழக்குகளை எதிர்கொண்டு வருகிறவர்கள் உண்டு. பத்திரிக்கை அலுவலகங்கள் சில அமைப்புகளால் தாக்கப்படுவதுää மிரட்டல் விடுக்கப்படுவது எல்லாம் அவ்வப்போது இருக்கவே செய்கிறது.
அதிகார பலம் மிக்கவர்கள், பண பலமிக்கவர்களை எதிர்த்து எழுதினால்  தொடர்புடைய  பத்திரிக்கையின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் அபாயம் உள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூணான ஊடகங்களை முடக்கினால் ஜனநாயகத்தின் அடிப்படையே கேள்விக்குள்ளாகும் அபாயம் உள்ளது. உண்மைகளை உரைப்பவர்களையும் அதற்கு துணை நிற்பவர்களையும் ஏகாதிபத்திய, சர்வாதிகார மனப்பான்மை உடையவர்களுக்கு ஓருபோதும் பிடிப்பதில்லை. இருந்தபோதிலும்ää இவ்வாறான பல்வேறு இடையூறுகளை சமாளித்து நீதிக்கு சாட்சியாக நின்று கொண்டுதான் பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தனக்கு சாதகமாக செயல்படுபவர்களை வளர விடுவதும், தமக்கு எதிராக உண்மைகளை வெளிக் கொணர முற்படும் நபர்களை முகவரியில்லாமல் அழிக்க முற்படும் ஏகாதிபத்திய, சர்வாதிகார செயல்பாடு பல்வேறு நிலைகளில் இருக்கவே செய்கிறது. இப்படியே உண்மைகள் மறைக்கப்பட்டு  அதற்காக பாடுபடுபவர்கள் அழித்தொழிக்கப்படுவதும் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பதும் உலகின் அழிவிற்கே வழி வகுக்கும்.
மன்னராட்சி நடக்கும் சில நாடுகளில் அரசு மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளை விமர்சிக்க முடியாது.
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். எத்தனையோ பேர் கொடும் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். எத்தனையோ பேர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவையும் மீறிதான் பத்திரிக்கைத் துறை துடிப்புடன் செயல்படுகிறது. பத்திரிக்கை அலுவலக கட்டிடத்திற்கான மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டித்த நிகழ்வுகளும் பல நாடுகளில் உண்டு. வன்முறைக்குள்ளான பெண் பத்திரிக்கை நிருபர்கள் உண்டு.
அதே நேரத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதுவது கண்டிக்கத்தக்கது. பொய் செய்தி மிக விஷமத்தனமானது. அவதூறானது. பட்டாசைக் கூட வெடிகுண்டு என்று எழுதினால் அது ஊடக தர்மத்;தை மீறிய செயலாகும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு மட்டும் என்பார்கள்;. மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ள நபரை உடல் நலம் தேறிவிட்டது போன்று செய்தி வெளியிடுவது, எதிரியிடம் அடிபட்டு இழிவுபட்டு பலவீனமான நிலையில் ராணுவம் பின்னடைந்து கொண்டிருக்கும் உண்மை நிலைக்கு மாறாக,  படைகள் உக்கிரமாக போராடி எதிரியை துரத்திக் கொண்டிருப்பதாக செய்தி தருவது. ஆனால்ää போரின் முடிவு என்பது நம்பிக்கைகளைத் தாண்டி யதார்த்தம் வெளியே வந்து இருக்கும் தருணம் உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.
சுமாரான வெற்றியை ஈட்டக்கூடிய ஒரு திரைப்படம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகும்போது, சர்ச்சைக்குள்ளாகும் போது, மாபெரும் வெற்றி பெற்று வசு10லைக் குவித்த நிகழ்வுகள் உண்டு. நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே படித்திருக்கக் கூடிய புத்தகம், தடை செய்யப்படும் போது, எதிர்ப்புக்குள்ளாகும் போது, பல நாடுகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல லட்சம் வாசகர்களால் படிக்கப்பட்டு அமோக விற்பனையை வரவேற்பை பெற்ற நிகழ்வுகள் உண்டு. இணையத்தள கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, கேபிள் தொடர்புகளை துண்டிப்பது, விளம்பரம் வழங்க மறுப்பது, அவதூறு வழக்கு என அவ்வப்போது, சில சிரமங்களை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. சமூக அவலங்களை பட்டியலிட்டு வெளியிடப்படும் போது சகித்துக் கொள்ள முடியாதவர்கள் பல்வேறு நாடுகளில் வன்முறையான வழிகளில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறார்கள்.
உண்மை கசக்கும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆவார். இவர் 1781-ஆம் ஆண்டு வங்காள கெஜட் என்ற பத்திரிக்கைக்கு தொல்லை கொடுத்து அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார். விடுதலைக்குப்பின்ää இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போது (ஜுன் 1975 முதல் 1977 மார்ச் வரை) பத்திரிக்கை சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவ்வப்போது சில அடக்குமுறைகள் இருந்திருப்பினும் உலகில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு நோக்கும் போது இந்தியப் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் தேவையான சுதந்திரத்தோடு செயல்படுகின்றன எனலாம்.
தற்போது பத்திரிக்கை சுதந்திரத்தை நேரடியாகவோää மறைமுகமாகவோ வரைமுறைப் படுத்தும் மத்திய அரசின் பத்திரிக்கைச் சட்டம் எதுவும் இல்லை என்பது ஆரோக்கியமானது.  நிர்வாகத்தின் செயல்பாடுகளை அச்சமின்றி விமர்சிப்பது ஊடகங்கள் மட்டுமே. பத்திரிக்கையாளர்கள் துணிவாக படம் பிடித்து காட்டியதால் சில சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். நவம்பர் 26, 2008ல் மும்பை நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகளை நேரடியாக ஒளிப்பரப்பு செய்த ஊடகங்கள் உண்டு. துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று போர் குற்றங்களை நேரடி ஒளிபரப்பு செய்து, ராணுவத்தின் விகாரமான முகத்தை ஆதாரத்துடன் தோலுரித்;துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில்  நீங்கா இடம் பிடித்த ஊடகங்கள் உலகில் உண்டு. விளிம்புநிலை மனிதர்களின் சமூக விடுதலைக்கு பத்திரிக்கை வாயிலாக குரல் எழுப்புகிறர்கள் உண்டு.
அன்னிய ஆட்சியின்போது, இந்திய மக்கள் அனைவர் மனதிலும் விடுதலை நெருப்பை பற்ற வைத்ததில் பத்திரிக்கைகளின் பங்களிப்பை மறுக்க இயலாது. மிகவும் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் அணு ஆயுதத்திற்கு ஒப்பானவை. இவற்றால் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். இத்தகைய துறையில் உள்ளவர்கள் தங்களது சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நடுநிலையோடு பொது நலனை முக்கியமாக கருதும் ஊடகங்கள் போற்றுதலுக்குரியவை. அவர்கள் உண்மையைத் தேடு என்கிற கொள்கையை விட்டு விடுவதில்லை. செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டால் அது சமுதாயத்திற்கு நச்சுத் தன்மையை விதைத்து போலாகி விடும். பத்திரிக்கையும், தொலைகாட்சியும் ஒரு நாட்டின் முதுகெலும்பு. அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கும் அஞ்சாமல் உண்மையை வெளிக்கொணர போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. எதற்காகவும் எழுத்தில் சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர்கள் போற்றத்தக்கவர்கள்.
பத்திரிக்கை சுதந்திரம் எல்லா வகையான சுதந்திரத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும்.
                                     -தி.சுவாமிநாதன்
                                        நாமக்கல்.


     

No comments: