இலங்கைச் செய்திகள்


யோசித்தவுக்கு பிணை : வெளிநாடு செல்ல மறுப்பு

சி.எஸ்.என் தொலைகாட்சி விவகாரம் : நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு

தெஹி­வளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்­குதல் ; இரு­வ­ருக்கு சிறைத்­தண்­டனை

 பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி

நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கைது

நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை

பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு

யோசித்தவுக்கு பிணை : வெளிநாடு செல்ல மறுப்பு


14/03/2016 சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவிட்டுள்ளது. 
மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி சி.எஸ்.என் தொலைகாட்சி விவகாரம் : நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு


14/03/2016 சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அனுமதியின்றி சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி தெஹி­வளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்­குதல் ; இரு­வ­ருக்கு சிறைத்­தண்­டனை

15/03/2016 1996ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் தெஹி­வளை ரயில் நிலைய குண்டுத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில், தமி­ழீழ விடு­தலைப் புலி அமைப்பின் சந்­தே­க­ந­பர்கள் இரு­வ­ருக்கு 2 வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது சந்­தே­க­ந­பர்கள் தமது குற்­றத்தை நீதி­மன்றில் ஒப்புக் கொண்­டுள்­ள­னர்.

விட­யங்­களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஐ­ராங்­கனி பெரேரா குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் முன்­ன­தாக சுமார் 20 வரு­டங்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்­துள்­ளதால், 2 வரு­டங்கள் தளர்த்­தப்­பட்ட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்ளார்.
மேலும், தண்­டனைக் காலம் முடிந்­ததும் ஒரு வருடம் வவு­னியா பூந்­தோட்டம் புனர்­வாழ்வு முகா­முக்கு இவர்கள் அனுப்­பப்­பட வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.
முன்­ன­தாக, இந்த தாக்­குதல் சம்பவம் தொடர்பில் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி

14/03/2016 தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ.

இதேவேளை, தனது சகோதரன்  கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கைது


15/03/2016 இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை


16/03/2016 நிஷாந்த ரணதுங்கவிற்கு கடுவெல நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலைசெய்துள்ளது.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்‌ஷ உட்பட நால்வருக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் இன்று நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்


17/03/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்று கொழும்பில் நிர்மாணித்த இல்லம் மற்றும் கடைத் தொகுதி தொடர்பில் ஆரம்ப அனுமதியை பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் இன்று பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.   நன்றி வீரகேசரி

பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு


17/03/2016நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக இன்­றைய தினம் பொது எதி­ர­ணி­யி­னரால் ஹைட் பார்க் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 48 எம்.பி.க்கள்   கள­மி­றங்­  கி­யி­ருந்­தனர்.
அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்­டத்­தில் பல்­லா­யிரக் கணக்­கான கட்சி ஆத­ர­வாளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளி கட்­சியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது. இன்று நடை­பெற்ற போராட்­டத்தின் கார­ண­மாக  கொழும்பில் பல பகு­தி­க­ளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.
இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்காதே , எட்காவை உட­ன­டி­யாக நிறுத்து போன்ற கோஷங்­களை எழுப்­பிய வண்­ணமும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் புகழ்­பா­டிய வண்­ணமும்  ஆத­ர­வா­ளர்­கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் சபா­நா­ய­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோமா­வன்ஸ அம­ர­சிங்க, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ஸ, தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன , வாசு­தேவ நாண­யக்­கார , சந்­தி­ர­சிறி கஜ­தீர, உதய கம்­மன்­பில,  முன்னாள்  அமைச்­சர்­க­ளான திஸ்ஸ விதா­ரன, ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜ­பக்ஷ, கெஹ­லிய ரம்­புக்­வெல, சி.பி ரத்­நா­யக்க, லோஹான் ரத்­வத்தை ,குமார வெல்­கம, காமினி லொக்­குகே, சுசந்த புஞ்சி நிலமே, திலும் அமு­னு­கம, கீதா குமா­ர­சிங்க ,எஸ்.சந்­தி­ர­சேன, மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே, ரோஹித்த அபே­கு­ண­வர்­தன ,டலஸ் அழ­கப்­பெ­ரும ,மஹிந்த யாப்பா அபே­வர்­தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.
இந்த போராட்­டத்­தில் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். 
இதன்­போது போராட்­டத்­திற்கு பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்தது. 
இந்த போராட்டத்தின் காரணமாக கொழும்பின் நகர மண்டபம், மருதானை, கொம்பனிதெரு ,பொரளை, நாராஹேன்பிட்டிய ,கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. இதன்காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.   நன்றி வீரகேசரி