கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்:-

.

இலங்கை மத்திய வங்கியின் 14ம் ஆளுனராக கலாநிதி இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்காக இந்திரஜித்தை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி பிறந்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஒர் பொருளிளியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற கலாநிதி இந்திரஜித், இங்கிலாந்தின் ஹாரோவ் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த கலாநிதி இந்திரஜித், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்.

1973ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் சேவையில் இணைந்து கொண்ட அவர் 1989ம் ஆண்டு வரையில் பொருளாதார ஆய்வு, புள்ளி விபரவியல் மற்றும் வங்கி கண்காணிப்பு பிரிவில் பணியாற்றியிருந்தார்.

1981ம் ஆண்டு முதல் 1989ம்ஆண்டு வரையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிலும் கடமையாற்றியிருந்தார்.
அதன் பின்னர் பொதுநலவாய நாடுகள் செயலகத்தில் 1990ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையில் கடமையாற்றியுள்ளார். பொருளாதார விவகாரப் பிரிவின் பணிப்பாளராக அவர் பொதுநலவாய செயலகத்தில் கடமையாற்றியிருந்தார்.

புயடடநழn எனப்படும் உலகின் முதனிலை முதலீட்டு நிறுவனமொன்றின் விசேட ஆலோசகராக தற்போது கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1971 -72களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் கலாநிதி இந்திரஜி;த் கிரிக்ட் விளையாடியுள்ளதுடன், ரக்பி போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

1974ம் ஆண்டு இலங்கை ரக்பி அணியின் தலைவராகவும் இந்திரஜித் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கும் ஒர் நடவடிக்கையாகவும் குமாரசுவாமியின் நியமனம் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.இதற்கு முன்னதாக மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் கடமையாற்றியிருந்தார்.

அவரது பதவிக் காலம் கடந்த மாதம் 30ம் திகதியுடன் பூர்த்தியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆலேசானை பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்த நியமனத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.