அம்மா - - அபிநயா

.


ஆடிமாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் ஆட்டிவைத்திடும் என்றபோதிலும் ஆவல்!
ஆயகலைகள் அறுபத்திநான்கையும்
கற்றுத்தர ஆசை!
அழகு தேவதையாய் அலங்கரிப்பு!
இன்முகமும் ,இனிய பேச்சும்
உபச்சாரமும்,உணவும் அடையாளங்கள்!
என் வெற்றிகளில் என்னைவிட வெற்றிக்களிப்பு!
விருதோ ,வேலையோ சிறப்பாக இருக்க சிந்திப்பு!
அர்த்தமில்லா புலம்பல்களையும்
அமைதியாய் கேட்டு ஆறுதல்!


கண்டிப்பான வார்த்தைகள் கட்டுக்கோப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டி!
எலும்புமுறிவு என்காலிலா அல்ல உங்கள் அகத்திலா  என்று என்னுள் எண்ணம்!
பெண்ணியத்தை கண்ணியத்தோடு கற்பிப்பு!
வள்ளுவன் வாக்கை வாழ்ந்தேன் என்று வாழ்த்து!
திருமணத்திற்கு பின் தங்கள் செயல்பாடு சிந்தையிலேறி என் செயலில் செயல்படுகிறது
அழகான அம்மா எனக்கு மட்டுமல்ல என் மகளுக்கும் என்று ஆணவம் கொண்டேன் !
அன்னை தூரத்தில் இல்லை
அமிர்தமாய் அருகிலேயே  இருக்கிறாள் அம்மா!

No comments: