.
பாடுவதிலிருந்து முழு ஓய்வு பெறுவதாக பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அறிவித்துள்ளார்.
1957ல் விதியின் விளையாட்டு படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் எஸ், ஜானகி. கடந்த 60 வருடங்களாக இடைவெளி இல்லாமல் பல மொழிகளில் பாடிவந்த ஜானகி, இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
அனூப் மேனன், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள மலையாளப் படத்தில் தாலாட்டு பாடலை அவர் பாடியுள்ளார். அதுவே தனது கடைசிப் பாடல். இனிமேல் படத்துக்காக மட்டுமல்ல எந்தவொரு நிகழ்ச்சியிலும் கூட பாடமாட்டேன் என்றும் ஜானகி அறிவித்துள்ளார். தன் திரையுலக வாழ்வில் அவர் 48,000 பாடல்கலைப் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். 2013-ல் அவருக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. ஆனால், தாமதமாக வழங்கப்பட்டது என்று காரணம் சொல்லி அவ்விருதை வாங்கிக்கொள்ள மறுத்தார்.
Nantri Thinamani
No comments:
Post a Comment