கரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடு

.

கிளிநொச்சி திருநகர் இளையதம்பி நடராசாவின் கரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடும், அவரது வாழ்கை குறிப்புகள் ஆவணப்படத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை பிறபகல் நான்கு மணிக்கு கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளரான இளையதம்பி நடராசா அவர்கள் ஓய்வு எனும் சிறுகதை தொகுதியை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். தற்போது கரைசேரா படகுகள் அவரது இரண்டாவது சிறுகதை தொகுதியாகும்.

கரைச்சி பிரதேச செயலக கலாச்சார பேரவையின் வெளியிடாக இது அமைந்துள்ளது. அத்தோடு மூத்த கலைஞர் என்ற வகையில் அவரை மதிப்பளிக்கும் நோக்குடன் அவரது வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஆவணப்படம் இறுவெட்டும் வெளியிடப்பட்டது.

மேலும் நூலுக்கான வாழ்த்துரையை காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவாவும் ஆய்வுரையை கவிஞர் கருணாகரனும் நிகழ்த்தினார்கள்.


முதற்பிரதியை பிரதேச செயலாளர் வெளியிட்டு வைக்க பண்டிதர் பரந்தாமன் கவின்கலை மன்ற இயக்குநர் பெற்றுக்கொண்டார். மேலும் ஆவணப்படத்தின் முதல் இறுவெட்டை சிறிலங்கா காப்புறுதி நிறுவன கிளிநொச்சி முகாமையாளா் பெற்றுகொண்டார்

கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரனின் வழிகாட்டலில் கலாச்சார உத்தியோத்தர் றஜிவனின் முயற்சியால் இராமேஸ்வரன் மற்றும் றெஜினோல்ட் ஆகியோரின் பங்களிப்புடன் கரைச்சி பிரதேச கலைஞர்களின் வாழக்கை குறிப்புகள் அடங்கிய இறுவெட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளைதம்பி நடராசாவின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஆவணப்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.​