ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா

.
‘Lord of Dance’,  ‘திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை’
ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா

செப்டம்பர் 25, 2016 அன்று மலேசியா திருமுருகன் திருவாக்குப் பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளாசிகளுடன் இரண்டு ஆன்மீக நூல்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெளியிடப்பட்டன. இந்நூல்களை திருபீடம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதிய ‘LORD OF DANCE’  என்ற நூலினையும்,  சிவஞானச்சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்ற நூலினையும் அண்ணமாலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் மணியன் அவர்கள் வெளியிட ஆகமவாரிதி முனைவர் சபாரத்தினம் சிவாசாரியார் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
‘LORD OF DANCE’  என்ற நூல்,  இதன் ஆசிரியர் தமிழில் தில்லை என்னும் திருத்தலம் என்ற பெயரில் எழுதிய நூலின் ஆங்கில வடிவமாகும். இது அனைவரும் படித்திடும் வண்ணம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மும்மைச் சிறப்புடைய தில்லைத் திருத்தலத்தின் பெருமையையும்  ஆடல்வல்லானின் ஆடல் தத்துவத்தையும் விஞ்ஞான உலகத்திற்கு விஞ்ஞானத்தோடு ஒட்டி வருகின்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
அனைத்து பதிவுகளையும் பார்க்க OLD POST டைஅழுத்துங்கள்







திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை  என்னும் நூல் தேவாரம் முதன் முதலாகப் பாடப்பட்ட சிவத்தலமான திருவதிகைத் திருத்தலத்தைப் பற்றியும், இறைவன் ஆனவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கலான முப்புரம் எரித்த வரலாற்றையும், அப்பர் பெருமானின் வரலாற்றையும் அழகாக எடுத்துரைக்கிறது.
செப்டம்பர் 28, 2016 அன்று சென்னையிலும் இந்த இரண்டு ஆன்மீக நூல்களும் வெளியிடப்பட்டன. முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதிய ‘LORD OF DANCE’  என்ற நூலினை தினமலரின் ஆசிரியர் முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட, கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் திரு காந்தி கண்ணதாசன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  


சிவஞானச்சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்று நூலினை எழுத்தாளரும் புதிய தலைமுறை கௌரவ ஆசிரியருமான மாலன் அவர்கள் வெளியிட, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாரதி பாலன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

No comments: