எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி
இந்திய சினிமா மட்டுமில்லை, உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் கலேக்ட்டர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.
கதைக்களம்
தோனி இன்று நமக்கு ஒரு சக்சஸ்புல் மனிதராக தான் தெரியும், பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
ஆனால், இந்த இடத்தை அவர் அடைய பட்ட கஷ்டங்கள் சாதரணம் இல்லை, தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.
படத்தை பற்றிய அலசல்
தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பது வரை உள்ளது. சுஷாந்த் படம் முடிந்தவுடன் திரையரங்கமே எழுந்து கைத்தட்டுகின்றது, அவர் நடிப்பிற்கு இதுவே ஒரு சான்று.
தோனியின் வாழ்க்கையில் நாம் பார்க்காத சில சோகப்பக்கங்களை நீரஜ் மிக அழகாக காட்டியுள்ளார், சாதரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகன் ஆகத்துடிக்கும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் வறுமையால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் சுஷாந்த் தோனியாக வாழ்ந்து இருக்கிறார்.
அதிலும் நம் பாதையை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், வாழ்க்கை முழுவதும் பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குனிந்து செல்ல வேண்டும் என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. இடைவேளையில் தோனி தன் வாழ்க்கையை தீர்மாணிக்கின்றார்.
அதன்பிறகு அவர் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. அதிலும் தோனி எப்படி இத்தனை பொறுமையாக இருக்கிறார் என்பதன் விளக்கமும் காட்சிகளாகவே காட்டப்பட்டுள்ளது.
யார் முன்பும் தோனி அழுகமாட்டார் என்பதையும் காட்டியவிதம் சூப்பர், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் சிக்ஸர் தான், அப்படியே Cg வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், யுவராஜ், கம்பீர், சேவாக் ஆகியோரின் நட்பு குறித்து காட்டியவிதம் தற்போதாவது தெரிந்திருக்கும் ரசிகர்களுக்கு நாம் எண்ணியது எல்லாம் பொய் என்று.
படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் அறிந்தது தான், உலகமே பார்த்தது தான், ஆனால், கொஞ்சம் கூட அந்த சந்தோஷம் குறையவில்லை, அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றார் ரசிகர்கள்.
க்ளாப்ஸ்
சுஷாந்த் மற்றும் படத்தில் நடித்தவர்களின் அனைவரின் நடிப்பு.
ரசிகர்கள் பலரும் அறியாத பல தகவல்களை காட்டிய விதம்.
படத்தின் வசனம். கிளைமேக்ஸ் காட்சிகள்.
பல்ப்ஸ்
படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்
மொத்தத்தில் சாதாரண மனிதன் சரித்திர நாயகன் ஆனதை நாம் அனைவரும் கொண்டாடியே தீர வேண்டும்.
No comments:
Post a Comment