நடைமுறைக்கு பொருத்தமான இலங்கையின் அரசியல் தீா்வை நோக்கி

.
      அவுஸ்த்திரேலியாவிலிருந்து,     எஸ்.பி.வசந்தராஜா   M.Sc, M.Ed                (முன்னாள் UNESCO ஊழியர், முன்னாள் விரிவுரையாளர், அன்னை திரேசாவுடன் சேவை செய்தவர்,சிட்னியில் சமூகசேவைவிருதுபெற்ற தற்போதய முனைவர்பட்டதாரிமாணவன்)

நாம் அனைவரும் சமாதானப்பிரியர் என்ற உணர்விலும், இலங்கை ஆசியாவின் ஓரு முத்து என்ற ரீதியிலும், எமக்கு ஒவ்வொருவரும் அருள்ளப்பட்ட இந்த சொர்க்க நாட்டை, எமது காலத்தில் ஒரு சுபீட்சமுள்ள தன்னியக்கமும், தன்னாதிக்கமும், பொருளாதார வளர்ச்சியுடைய ஒரு புதிய சிங்கப்பூராக உருவாக்க முடியும். இனங்களிடையே எவ்வித சந்தேகமும், பயமும், பொறாமையும் அற்ற ஒரு சூழ்நிலையை அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும், பல்லின மக்கள் தங்கள் திறன்க ளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, வாழக்கூடிய ஒரு பக்குவமான நல்ல போட்டியில் ஓடக்கூடியதான ஒரு காலத்தை வருகின்ற அரசியல் அமைப்பு மாற்றத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும் இதனை வரைகின்றேன். தற்போதய சூழ்நிலையில்அதன் பிரதான மூன்று  அடிப்படை தேவைகளை உங்கள் அனைவரினது கவனத்திற்கு அன்புடன் கொண்டு வர விரும்புகிறேன்.
1. எதிர்கால சுபீட்சமுள்ள இலங்கையின் அநாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில் சிறிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்  ஒன்பது மாகாணங்களை, இணைப்பின் மூலமாக நான்கு மாகாணங்களை கொண்ட ஒரு கட்டமைப்பாக மாற்றுதல். அதாவது தெற்கு மாகாணம் (South), மத்திய மாகாணம் (Central), வட மத்திய மாகாணம்(North Central), வட கிழக்கு மாகாணம்(North East) என்ற நான்கு மாகாண சபைகள், அங்கு மேல்  மாகாணம் (Western Province) மத்திய அரசாங்கத்துடன் (இந்தியாவில் உள்ள டெல்கியை போல,  அவுஸ்திரேலியாவிலுள்ள கான்பேரானவப் போன்றதாக) இருக்கின்ற ஒரு ஆரம்ப அமைப்பாக இருத்தல்.



2. இந்த நான்கு மாகாண சபையிற்கு அதிகாரங்களை பகிர அருகில் இருக்கும் இந்திய நாட்டில் மக்கள் அனுபவிக்கின்ற ஒரு அதிகாரபகிர்வை ஒத்ததாக ஓர் ஆரம்பமாக பரிசீலனை செய்வது, நமது அயல்நாடுகளுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்துவதற்கும் உண்மையான சமாதானத்தை வெளிப்படையாக ஆரம்பிப்பதற்கும் இது வழிவகுக்கும். அதே நேரத்தில் மற்ற நாடுகளில் உள்ள அதிகாரபரவலாக்களை பற்றிய ஆய்வுகளை, அரசு நல்ல நோக்கம் கொண்டு கற்றோர்கள் ஆராய்வதும் ஓர் சிறந்த பயிற்சிற்கு வழிவகுக்கும். அதாவது இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரங்களை இணைந்த மாகாணங்களிற்கு பகிருவது என்ற ஒரு நிலை சிங்களவருக்கும் தமிழருக்கு ம் இடையே ஒரு பலமான தேசிய ஒற்றுமையை எப்பவும் பெலப்படுத்தும்.

3. ஒரு இணைந்த மாகாணத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு, அந்த இணைந்த மாகாண முதலமைச்சர் என்ன உரிமைகளை கொடுக்க எண்ணுகின்றாரோ அதனை மற்ற இணைந்த மாகாணங்களிலுள்ள முதலமைச்சர்கள் கையாழுவது என்ற ஓர் பயிற்சி, நாட்டில் நல்ல ஒரு பொருளாதார வளர்ச்சிற்கு உற்சாகப்படுத்துவதாக அமையும். (உதாரணமாக வடகிழக்கில் உள்ள சிங்கள மொழி பேசுகின்ற மக்களிற்கு அங்குள்ள முதலமைச்சர்கள் என்ன உரிமைகளை கொடுக்கின்றார்களோ, அதனை மலையகத்திலுள்ள முதலமைச்சர் அங்குள்ள தமிழ் மொழி பேசும் மக்களிற்கு கொடுக்கலாம், ஆனால் நான்கு இணைந்த மாகாணங்களிலும் பல்லின மக்கள் இருப்பார்கள்).
சுபீட்சமான  இலங்கையை நோக்கி பல சிறந்த பொதுவான கொள்கைகளை நாட்டிலுள்ள பல்லின தலைவர்கள் மேலும் அவற்றை பின்வருமாறு தெளிவாக்கி எடுத்துக்கொள்வதும் வருங்கால சமுதாயத்திற்கு ஒளியூட்டுவதாக அமையும்:    
           
எந்தவித இடர்பாடுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை எல்லா மக்களும் சேர்ந்து இணைந்த மாகாண அமைப்புகளினூடாக கட்டி எழுப்புதல்
எந்த ஒரு அறிவித்தலையும் மூன்று மொழிகளிலும் (ஆங்கிலம், சிங்களம், தமிழில்) முக்கியமான இடம்களில் காட்சிப்படுத்தல்
இனவாதத்திற்கு எதிரான கடுமையான சட்டங்களை அமைத்தல், அமுல்படுத்தல் மூலம் சமாதானத்தை மேம்படுத்தல்
இனங்களை மொழிரிதியாக மதிக்கவும், மதங்களை தன்னிச்சையாக ஒருவர் சுதந்திரமாக பின்பற்றி ஒரு நல்லலொழுக்கத்தை பேணி நற்சாட்சியுள்ள மனிதனாக வாழ ஊக்கிவித்தல்
நான்கு மானிலங்களிற்கான நல்ல போட்டிகள், விளையாட்டுகள் கலை நிகழ்சிகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் பேணல்
அதிகாரப்பரவலாக்கல் எந்த ஒரு விதத்திலும் பிரிவினையாகவோ அல்லது பிரிப்பதாகவோ கருதப்படமாட்டாது.
இணைந்த நான்கு மாகாணங்களிலும் மத்திய அரசாங்கத்தின் அங்ககீகாரத்துடன் சிறிய நிதியகத்தை (Mini Treasury) பேணிகாத்து, வெளிநாட்டிலிருந்து அதிக பணத்தை உள்ளே கொண்டு வர வசதிசெய்து , அதன் மூலம் மாகாணங்களின் மகா பாரிய முன்னேற்றத்திற்கு வழிகோலல்
மூ்ன்று மொழிகளிலும் எவரும் பாண்டித்தியம் பெற தூண் டுவதுடன், இரண்டு மொழிகளை கட்டாயமாக எவரும் பேச, எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நாட்டின் ஒற்றுமை வளர்ச்சியை கருத்தில்கொண்டு துஷ்பிரயோகங்களையும், ஊழல்களையும் அகற்றும்வகையில் பொதுவாக எவரையும் விசாரிக்கக்கூடிய ஒரு பொது நீதி விசாரணை அமைப்பு மத்தியில் என்றும் இயங்க வேண்டும். அது தேசிய பாதுகாப்பு கருதி  எல்லா மாகாணங்களையும் மேற்பார்வை செய்யதக்கதாகவும் வழி நடத்தகூடியதாகவும் இருக்க வேண்டும்.

கடந்த 40 வருடங்களாக, நாட்டில் பற்றி எரிந்த பெரிதாக்கிய பிரச்சினை காரணமாக ஒவ்வொரு குடிமகனும் சமாதானமின்றி நடைப்பிணமாக திரிந்த நிலை இனி மாற வேண்டும்.

இப்பொழுது முக்கியமான இரு பிரதான கட்சிகள் ஒருமித்து ஒரே அரசாக செயற்படுவது நாட்டிற்கு நல்லதொரு சிறப்பான தருணம். உலக நாடுகளின் ஒத்துழைப்பும், இந்தியாவின் அரவணைப்பும் ஐக்கிய நாடு சபையின் வழிகாட்டுதலும் இருப்பது சிறப்பான ஒரு அம்சமாகும்.

இன்றைய நவநாகரிக உலகத்தில் பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டின் சிறுபான்மை இனங்களிற்கு அதிகாரம் உள்ள மாகாண அமைப்பை கொடுப்பது புதியதும் அல்ல, ஏற்றக்கொள்ளதகாததும் அல்ல. கனடா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசிய நாடுகளின் முன்மாதிரியை அறிந்திருப்பது நல்லது / மிக அவசியமானது.

நாமனைவரும் நடைமுறைக்கு சாத்தியமாகக்கூடியதும் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளகூடியதுமான ஒரு தீர்வை ஒவ்வொருவரின் சந்தோஷத்திற்கும், நாட்டின் சுபீட்சத்திற்கும், இனங்களில் நல்ல புரிந்துணர்விற்கும் ஏற்ற வகையில் ஒரு புதிய சிங்கபூரை தோற்ற முன்னேற்றகரமாக அமைவதற்கு, அனைவரும் சிந்திக்க வேண்டும், அதற்கு தூது போக வேண்டும். பல தியாகங்கள் செய்ய இன்றைய தலைவர்கள் முன்னின்று உழைத்து அதற்காகவே பேச வேண்டும். இதனை தேசியரீதியிலும், உலகரீதியிலும்  எடுத்து செல்வதற்கு  நாம் எமது சக சமூகங்களை நேசித்து, அதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய சிங்கபூனர உருவாக்க அனைவரும் ஒரே மேசையில் இருந்து மனம் திறந்து பேசவேண்டும், முன்னையய தலைவர்களையும் இது விடயத்தில் அழைப்பது சிறந்ததாக கருதலாம்.

நான்கு நல்லவர்கள் கூடி நல்ல காரியத்தை செய்ய துணியும் போதும் யார் தான் எதிர்க்கமுடியும்.
இதற்காக எப்பவும் நல்ல சட்டம்களை உருவாக்க அணைவரும் அதற்காக பேச வேண்டும், அதற்கான புதிய சட்டம்களை புத்தி ஜிவிகள் கொண்டு வர அவர்களுடன் சேர்ந்து உழைக்க வேண்டும்.

புத்தரின் அறிவுரையின் அடிப்படையில் வாழ்க்கையில் ஒன்றுமே நிரந்தரமானதல்ல எனவும், பற்றற்ற வாழ்க்கையும் மனிதருடைய மேன்மைக்காக அதிகாரபரவலாக்கலை விட்டுக்கொடுத்து செயற்படுவது சாலச்சிறந்தது என குறிப்பட்டதை, குறிப்பிட விரும்புகின்றேன்.

இயேசு தன் போதனையில் உன்னைப்போல் உன் அயலானை நேசிக்க வேணடும் என குறிப்பிட்டுள்ளார். எனவே சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் ஒருவரை ஒருவர் நேசித்து அன்பு செய்யும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நல்ல போட்டியுள்ள மனித சமூகத்தை கொண்டு வரவும், ஒரு இனத்திற்கு மற்ற இனத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலும் வெளியே வந்து பேசவே்டும்.

ஒரு தத்துவஞானி  கூறுகிறார் சரியான செயலை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்றும், சரியானதை சரியான நேரத்தில் செய்யும்போது கடந்த பகமைகள் மறைக்கப்பட்டு ஒரு புதிய யுகம் ஆரம்பிக்கப்படும் என ஆராய்ச்சிரீதியாக விபரிக்கின்றார்.
மேலும் அதிகாரபரவலாக்கலைப்பற்றி சிந்திக்கும்பொழுது ஒவ்வொருவரும் பின்வரும் குறிப்பை  எடுத்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள்  உங்கள் மனைவியை மதித்து சமஉரிமைகளை கொடுத்து பகிர்ந்து வாழும்பொழுது குடும்பங்களிடையே சமாதானமும், ஒற்றுமையும் ஐக்கியமும் வளர்ச்சியும் ஏற்படும். விவாகரத்து எந்த பிரிவினையும் தவிர்க்கப்படும். இந்ந தத்துவம் எவ்விடத்திற்கும் பொருந்தும்.
இதேபோல நம்நாட்டிலும் அதிகாரங்களை பகிர்ந்து , சம உரிமைகளை கொடுத்து, இனங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதின் மூலம் நாட்டில் நல்ல எதிர்காலத்தை சிங்கப்பூரை போன்று அபிவிருத்தி  பண்ணமுடிவதுடன் சகல இலங்கை குடும்பங்களையும் மகிழ்ச்சியில் வாழவைக்க முடியும் என தெரிவித்து உங்களை அன்புடன் இறைவனை தாழ் வணங்கி இம்மடலை வரைந்து நிற்கின்றேன்.
நன்றி, வணக்கம், வசந்தராஜா
------------------------------------------


No comments: