நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம்
‘மேக் இன் இந்தியா’வில் பயங்கர தீ
போதைவஸ்து கடத்தல்காரருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்று உக்ரேனிய கிளர்ச்சியாளர்களால் தண்டனை
இந்துக்களுக்கு திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாகிஸ்தானில் முதல் தடவையாக அங்கீகாரம்
நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம்
15/02/2016 நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பிராந்தியத்தை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது.
நகரின் கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 31 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியாநியூஸிலாந்ல் கட்டங்களிலுள்ள பொருட்கள் சிதறி விழுந்ததுடன் வானளாவ பாரிய தூசு மண்டலம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் பீதி காரணமாக கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெ ளிகளை தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சியின் போது அந்நகரில் அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிக்கையிடப்படவில்லை.
இந்த பிரதான பூமியதிர்ச்சியையடுத்து 3.5 ரிச்டர் அளவான பிறிதொரு பூமியதிர்ச்சி அந்தப் பிராந்தியத்தை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
‘மேக் இன் இந்தியா’வில் பயங்கர தீ
16/02/2016 மும்பையில் நடைபெற்றுவரும் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி மேடை யில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிர்கான் ஆகியோர் இதன்போது மேடையில் இருந்தனர். ஆயினும், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல் லப்பட்டனர்.
மும்பையில் பாந்த்ராகுர்லா கொம்ப் ளெக்ஸில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் ஆரம்பித்து வைத்தார். இது எதிர்வரும் 18 ஆம் திகதி வரைநடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
போதைவஸ்து கடத்தல்காரருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்று உக்ரேனிய கிளர்ச்சியாளர்களால் தண்டனை
17/02/2016 உக்ரேனிலுள்ள ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட நபரொருவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்று சித்திரவதை செய்து மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென் உக்ரேனில் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் பிராந்தியத்திலுள்ள கொமுனர் நகரில் குறிப்பிட்ட போதைவஸ்து கடத்தல்காரர் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் காணொளிக் காட்சியில் மரக் கம்பமொன்றில் கட்டப்பட்டிருக்கும் குறிப்பிட்ட நபர், தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுதுகொண்டிருக்க கிளர்ச்சியாளர் ஒருவர் மின்சாரக்கம்பி இணைப்பு பட்டியால் அடிக்கிறார்.
மேற்படி தண்டனை நிறைவேற்றும் கிளர்ச்சியாளர் மத்திய ரஷ்ய நகரான நோவொஸிபிர்ஸ்க்கிலிருந்து உக்ரேனிலுள்ள ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக கொமுனர் நகருக்கு வந்த ஒல்கொன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட அந்த நபர், பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்புவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
இந்துக்களுக்கு திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாகிஸ்தானில் முதல் தடவையாக அங்கீகாரம்
17/02/2016 இந்துக்களுக்கு தமது திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதற்கு அனுமதியளித்த பெருமளவு முஸ்லிம்களைக் கொண்ட முதலாவது நாடு என்ற பெயரை பாகிஸ்தான் பெறுகிறது.
மேற்படி திருமணப் பதிவுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டம் திங்கட்கிழமை 3 மில்லியன் இந்துக்கள் வசிக்கும் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் திருமணப் பதிவுக்கான உரிமையை வழங்குமாறு நீண்ட காலமாக கோரி வந்துள்ளனர். அவர்கள் கட்டாய திருமணங்கள், பராயமடையாதோரின் திருமணங்கள் மற்றும் கைம்பெண்களுக்கான உரிமைகள் குறைவு என்பவற்றால் துன்புற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றம் இதையொத்த சட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் தமது திருமணத்தைப் பதிவு செய்வதற்கான உரிமையைப் பெற்றுள்ள போதும் இந்துக்கள் இதுவரை காலமும் அந்த உரிமையைப் பெறாது இருந்துள்ளனர்.
இந்நிலையில் புதிய சட்டமூலத்தின் பிரகாரம் சிந்து மாகாணத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட இந்துக்கள் தமது திருமணத்தை பதிவுசெய்து கொள்ள முடியும்.
எனினும் மேற்படி சட்டமூலம் திருமணத்தில் இணைபவர்களில் ஒருவர் மதம் மாறும் பட்சத்தில் திருமணத்தை இரத்துச் செய்ய அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய ஏற்பாட்டை உள்ளடக்கியுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள பல இந்துக்கள் வங்கி கணக்குகளைத் திறக்கவும் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் அடையாள அட்டைகளைப் பெறவும் சொத்துக்களிலான பங்குகளைப் பெறவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய சனத்தொகையில் 2 சதவீதத்துக்கும் சிறிது அதிகமாக இந்துக்கள் உள்ளனர். நன்றி வீரகேசரி