ஆண் உன்னத படைப்பு

.


ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை 
ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு 
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான், 
"நேரம் நெருங்கிவிட்டது, 
பிரசவ வலி நாளை அல்லது 
நாளை மறுநாள் கூட வரலாம்.. 
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்.. 

இதை கேட்ட அவள் கணவனுக்கு 
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி 
இரு கண்களை மறைக்கிறது, 

அன்று இரவே கணவன் தன் மனைவியின் 
வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான், 

"என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி 
கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, 
மகளோ என் கையில்... என்கிறான், 
அதை கேட்க மனைவி எனக்கு 
ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல, 
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் 
வேண்டும் என்று கணவன் சொல்ல 
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர், 
படுக்கையில் தன் கணவன் அருகில் 
நெருங்கி வந்து அவன் கை விரலை 
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள், 

தூக்கத்தில் இருந்த கணவன் 
விழித்து தன் மனைவியை பார்க்கிறான். 


"என்னவென்று தெரியவில்லை 
இதயம் படபடவென துடிக்கிறது, 
எனக்கு தூக்கமே வரவில்லை 
பயமாக இருக்கிறது", என்று சொல்லி 
கண்கசிகிறாள் அவன் மனைவி. 

உடனே இழுத்து தன் மார்போடு 
மனைவியை அனைத்தவன் 
அவள் கண்ணீரை துடைத்து 
அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். 

அவள் நினைத்தால் போல் 
திடீரென பிரசவ வலி வந்தது. 
பயத்திலும் கடுமையான 
இடுப்பு வலியிலும் கட்டிலேயே 
துடித்து அழ ஆரம்பித்தாள், 

என்ன செய்வது என தெரியாது 
முழித்த கணவன் 
அவள் துடிப்பதை காண இயலாமல் 
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு 
காரில் சிட்டுக் குருவியை போல் 
பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான், 

இரவு நேரம் என்பதால் உடனே 
தன் மனைவியின் பெற்றோர்களுக்கு 
தகவல் தெரிவித்தான், 

ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க 
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் 
பயங்கரமாக கேட்டது, 

இரு கைகளையும் பிசைந்து கொண்டு 
பிரசவ வார்டின் வெளியில் 
இங்கே அங்கே என சுற்றுகிறான். 

"அம்மா! அம்மா ..!" என்று 
மனைவி வலியில் துடிக்க 
அழத் தெரியாத அவள் 
கணவனுக்கும் அழுகை வந்தது. 

ஆண்டவா என் மனைவியின் 
முதல் பிரசவம் இது, 
தாய்கும் பிள்ளைக்கும் எந்த 
ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது" 
என்று உலகின் உள்ள 
எல்லா கடவுளிடம் வேண்டினான். 

நேரம் ஆக ஆக அவனுக்கு 
முகமெல்லாம் வேர்த்து கொட்டியது, 
பிரசவ வலியில் தன் மனைவி 
துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள 
இயலவில்லை. 

சற்று நேரத்தில் திடீரென 
மனைவியின் குரல் அமைதியானது. 
கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என 
மிகவும் பயந்துபோனான், 

மீண்டும் ஒரு அலரல்... 

அதை கேட்ட கணவன் 
ஆண்டவா என் மனைவிக்கு 
இவ்வளவு சித்திரவதையா? 
என தலையில் கை வைத்தவாறு 
இருக்கையில் அமர்ந்து மனைவியை 
அவள் தியாகத்தை நினைத்து 
கூணி கூறுகிப்போனான், 

அப்போது ஒரு நர்ஸ் மட்டும் 
வெளியே வந்து 
உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம் 
பயப்படும்படி ஒன்றுமில்லை, 
தாராளமாக உள்ளே சென்று 
பாருங்கள் என்றார். 

காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன் 
முதலில் தன் மனைவியை பார்க்கிறான், 
அவள் இன்னும் கண் திறக்காமல் 
மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க 
அடுத்து எங்கே என் குழந்தை என 
அவன் கண்கள் ஒரு வழியாக தேடி 
தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு 
மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத 
சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு 
முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக 
கோதிவிடுகிறான். 

தந்தையின் கை விரல் பட்டவுடன் 
சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது. 
யார் சொன்னது பெண்கள் மட்டும்தான் 
உயிரை சுமக்கின்றனர் என்று. 

♥ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் 
ஒவ்வொரு ஆணின் "இதயத்தை" 
தொட்டுப் பாருங்கள், 
அவன் வாழ்நாள் முழுவதும் 
அந்த பெண்ணின் நினைவுகளையும் 
குடும்ப பாரங்களையும்சுமந்தே மடியும் உன்னதமான படைப்பு தான் ஆண்.... 

nantri http://eluthu.com

1 comment:

Piraveenan said...

True. Our great poet Mahakavi Ruthramoorthy describes the same experience in very nice verses in his 'Satharana Manithanathu Sariththiram'. You may want to find it and publish it underneath here :)