உலகச் செய்திகள்


பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! 

மக்ரானுக்கு உலக தலைவர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்..!

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

தென்கொரியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு ஆரம்பம்..!பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! 

பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.


இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ள குறித்த ஜனாதிபதி தேர்தலில்  சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி கட்சி தலைவர் மரின் லீ பென்னை தோல்வியுற செய்துள்ளார்.
மேலும் மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த லீ மெரீன், தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், ஆளும் தரப்பிற்கு பலமான எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வின் போது மக்ரோன், முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயிடமிருந்து, அணுவாயுத குறியீடுகளை பெற்று கொண்டுள்ளார். அத்தோடு ஜனாதிபதியாக மக்ரோனின் முதல் வெளிநாட்டு பயணமானது ஜெர்மனிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


மக்ரானுக்கு உலக தலைவர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்..!

08/05/2017 பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரான் நட்டு மக்களின் அறுதி பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ள குறித்த தேர்தலில், சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி கட்சி தலைவர் மரின் லீ பென்னை தோல்வியுற செய்துள்ளார்.
மேலும் தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த லீ பென், தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், ஆளும் தரப்பிற்கு பலமான எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும், எதிர்காலத்தில் பிரான்ஸுக்கிடையிலான நட்பியல் தொடர்புகள் குறித்து செயற்படவுள்ளதாக கருத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .   நன்றி வீரகேசரி 

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

09/05/2017 கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.
மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லாத நிலையில், இரண்டாம் தரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கொலை இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பாகவே அமலனின் மனைவியிடம் ஜெயராசன் எல்லை மீறியதைச் சுட்டிக்காட்டிய ஜூரிகள், இது கோபத்தினால் இடம்பெற்ற கொலை என்றும் திட்டமிடப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டனர்.   நன்றி வீரகேசரி
தென்கொரியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு ஆரம்பம்..!

09/05/2017 தென்கொரியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, மக்கள் வாக்கெடுப்புகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த பார்க் கியூன் மீது, ஊழல் மோசடி குற்றச்சாட்டு சொல்லப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டம் வெடிக்கவே அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இடம்பெறும் தேர்தலில் மக்கள் ஆவலாக வாக்களித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து இடம்பெறும் தேர்தலில் முன்னாள் ஐநா செயலாளர் பான் கி மூன் பங்குபற்றவர் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அவர் பங்குபற்றவில்லை. தற்போதைய தேர்தலில் மூன் ஜே-இன் மற்றும் அன்-சீயோல்-சூ என்போர் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இதுவரை அந்நாட்டு சனத்தொகையில் சுமார் 30 சதமானோர்கள் வரை வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரிNo comments: