அடுத்தபுதன்கிழமை உன்னுடையமுறை - சிறுகதை - அ .முத்துலிங்கம்

.
வாரத்தில்ஏங்கம்ழுநாட்கள்இருப்பதில்தான்முதல்பிரச்சினைஆரம்பமானது. இதைமாற்றுவதுஅவனுடையஆற்றலுக்குஅப்பால்பட்டது. வாரத்தில்ஆறுநாட்கள்இருந்திருக்கலாம்; எட்டுநாட்கள்கூடபரவாயில்லை. ஒற்றைப்படையாகஏழுநாட்கள்வந்ததில்தான்விவகாரம். 1700 வருடங்களுக்குமுன்புரோமாபுரிபெரும்சக்கரவர்த்திகொன்ஸ்டன்ரைன்வாரத்தில்ஏழுநாட்கள்என்றுதீர்மானித்ததைஅவன்எப்படிமாற்றமுடியும்.

இதனால்மணமுடித்தஆரம்பத்தில்சிலதொந்திரவுகள்ஏற்பட்டுதீர்க்கப்பட்டன. அவன்மனைவிகருவுற்றபோதுஅவைஇன்னும்தீவிரமடைந்தன. லவங்கிபிறந்தபோதுகனவிலும்அவன்நினைத்திராதபலபிரச்சனைகள்உருவாயின.

ஆனால்அவன்மனைவிபட்டியல்போடுவதில்திறமைசாலி. எந்தப்பிரச்சனையையும்பட்டியல்போட்டுதீர்த்துவிடுவாள். லவங்கிபிறந்தபோதுஏற்பட்டமேலதிகவேலைகளுக்கும்பட்டியல்தயாரித்துஅவற்றைசமமாகப்பங்கிட்டுக்கொண்டார்கள். குழந்தைக்குஉடைமாற்றுவது, குளிக்கவார்ப்பது, மழலைக்கீதம்பாடுவது, நித்திரையாக்குவது, உணவு/ பால்கொடுப்பது, விளையாட்டுக்காட்டுவது, நாப்பிமாற்றுவதுஎல்லாம்பட்டியலில்இருந்தன. எவ்வளவுஎளியவேலைஎன்றாலும்அதுபட்டியலின்பிரகாரம்சரிசமமாகபிரிக்கப்பட்டது.


அப்போதுதான்புதன்கிழமைபிரச்சனைஉருவானது. ஞாயிறு, திங்கள், செவ்வாய்அவனுடையமுறை. வியாழன், வெள்ளி, சனிஅவளுடையமுறை. புதன்கிழமைநடுவேவந்தது. அதையார்செய்வது. அதற்கும்அவள்ஒருவழிகண்டுபிடித்துசுமுகமாகத்தீர்த்துவைத்தாள். ஒருமாதம்புதன்கிழமைஅவன்வசம்; அடுத்தமாதம்அவள்வசம்.

பிறந்துபத்துமாதங்களில்லவங்கியின்எடை14 றாத்தல்கூடியிருந்தது. அதில்ஏழுறாத்தல்அவனுக்குசொந்தம்; மீதிஏழுறாத்தல்அவளுக்குசொந்தம். திங்கள்காலைஏழுமணிக்குஅவன்லவங்கிக்குபால்கொடுத்து, ஆடையணிந்துகாரின்பின்இருக்கையில்வைத்துகட்டிஅவளைகுழந்தைகள்காப்பகத்துக்குஎடுத்துசெல்வான். மாலையில்அவள்லவங்கியைஅழைத்துவருவாள். இந்தவேலைப்பங்கீடுகறாரானஒழுங்குடன்நடைபெற்றது.

தவழத்தொடங்கியபோதுலவங்கிக்குபெரியகுழப்பம்உண்டானது. அவளுடையபொம்மைஒன்றைநெடுநேரம்கூர்ந்துபார்ப்பாள். தவழும்நிலைக்குவந்துதயாராவாள். பிறகுதலையைகீழேபோட்டுக்கொண்டுஉந்திஉந்திபின்பக்கம்போய்விடுவாள். அந்தப்பொம்மைஇன்னும்தூரமாகிவிடும். தன்இயக்கத்தில்ஏதோதவறுஇருப்பதுலவங்கிக்குவெகுகாலமாகத்தெரியவில்லை. இறுதியில்எப்படியோமுன்னுக்குதவழப்பழகிவிட்டாள்.

புத்தகங்களில்லவங்கிக்குஅளவில்லாதபிரியம். அவன்படித்தால்கேட்டுக்கொண்டேஇருப்பாள். சிலவேளைகளில்வேண்டுமென்றேபுத்தகத்தைஅவன்தலைகீழாகவைப்பான். அதைதிருப்பிவைக்கலாம்என்பதுலவங்கியின்மூளையின்எல்லைக்குள்வராது. எதிர்ப்பக்கம்தவழ்ந்துபோய்உட்காருவாள். அவன்மனைவியைப்பார்த்து'உன்மூளைஉன்மகளுக்கு' என்றுசீண்டுவான். பட்டியல்காரி'இல்லை, சரிபாதி' என்பாள்.

அவன்ஒருபல்கலைக்கழகத்தில்விரிவுரையாளர். வேலைகனமில்லாதது. ஆனால்ஒருசிக்கல்இருந்தது. அவனுடையவீட்டிலிருந்துபல்கலைக்கழகம்ஒன்றரைமணிநேரகார்ப்பயணதூரத்தில்இருந்தது. இப்படிஒருநாளில்அவனுக்குமூன்றுமணிநேரம்பிரயாணத்தில்செலவழிந்துவிடும். வீடுதிரும்பும்போதுமிகவும்களைத்துப்போய்வந்துசேர்வான்.

ஒருதனியார்கணக்காய்வுநிறுவனத்தில்அவள்கடுமையாகஉழைத்தாள். தன்கைவசம்உள்ளவேலையெல்லாம்முடிவதற்கிடையில்நேரம்தீர்ந்துவிடுகிறதுஎன்றுதினமும்முறைப்பாடுவைப்பாள். நாளுக்கு12 ெ14 மணிநேரவேலை. இதுதவிரஆலோசனைக்கூட்டங்களில்பங்கேற்பு, நெடுந்தூரப்பயணம்எல்லாம்உண்டு.

எந்தவிதப்பிரச்சனைகளையும்முன்கூட்டியேஅனுமானித்துஅவற்றைஎதிர்கொள்வதுஅவர்கள்வழக்கம். அதன்படியேநாளாந்தபட்டியல்தயாரித்துஅவனுக்குெஅவளுக்குஎன்றுபிரித்துசமாளிக்கபழகிக்கொண்டனர். மேலதிகவேலையாககடமைகள்சரிவரநிறைவேற்றப்படுகின்றனவாஎன்பதையும்அவளேகவனித்துக்கொண்டாள்.

அவனுடையமனைவிஇரண்டுநாள்கருத்தரங்குஒன்றுக்குஆயிரம்மைல்தூரம்செல்கிறாள். இதுதான்அவள்முதல்தடவைலவங்கியைவிட்டுபிரிவது. அவன்இரண்டுஇரவுகளும், இரண்டுபகல்களும்லவங்கியைதனியாககவனிக்கவேண்டும். அதுஒன்றும்பெரியபிரச்சினைஇல்லை. அவள்திரும்பியபிறகுவேலைப்பங்கீடுகளைமீண்டும்சரிப்பண்ணிக்கொள்ளலாம்.

வழக்கம்போலடேகேரில்இருந்துலவங்கியைகூட்டிவந்தான். பால்கொடுத்து, குளிக்கவார்த்துசரியாகஏழுமணிக்குபடுக்கையில்போட்டான். வழக்கத்திலும்பார்க்கலவங்கிஅன்றுசோர்வுடன்காணப்பட்டாள். இரவுபடுக்கமுன்லவங்கியின்அறைக்குசென்றுபார்த்தான். அவள்அனுங்குவதுகேட்டது. தொட்டுப்பார்த்தால்உடம்புகணகணவென்றுகொதித்தது. வீட்டிலேஎப்பொழுதும்தயாராகஇருக்கும்ரைலனோலைகொடுத்தான். ஒருமணிநேரம்பொறுத்துபார்த்தபோதுகாய்ச்சல்கொஞ்சமும்குறையவில்லை. ஆனால்மூச்சுமுட்டல்அதிகமாகிசிணுங்கல்அழுகையாகமாறியிருந்தது.

லவங்கிஇன்னும்இருபதுறாத்தல்எடையைஎட்டவில்லை. காரில், பின்பக்கம்பார்க்கும்சீட்டில்அவளைப்போட்டுகட்டி, அவசரச்சிகிச்சைப்பிரிவுக்குவிரைந்தான். மனைவிஇருந்தால்குழந்தைபக்கத்தில்இருப்பாள். இன்றுயாருமில்லை. பின்சீட்டில்இருந்தஅவளைப்பார்க்கமுடியாததுபெரியகுறையாகப்பட்டது. லவங்கிமூச்சுவிடத்திணறுவதும், முனகுவதும்கேட்டது. புறப்படுமுன்அவளுடையகாய்ச்சல்103 டிகிரி. வேகஎல்லைகளைக்கவனிக்காமலும், மஞ்சள்கோடுகளைமதிக்காமலும், அடிக்கடிமிருதுவானகுரலில்'லவங்கி, லவங்கி' என்றுஉச்சரித்தபடியேகாரைஓட்டினான்.

நேற்றுலவங்கியிடம்அவன்மிகவும்கடுமையாகநடந்துகொண்டுவிட்டான். பாத்திரம்கழுவியில்அவளுக்குமோகம்அதிகம். அவன்மூடியைதிறந்ததும்அவள்தவழ்ந்துவந்துஏறிஉட்கார்ந்துகொள்வாள். இறங்காமல்அடம்பிடிப்பாள். சத்தமாகஅவன்ஓர்அதட்டல்போட்டான். அவள்விம்மிவிம்மிஅழத்தொடங்கினாள். மிகச்சாதாரணமானஒருஇன்பத்தைதான்அவளுக்குமறுத்ததைநினைத்தபோதுஎன்னவோசெய்தது.

அவசரப்பிரிவில்லவங்கியைபரிசோதித்தடொக்டருடையமுகத்தைகூர்ந்துகவனித்தான். அவர்எல்லாவிதசோதனைகளையும்செய்தார். காய்ச்சலைக்குறைக்ககடுமையானமருந்தொன்றைக்கொடுத்துஒருமணிநேரம்காத்திருக்கச்சொன்னார். அப்படியேசெய்தான். இருந்தும்உஷ்ணம்குறையவில்லை. லவங்கிஅடிக்கடிகண்களைதிறந்துபார்த்தாள். அதற்குகூடபோதியபலம்இல்லாததால்மூடிவிட்டாள். ஒருஇரும்புக்கதவைமூடுவதுபோலபெரியசத்தத்துடன்சுவாசம்வந்தூகாண்டிருந்தது. ஒவ்வொருமுறையும்இந்தசுவாசம்தான்கடைசிசுவாசமாகஇருக்குமோஎன்றபயம்எழுதூகாண்டேஇருந்தது.

அவசரசிகிச்சைபிரிவுக்குஅம்புலன்ஸ்வாகனங்கள்அடிக்கடிவந்தபடியேஇருந்தன. கடைசியாககைஅறுந்துதொங்கியபடிஒருசிறுவனைசில்லுவைத்தகட்டிலில்தள்ளிக்கொண்டுவந்தார்கள். பின்னால்பெற்றோர்ரத்தக்கறைஉடையுடன்விரைந்தாார்கள். இவனால்தொடர்ந்துமாறிக்கொண்டுவரும்வேதனைக்காட்சிகளைதாங்கமுடியவில்லை. லவங்கியைநெருக்கமாகஅணைத்தபடிகாத்திருந்தான்.

டொக்டர்மறுபடியும்வந்துமேலும்பரிசோதனைகள்செய்யவேண்டும்என்றார். ஒருதாதிவந்துரத்தம்எடுப்பதற்காகஊசியைசெலுத்தினாள். ஐந்துநிமிடநேரம்ஐந்துஇடங்களில்கிண்டினாள். பலதடவைமுயற்சிசெய்தும்அவளால்ரத்தநாளத்தைகண்டுபிடிக்கமுடியவில்லை. தலைமைதாதிபோலதெரிந்தஒருத்திவந்துமீண்டும்முயற்சிசெய்தாள். லவங்கிதன்கையைக்கொடுத்துவிட்டுஇந்தஉலகத்தில்தன்னைகாக்கஒருவருமேஇல்லைஎன்பதுபோலஉச்சக்குரலில்கதறினாள். போதியரத்தத்தைஉறிஞ்சிஎடுத்தபிறகுமுன்யோசனையாகஊசியைவெளியேஎடுக்காமல்கையுடன்சேர்த்துகட்டுப்போட்டுவைத்தார்கள். இப்பொழுதுலவங்கிஅவன்கழுத்தைகட்டிப்பிடித்தபடி, கால்கள்இரண்டையும்அவன்இடுப்பில்பாம்புபோலசுற்றிக்கொண்டு, விம்மியபடியேஇருந்தாள்.

அவளுடையசின்னஉடம்பைவதைப்பதற்குஇன்னும்பலதயாரிப்புகள்நடந்தன. இப்பொழுதுசிறுநீர்வேண்டும்என்றார்கள். பச்சைக்குழந்தையிடம்சிறுநீர்எடுப்பதுஎப்படி. அவர்கள்விடுவதாகஇல்லை. அதேதாதிவந்தாள். அவளுடையகெட்டியாகநிற்கும்வெள்ளைகவுனைபார்த்தகணமேலவங்கிகத்தத்தொடங்கினாள். ஒருமிகமெல்லியட்யூபைஅவள்உடம்புக்குள்செலுத்தினாள். லவங்கியின்அலறல்எல்லையைஅடைந்துவிட்டகாரணத்தினால்உடலைவில்லுப்போலஎதிர்ப்பக்கமாகவளைத்துதிமிறிதன்எதிர்ப்பைகாட்டினாள்.

டொக்டர்இரவுஆஸ்பத்திரியில்தங்கவேண்டும்என்றார். அவள்கையிலேஒருபிளாஸ்டிக்காப்புமாட்டப்பட்டது. அதிலேலவங்கியின்பேரும், தேதியும், ஒருநம்பரும்இருந்தது. லவங்கியைபற்றியஎல்லாபதிவுகளும்கம்புயூட்டரில்இந்தநம்பரின்கீழ்பதியப்படும்என்றார்கள். லவங்கியின்வீட்டுஆடையைகளைந்துவிட்டு, பின்னுக்குமுடிச்சுப்போடும்ஒருதொளதொளத்தநீலகவுனைஅணிவித்தார்கள். தடுப்புபோட்டஉயரமானகட்டிலில்அவளைக்கிடத்தி, அந்தச்சின்னக்கையிலேகுத்தியிருந்தஊசியின்மூலம்சேலைன்சொட்டுகளைஉடம்பிலேசெலுத்ததொடங்கினார்கள். கால்பெருவிரலில்தொடுத்தவயர், அவளுடையஉயிர்விநாடிகளை, கம்புயூட்டர்திரையில்இருதயத்துடிப்பாககாட்டியது. மூக்கிலேபிராணவாயுவும்போனது. இவைஎல்லாம்ஆயத்தங்கள்தான். சிகிச்சைஇன்னும்ஆரம்பிக்கவில்லைஎன்றார்கள். கடுமையானவலியிலிருந்துஅவள்மெள்ளமெள்ளவிடுபட்டுவருவதுபோலதெரிந்தது. அவன்அவளுடையமுதுகைவருடியபடியேஇருந்தான்.
இரவுமணிஇரண்டிருக்கும். மறுபடியும்டொக்டர்வந்தார். சோதனையில்கிடைத்ததகவல்கள்சிகிச்சைக்குபோதாது, லவங்கியின்சுவாசப்பைகளைஎக்ஸ்ரேஎடுக்கவேண்டும்என்றார். இதற்குமுன்எத்தனையோபேர்படுத்தகட்டிலில்ஒருபாவப்பட்டஜீவனைப்போலசுருண்டுபோய்லவங்கிஅப்பொழுதுதான்சற்றுஅயர்ந்திருந்தாள்.

நூறுபின்னல்கள்செய்துமடித்துக்கட்டியதலையோடுகறுப்புஇனத்துஇளைஞன்ஒருவன்வந்தான். எக்ஸ்ரேஎடுப்பதற்குஅவனேவண்டியில்அவளைத்தள்ளிப்போனான். அவள்அணிந்திருந்தநீலநிறசைஸ்பெரிதானஆஸ்பத்திரிகவுனைஅகற்றினார்கள். ஓர்இரவிற்கிடையில்அவளுடையவிலாஎலும்புகள்வரிவரியாகதள்ளிக்கொண்டுநின்றன. ஈயக்கவசம்அணிந்தஊழியர்இருவர்லவங்கியைதூக்கிபிடித்துசதுரமானஉலோகத்தில்நெஞ்சைஅழுத்திஎக்ஸ்ரேஎடுத்தார்கள். லவங்கியாரோதுப்பாக்கியைகாட்டியதுபோலஇரண்டுகைகளையும்தூக்கிப்பிடித்தபடிதலையைகுனிந்துகதறினாள். ரத்தம்எடுக்கும்போதும், ரப்பர்குழாயைஉள்ளேசெலுத்தும்போதும்இல்லாதஅழுகையாகஇந்தஅலறல்இருந்தது. அந்நியர்கள்இப்படிஅமுக்கிப்பிடிக்கஅனுமதித்ததன்அப்பாவைநம்பமுடியாதகண்களினால்கெஞ்சினாள். அந்தபரிதாபமானவிழிகள்அவன்நெஞ்சத்தின்ஆழமாகபதிந்தன.

டொக்டர்காலைஐந்துமணிக்குவந்தார். மறுபடியும்பரிசோதனைகள். சேலைனுடன்சேர்த்துபொதுப்படையானமருந்துசெலுத்தினார்கள். இதுவும்தற்காலிகஏற்பாடுதான். சுவாசப்பையில்நீர்கட்டியிருக்கிறது, அதைஅகற்றவேண்டும். பெரியடொக்டரையும், ரேடியோலஜிஸ்டையும்கலந்துதான்முடிவுக்குவரமுடியும்என்றார். அவனுக்குதிக்கென்றது. என்றென்றைக்குமாகஅவனைவிட்டுலவங்கிபோய்விடுவாளோஎன்றதிகில்பிடித்தது. . அந்தநேரம்பார்த்துஅவன்மனைவிகைபேசியில்அழைத்தாள். அன்றையகருத்தரங்கில்அவள்தான்முதல்பேச்சாளர். அவளைக்கலவரப்படுத்தஅவன்விரும்பவில்லை. வீட்டிலேஎல்லாம்ஒழுங்குமுறையாகநடக்கிறதுஎன்பதுபோலசொல்லிவைத்துவிட்டான்.

அவனுடையபல்கலைக்கழகத்தைஅழைத்துதகவல்விட்டான். அன்றுஅவனுக்குமிகப்பிரதானமானஒருசந்திப்புஇருந்தது. கடந்தஆறுமாதகாலமாகமுயற்சிசெய்துகிடைத்தது. அதையும்கான்சல்பண்ணினான். ஒருஇரண்டுஅவுன்ஸ்பாலைபோத்தலில்ஊற்றிஅவளுக்குபுகட்டப்பார்த்தான். லவங்கிமறுபக்கம்திரும்பிபடுத்துவிட்டாள்.

லவங்கியின்காய்ச்சல்குறைந்துவிட்டதாகதாதிசொன்னதுகொஞ்சம்ஆசுவாசமாகஇருந்தது. மூச்சுசிரமப்பட்டுபோனதுஆனால்முந்தியமாதிரிதிணறல்இல்லை. முனகல்மாத்திரம்இருந்தது. சுவாசப்பை90 வீதம்வேலைசெய்வதாகமீட்டர்சொன்னது. இருதயத்தின்ஒலியைகம்புயூட்டர்வரைபடமாககாட்டியது. அதில்ஏற்படும்சிறுஒலிமாற்றமும்இவனுக்குபகீரென்றது.

கடைசியில்ரேடியோலஜிஸ்ட்வந்தபிற்பாடுசுவாசப்பையில்தண்ணீர்கட்டவில்லை. ஒருசுவாசப்பைமடிந்துசுருங்கிவிட்டது. லவங்கி24 மணிநேரமாகஒருசுவாசப்பையில்தான்உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறாள். சேலைனுடன்சேர்ந்துபுதியமருந்தைஉதூசலுத்தினால்சுவாசப்பைபழையநிலமைக்குமீண்டுவிடும். பயப்படத்தேவைஇல்லைஎன்றார்.
அவனுக்குகொஞ்சம்ஆறுதலாகஇருந்தது. மெல்லலவங்கியைதடவியபடியேபார்த்தான். பலவிதவயர்களும், டியூபுகளும்அவள்உடலில்இருந்துமேலேபோயின. கயிற்றிலேவேலைசெய்யும்ஒருபாவையையாரோஎறிந்துவிட்டதுபோலநடுக்கட்டிலில்அநாதரவாகக்கிடந்தாள்.

பின்னேரம்நாலுமணியளவில்ஒருதிருப்பம்ஏற்பட்டது. சுவாசப்பைவேலை100 வீதம்காட்டியது. முதன்முதலாகஅப்பொழுதுதான், இத்தனைமணிநேரத்துக்குபிறகுவாயைதிறந்துலவங்கிபுன்னகைசெய்தாள். இயக்கமில்லாதநிலையிலும்தன்மெலிந்துபோனவயிற்றைமெத்தையிலிருந்துஎம்பிஎம்பிக்காட்டியபடியேசிரித்தாள். அவனுக்குமனதைஎன்னவோபிசைந்தது.

ஆறுமணிக்குமுதன்முதலாகபால்இரண்டுஅவுன்ஸ்குடித்தாள். தாதிவந்துபார்த்துவிட்டுஇனிமேல்பயப்படஒன்றுமில்லை, பசிக்கும்போதெல்லாம்பால்கொடுக்கலாம்என்றாள். அவனுக்குகொஞ்சம்நிம்மதிதிரும்பியது. மனைவியைகூப்பிட்டுசொல்லுவோமாஎன்றுநினைத்தான். மறுபடியும்இப்பொழுதுசொல்லிஎன்னபிரயோசனம்வந்தபிறகுபார்க்கலாம்என்றுஎண்ணத்தைமாற்றிவிட்டான். அன்றுஇரவுபார்க்கவந்தடொக்டர்நல்லமுன்னேற்றம்என்றார். எல்லாபரிசோதனைகளையும்மீண்டும்செய்தார். மூச்சுசீராகஇயங்குகிறது. இன்றுஇரவும்இப்படியேதாண்டிவிட்டால்நாளைபெரியடொக்டர்வீட்டுக்குபோகஅனுமதிப்பார்என்றார். வாழ்க்கையில்முன்னெப்போதும்கிடைக்காதஒருஆறுதல்அப்போதுகிடைத்தது.

ஆனால்புதியஅதிர்ச்சிஒன்றைஅன்றுஇரவுஅவன்எதிர்பார்க்கவில்லை. மனைவிவியிடம்இருந்துபத்துமணிக்குதொலைபேசிவந்தது. அவள்கலந்தூகாண்டகருத்தரங்கைப்பற்றிநிறையப்பேசினாள். மனதுநிறையசந்தோசமாகஇருந்தாள். அடுத்தநாள்மாலைவந்துவிடுவதாகக்கூறினாள். அப்போதுகூடசொல்லிவிடலாம்என்றுதோன்றியது. அவளுடையஅழகானநித்திரையைகெடுத்துஎன்னபிரயோசனம்என்றுதவிர்த்துவிட்டான்.

இருளூட்டப்பட்டஅறையின்நாற்காலியில்அமர்ந்தபடியேஅன்றுஉறங்கினான். இரவுபன்னிரெண்டுமணியிருக்கும். ஆஸ்பத்திரியில்இவனுடையஇரண்டாவதுஇரவு. திடாரென்றுலவங்கிஎழுந்துவீர்என்றுஅலறினாள். வயர்களும், டியூபுகளும்நாலுபக்கமும்இழுக்கநிலைகொள்ளாமல்துடித்தபடிபடுக்கையில்சுருளத்தொடங்கினாள். இவன்அவசரமணியைஅழுத்திவிட்டு, தடுப்பைகீழேஇறக்கிஅவளைவேகமாகஅள்ளினான். அவன்கையிலேலவங்கிவழுக்கியபடிதுடித்துகொண்டிருந்தாள்.

இரண்டுதாதிமார்ஓடிவந்தார்கள். லைட்டைபோட்டார்கள். ஊசிஏற்றப்பட்டஅவளுடையகைவீங்கிப்போய்மினுமினுத்தது. தாதிஉடனேயோசிக்காமல்ஊசியைநீக்கிகட்டையும்அவிழ்த்துவிட்டாள். லவங்கியின்விரல்கள்பந்துபோல்சுருண்டு, உள்ளங்கைரேகைகள்மறைந்துவிட்டதைபிரமிப்புடன்பார்த்தான். அதுஅவளுடையதுஅல்ல; வேறுயாருக்கோசொந்தமானதனியுறுப்புபோலஅசிங்கமாகஊதிப்போய்கிடந்தது.

ஊசிநழுவிசேலைன்தசைக்குள்போயிருக்கிறது. தாதிமார்வீக்கத்தைஅடக்குவதற்குசிகிச்சைகொடுத்தார்கள். லவங்கிஅப்படியேஅழுதுஅழுதுஇனிமேல்இயலாதுஎன்றநிலையில்ஓய்ந்துபோனாள். இருந்தும்அவளுடையஉடல்வெகுநேரமாகநடுங்கிக்கொண்டிருந்தது. இந்தஉலகத்தில்யாருமேஇல்லைஎன்பதுபோன்றதனிமையில்துயரமும், மெளனமும்அழுத்தஅவன்சுவரைவெறித்தபடிஉட்கார்ந்திருந்தான். அவனுடையஇருதயத்தைப்போலவேஅவனுடையமடியிலும்ஒருஉயிர்துடித்தது. ஒன்பதாவதுமாடியின்அந்தஅறைக்குள்சூரியனுடையமுதல்கிரணங்கள்நுழையும்வரைஅவன்அசையவில்லை.

காலைடொக்டர்வந்துபார்த்தபோதுவீக்கம்குறைந்திருந்தது. அதற்கானசிகிச்சைக்குமருந்துஎழுதினார். பிறகுபின்னேரம்வீட்டுக்குபோகலாம்என்றார். நம்பமுடியாததிகைப்பும், மகிழ்ச்சியும்அவனுக்குஏற்பட்டது. ஏதாவதுவிளையாட்டுகாட்டுவதற்குலவங்கியைஒருசிறுதள்ளுவண்டியில்வைத்துதள்ளிக்கொண்டுஅந்தவார்டைச்சுற்றிரவுண்டுவந்தான். ஒருமனிதஉடல்தாங்கக்கூடியஎல்லைமட்டுமானவலியைஅவள்அனுபவித்துவிட்டாள். அதைஎல்லாம்மறந்துபிரகாசமானஒருசிரிப்புசிரித்தாள். அவள்என்னகேட்டாலும்அந்தவிநாடிஅதைச்செய்வதற்குஅவன்சித்தமாயிருந்தான்.

நாலுமணியளவில்தாதிவந்தாள். அவளைக்கண்டதும்லவங்கிகண்களைத்தாழ்த்தி, அவன்தோள்களுக்குள்தலையைப்புதைத்துமறைந்துபோகப்பார்த்தாள். லவங்கிகையிலேமாட்டியபிளாஸ்டிக்காப்பைவெட்டினாள். அடுத்தஇரண்டுநாட்களும்என்னமருந்து, எப்போதுகொடுக்கவேண்டும்போன்றவிவரங்களைஅவள்சொல்லகுறித்துக்கொண்டான். லவங்கிக்குவந்ததுநியூமோனியா. ஒருசுவாசப்பைகொடூரமானகிருமிகளால்தாக்கப்பட்டிருந்தது. அடுத்தசுவாசப்பையும்எந்தநிமிடத்திலும்மடிந்திருக்கலாம். அவன்அவசரசிகிச்சைக்குவந்ததால்குழந்தைபிழைத்தாள். இனிமேல்கவனமாய்இருக்கவேண்டும்என்றாள்.

கிடைக்கமுடியாதபொக்கிஷம்ஒன்றுகிடைத்ததுபோலலவங்கியைஅள்ளிதூக்கிக்கொண்டான். பிரத்தியேகமானகுழந்தைஇருக்கையில்அவளைஇருத்திக்கட்டி, 'லவங்கி, லவங்கி' என்றுமெல்லியகுரலில்அழைத்தபடிகாரைக்கிளப்பினான். அவளுக்குபிடித்தபாட்டைவைத்தான். அந்தகீதம்காரைநிறைத்தது. லவங்கிமெதுவாகஇரண்டுபக்கமும்தலையைஆட்டியபடிதூங்கஆரம்பித்தாள்.

வீடுவந்ததும்விழித்துக்கொண்டாள். தனதுஅறையையும், தனதுபொம்மைகளையும்பார்த்துஆரவாரப்பட்டாள். இதுவரைகாணாதஒருபுதுஉலகத்துக்குள்வந்ததுபோலமகிழ்ச்சிஅவளைமூழ்கடித்தது. நாலுகால்களிலும்தவழ்ந்துதவழ்ந்துதன்முழுஅறையையும்திருப்திஏற்படும்வரைக்கும்சோதித்துஉறுதிசெய்தாள்.

அவளுடையபாலைசூடாக்கிபருக்கினான். இரவுஉடைக்குஅவளைமாற்றினான். நீலமேற்சட்டை, மஞ்சள்காற்சட்டை. அப்பொழுதுதான்அவனுக்குஞாபகம்வந்ததுஇரண்டுநாட்களாகதான்ஒன்றுமேஉண்ணவில்லைஎன்பது. ஆனால்சமைத்துசாப்பிடும்மூடில்அவன்அப்போதுஇல்லை. ஏதாவதுஇலகுவானஅயிட்டம்போதும். ஒருசூப்டின்னைதேடிஎடுத்து, ஒருபாத்திரத்தில்இட்டு, நுண்ணலைஅடுப்பில்வைத்துஇரண்டுநிமிடபட்டனைஅமுக்கினான். அதுபாத்திரத்தைசுழலவிட்டது.

லவங்கிஅவளுக்குமிகவும்பிடித்தமானஒருவிளையாட்டைஆரம்பித்திருந்தாள். பிளாஸ்டிக்பைகளைபிசைந்துதலையிலேகவிழ்த்துவிளையாடுவது. தடுக்கப்பட்டவிளையாட்டுஎன்றபடியால்அவளுக்குஅதிகமானஆவல்ஏற்பட்டது. இந்தக்கட்டுப்பாடற்றசுதந்திரம்அவளுக்குபிடித்திருந்தது. வெகுவிரைவிலேயேஇதற்குஒருதடைவரும். அதற்கிடையில்அந்தவிளையாட்டின்உச்சத்தைஅடைந்துவிடஎண்ணினாள். முகத்தில்தாங்கமுடியாதகள்ளசந்தோசம்.

அந்தநேரம்பார்த்துவாசல்அழைப்புமணிகிர்ர்ங்என்றுதொடர்ந்துஒலித்தது. நிற்கஅவகாசம்தராமல்அப்படிபொத்தானைஅமுக்குவதுவேறுயாரும்அல்ல. அவனுடையமனைவிதான். மறுபடியும்வீட்டுசாவியைமறந்துவிட்டுபோயிருக்கிறாள். மணிச்சத்தம்கேட்டுலவங்கிஇருந்தபடியேஇடுப்புக்குமேல்திரும்பிகைகள்இரண்டையும்பறவைபோலஆட்டத்தொடங்கினாள். வருவதுஅம்மாஎன்பதுஅவளுக்குஎப்படியோதெரிந்துவிடும். அவள்குடிக்காமல்விட்டமீதப்பால்இரண்டுஅவுன்ஸ்போத்தலில்அப்படியேபக்கத்தில்கிடந்தது.

அவன்மனைவிஉள்ளேவந்ததும்அவன்கன்னத்தில்சிறுமுத்தம்கொடுப்பாள். அவனுடையகன்னத்துக்கும்அவளுடையஉதட்டுக்கும்இடையில்நிறையகாற்றுஇருக்கும். கைப்பைகளைகீழேஉதறும்அதேகணத்தில்'லவங்கீ' என்றுஆசையாகத்தாவிஅவளைஅணைப்பாள். இரண்டுஅவுன்ஸ்பால்மிச்சம்விட்டதைசுட்டிக்காட்டுவாள். பிளாஸ்டிக்பைகள்தரும்ஆபத்தைபற்றிமீண்டும்போதனைநடக்கும். இரவுதூக்கம்தள்ளிப்போவதால்ஏற்படும்மோசமானவிளைவுகள்பற்றிமுறைப்பாடுவைப்பாள். தூக்கஆடைகள்கீழுக்குமஞ்சளும், மேலுக்குநீலமுமாகமாட்ச்பண்ணாமல்இருக்கும்அபத்தத்தைஉடனேயேமாற்றியாகவேண்டும்என்பாள். மிகக்கடினமானகணக்குகள்போட்டுஅடுத்தநாளைக்குயார்லவங்கியைடேகேரில்இருந்துஅழைத்துவரவேண்டும்என்பதைசரியாகக்கண்டுபிடித்து சொல்வாள்.

அழைப்புமணிச்சத்தம்அடிக்கத்தொடங்கிஅதுநிற்கஎடுத்துக்கொண்டநீண்டநேரத்தில்அவன்இவ்வளவையும்நினைத்துக்கொண்டான்.
 Nantri: http://amuttu.net/