தமிழ் சினிமா


குற்றமே தண்டனை 

தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து செல்ல ஒரு சிலரே போராடி வருகின்றனர். இந்த லிஸ்டில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இடம்பிடித்தவர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் இளையராஜா இசையில், விதார்த், பூஜா நடித்துள்ள படம் குற்றமே தண்டனை.

கதைக்களம்

ஒரு கொலை பல பேரின் வாழ்வில் தொடர்புடையதாக மாறுகிறது, அந்த கொலை எதற்காக நடந்தது, ஏன் நடந்தது, யார் செய்தார்கள், அந்த கொலையால் இவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகின்றது என்பதை மிகவும் யதார்த்தமாகவும், த்ரில்லாகவும் கூறியிருக்கிறார் மணிகண்டன்.

படத்தை பற்றிய அலசல்

மணிகண்டன் எப்போதும் தரமான படத்தை தான் இயக்குவேன் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் போல, வெற்றிக்காக போராடி வரும் விதார்த்தை இந்த படத்தில் தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்டலாம்.
அவரும் உடம்பில் ஒரு குறையுடன் பயணிக்கும் காட்சிகள் மிகவும் யதார்த்தம், படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் யதார்த்தமாக வந்து செல்கின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் சிறியது என்றாலும் மனதில் பதியும் படி நடித்து செல்கிறார், நாசர், ரகுமான், பூஜா என அனைவரும் கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், அவரே இயக்கம் ஒளிப்பதிவு என்பதால் தனக்கு என்ன மாதிரியான காட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அழகாக காட்டியுள்ளார்.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, கதைக்களம்.
இளையராஜாவின் பின்னணி இசை, எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு வேண்டாம் என்று உணர்ந்து செய்துக்கொடுத்துள்ளார்.
படத்தின் வசனங்கள்.

பல்ப்ஸ்

மெதுவாக செல்லும் திரைக்கதை.
மொத்தத்தில் குற்றமே தண்டனை படத்தின் கதாபாத்திரம் மட்டுமின்றி நம்மையும் பதட்டப்பட வைக்கின்றது. சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்.
Direction:
Music:

நன்றி   cineulagam 

No comments: