தமிழ் சினிமா


கடம்பன்


ஆர்யா தொடர்ந்து படங்களில் நடித்துவந்தாலும் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் பெரிதளவில் போகவில்லை. வழக்கம் போல தன் படங்களில் அடுத்ததாக வந்துள்ள இந்த கடம்பன் படத்தை நம்பும் ஆர்யாவுக்கு இது கை கொடுக்குமா என பார்ப்போம்.

கதைக்களம்

ஆர்யா தான் அந்த கடம்ப மலைக்காட்டின் ராஜா என்று சொல்லலாம். காட்டை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் இவர் அதை பாதுக்காப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.
மலைவாசி மக்கள் கூட்டத்தில் ஆர்யாவுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இதற்கு காரணம் மூதாதையருக்கு பிறகு அவரின் திறமைகள், நுணுக்கங்கள் எல்லாம் இவரிடம் உள்ளதே.
ஆர்யாவின் மீதுள்ள பொறாமையால் எதிரி போல செயல்படுகிறார் ஹீரோயின் கேத்ரின் தெரேசாவின் அண்ணன். கேத்ரின் அவ்வப்போது ஆர்யாவுக்கு காதல் வலை வீசுகிறார்.
செழிப்பாக போகும் கடம்பவனம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் தங்களுக்கு ஏதோ பெரிய துன்பம் வரப்போவதை அவர்களுக்கே உரிய பாணியில் தெரிந்துகொள்கிறார்கள்.
மும்பையிலிருந்து தமிழுக்கு வில்லனாக வந்துள்ள தீப் ராஜ், பெரிய தொழிலதிபர், அவர் காட்டை அழித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஆசைபட்டு கடம்பவனத்தை குறிவைக்கிறார்.
வனத்துறை அதிகாரிகள், ட்ரஸ்ட் நடத்தும் ஒய்.ஜி.மகேந்திரன் அவரது மகள் மதுவந்தி ஆகியோர் பணத்திற்காக வில்லனோடு சேர்ந்து மலைவாழ் மக்களை விரட்ட நல்லது செய்வது போல் ஏமாற்றுகிறார்கள்.
காட்டை காப்பாற்ற கோர தாக்குதல்களை சந்திக்கும் இந்த மக்களின் சமூகம் என்ன ஆனது? ஆர்யா என்ன செய்தார், கேத்ரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யா ஓப்பனிங்கில் வீர தீர சாகசங்கள் எல்லாம் செய்கிறார். இந்த படத்திற்காக அவர் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரை இதற்காக பாராட்டலாம்.
கேத்ரின் தெரேசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பது சற்று வித்தியாசமாக உள்ளது. ஆனால் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒரு சில இடங்களில் தான். தன்னுடைய நடிப்பை புரிந்து நடித்திருக்கிறார்.
அதே போல இவரின் அண்ணனாக வருபவர் தீடீரென ஆர்யாவுடன் சண்டை போடுவதும், பின் அவருடன் ஒன்று சேர்ந்துகொள்வது சற்று யோசிக்க வைக்கிறது.
அறக்கட்டளை மூலம் ஒய்.ஜி., மதுவந்தி ஆகியோர் ஆர்யாவுக்கு உதவி செய்வது போல தாங்கள் காய் நகர்த்துவதும், பின் ஆர்யா அவர்களுக்கு எதிராக மாறுவதும் கொஞ்சம் ட்விஸ்ட்.

கிளாப்ஸ்

ஆர்யா படத்திற்காக உடல் எடை கூட்டியது, ரிஸ்க் எடுப்பது சொல்லப்போனால் டார்சன், ஜங்கிள் புக் போல மாறியிருக்கிறார்.
கதையை நகர்த்திய விதம் ஓகே. சில இடங்களில் CGI கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்திய காட்சி முகம் சுளிக்கவில்லை.
யுவன் இசையில் பாடல்கள் உணர்ச்சிவசம். ஒரு கட்டத்தில் மலை மக்கள் படும் வலிகள் கொஞ்சம் ஃபீல் பண்ண வைக்கிறது.

பல்பஸ்
காட்டை தாயின் கர்ப்பப்பையையும் ஒப்பீட்டு அதை பாதுக்காக்க வேண்டும் நமக்கும் நாளைய தலைமுறைக்கும் அது தான் தீர்வு என டையலாக் கூறியவிதம் ஸ்மூத்.
ஆர்யா கேத்ரின் காதல் என்ன ஆனது, அவர்கள் சேர்ந்தார்களா என சொல்லாமலே சென்றுவிட்டார் இயக்குனர்.
ஒரே ஒரு இடத்தில் கிராஃபிக்ஸ் காட்சியை இன்னும் எஃபோர்ட் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
ஆர்யாவுடன் சண்டையிட்டு தன் பக்கம் மக்களை அழைத்து செல்லும் கேத்ரின் அண்ணன் திடீரென வில்லனை பிடிக்க ஆர்யாவுக்கு உதவி செய்யும் ட்விஸ்ட் லாஜிக் இடிப்பது போல தோன்றுகிறது.
மொத்தத்தில் கடம்பன் காட்டின் ராஜா. கச்சிதம். சோசியல் மெசேஜ்..
Direction:
Production:
Music:


நன்றி  Cineulagam

No comments: