யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் இரவு உணவு நிகழ்வு 2016

.
யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் இரவு உணவு நிகழ்வு 2016 சனிக்கிழமை இரவு  Grantham hall,  seven hill இல் இடம் பெற்றது . யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினர் வழமை போலவே இம்முறையும் மண்டபம் நிறைந்த பழைய மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நிகழ்வை ஆரம்பித்தனர். சௌந்தரி கணேஷன்  நிகழ்ச்சியை  தொகுத்து வழங்க இவ்வாண்டு தலைவர் திரு விசாகுலன் வரவேட்புரையை வழங்கினார் . யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும் தற்போது சிட்னி பல்கலை கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராக இருப்பவருமான Dr.கணேசலிங்கம் அவர்களும் அவர்தம் பாரியாரும் குத்து விளக்கேற்றி நிகழ்வை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார்கள் .


தொடர்ந்து பரத நாட்டிய நடனம் கண்ணை கவரும் படியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சிட்னியின் இளம் பாடகர்களின் பாடல் நிகழ்வை திரு ரமேஷ் நடராஜா  ஒருங்கமைத்திருந்தார் . இனிமையான  பாடல்கள் பல பாடப்பட்டன. சிட்னியின் இளம் பாடகர்களின் திறமையை பாராட்ட வேண்டும். பாவலன் பாடிய சங்கராபரணமே பாடல் சிகரம் வைத்தாற்போல்  இருந்தது .

ஒரு குட்டிப் பெண் என்னமாய்  எலந்தபழம் பாட்டிற்கு ஆடி சபையோரை ஆட்டிவைத்துவிட்டார்.நளினமும்  பாவமும் அவரிடம் கைகட்டி சேவகம் புரிந்தது.  ஜனனி பீடிலின் Indian dance academy நடன பள்ளி மாணவர்களின் Bollywood ஆடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. 
தொடர்ந்து உபதலைவர் திரு .நாகேந்திரம் அவர்கள் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினர் தாயகத்தில் ஆற்றும் செயற்பாடுகள் குறித்த விவரண படத்தோடு விளக்க குறிப்பும் கொடுத்து  பழைய மாணவர்களின் செயற்பாடுகளையும்  பாராட்டினார். 
இந்த செயற்பாடுகளுக்காக ஒரு American Action இடம்பெற்றது . இதை திரு A.J.ஜெயச்சந்திரா திறமையாக நடாத்தி 1300 வெள்ளிகள் வரை சேகரித்துக் கொடுத்தார் .

பல்சுவை நிகழ்வோடு  அறுசுவை உணவும் கொடுத்து ஒரு மாலை பொழுதை இனிமையானதாகவும் பொறுப்பானதாகவும் மாற்றியிருந்தார்கள் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினர் . 

Add caption