கோயில் திருவிழா என்றால், ஊரே களைகட்டும் இல்லையா? மகிழ்வான தருணங்கள் மனதில் வந்து போகின்றன. எமக்கும் கம்பன் விழா என்றால் அதே மகிழ்ச்சி! ஏனெனில், இது தமிழன்னை மகிழும் பெருவிழா! தமிழர்களுக்கான இயல் விழா! கம்பன் திருவிழா! கம்பன் நிலைகொள்ளும் இடங்களிலெல்லாம்,
வேதம் நிலைகொள்ளும். வேதம் நிலைகொள்ளும் இடங்களிலெல்லாம்,
தர்மம் நிலைகொள்ளும். தர்மம் நிலைகொள்ளும் இடங்களிலெல்லாம்,
அமைதி நிலைகொள்ளும். வாழ்வுதேடி வந்த எமை வரவேற்ற இம்மண்ணுக்கு, அமைதியைப் பரிசளித்தல்ஆனந்தமல்லவா? அது நோக்கியே கம்பகாவியத்தை, இம்மண்ணில் பயிரிட முயல்கிறோம். எம்முயற்சி உங்களின் அருள் நோக்கியது. நம் தலைமுறை இங்கு தமிழர்களாய் வாழ,
அன்போடு வாருங்கள் பணிவோடு அழைக்கின்றோம்உங்கள் கம்பன் குடும்பத்தார்.
https://www.you
tube.com/watch?
https://www.youtube.com/watch?
No comments:
Post a Comment