நட­னக்­க­லையே எனது உயிர்­மூச்சு...! கலை­மா­மணி நர்த்­தகி நடராஜ் உடனான சிறப்பு செவ்வி.

.


பர­தத்தில் கோலோச்சும் ஆண்­களும் பெண்­களும் உல­கெங்கும் பல­ருளர்.

ஆனால், உமையை இட­பாகம் தரித்­த­வராய், ஆணுமாய்ப் பெண்­ணுமாய் அமைந்­த­வராய், ஆடலில் உன்­மத்தம் கொண்ட சிவ­னாரைப் போலவே, ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் உணர்ந்து பர­தத்தில் கரை­தொட்­டி­ருக்கும் கலை­மா­மணி திரு­நங்கை நர்த்­தகி நடராஜ் ஒரு தாழிப்­பனை! (100 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­மு­றையே பூக்கும் பூவினம்)

சங்கம் வளர்த்த மது­ரையில் பிறந்து, தமி­ழர்­களின் கலைப் பாரம்­ப­ரி­யத்தை உலக அரங்­கு­களில் சர்­வ­தேச சமூ­கத்­தி­னரின் விழி­க­ளுக்கும் செவி­க­ளுக்கும் இனிய வகையில் காட்­சிப்­ப­டுத்தி உலகத் தமிழ் நெஞ்­சங்­களை மகிழ்­வித்­து­வரும் கலை­மா­மணி நர்த்­தகி நடராஜ் கேசரி சங்கமத்திற்கு வழங்கிய செவ்வி....
'பரதம்' என்ற வெளிச்சம் மூலம் இன்று உங்­க­ளது பாதையை ஒளி­ம­ய­மாக்­கி­யி­ருக்­கி­றீர்கள். உல­கெங்கும் உள்ள கலா­ர­சி­கர்கள் அனை­வரும் உங்­களை அறிவர். ஆனால், திரு­நங்கை என்ற பண்பு உங்­க­ளது பால்யப் பரு­வத்தைப் பாதித்­தி­ருக்­குமே?
மதுரை அனுப்­பா­ன­டியில் பிறந்­தவள் நான்.

மது­ரையில் மிகப்­பெ­ரிய அந்­தஸ்­துள்ள குடும்­பத்தை நான் சார்ந்­தி­ருந்­தாலும், என்­னு­டைய பால்­நிலை குறித்து எந்த ஒரு விழிப்­பு­ணர்வும் இல்­லாத குழந்தைப் பரு­வத்­தி­லேயே என்­னு­டைய பெண்­மையை உணரத் தொடங்­கினேன்.

ஏனைய திரு­நங்­கை­களைப் போலவே ஆரம்­பத்தில் குழப்பம், கவலை எனப் பல உள­வியல் சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தே­னா­யினும், அவை­ய­னைத்­தையும் தாண்­டி­ வந்­து­விட்டேன்.



நட­னத்தின் மீதான ஆர்வம் எப்­போது, எப்­படி ஏற்­பட்­டது?
மேலே நான் கூறி­ய­தைப்­போல, என்­னு­டைய பள்ளிப் பருவம் பல நெருக்­க­டி­களின் மத்­தி­யிலும் உரிமை மறுப்பு மற்றும் உணர்வு மறுப்­பு­களைக் கடந்தே வந்­தது.

அந்தச் சிறு­வ­ய­து­களில், இந்த நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து என்னை விடு­வித்­துக்­கொள்ள பொழு­து­போக்கு அம்­ச­மான டூரிங் கொட்­ட­கையில் பத்­மினி, வைஜெ­யந்­தி­மாலா, குமாரி கமலா, சாவித்­திரி இவர்­களின் நாட்­டி­யங்­களைக் கண்டு களித்தேன்.

அதில் வரும் காட்­சி­களைக் கண்டு என்­னு­டைய தோழி சக்தி பாஸ்­க­ர­னோடு இணைந்து எனக்கு நட­னத்தை வளர்த்­துக்­கொள்ளத் தொடங்கி, மதுரை அர­ச­மரம் விநா­யகர் கோவிலில் முதன்­மு­தலில் ஆடினேன்.

அப்­போது எனக்கு மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த வர­வேற்­பினை வெறும் வார்த்­தை­யினால் சொல்லி விளக்க முடி­யாது.

அதன் பிர­தி­ப­ல­னாக  நட­ன­கோ­பால ஸ்ரீ நாயகி மந்­திரில், ‘நாயகி பால­ரத்­தினம்’ என என்­னு­டைய நடனம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு முதல் விருது கிடைத்­தது.
அன்­றைய சூழ்­நி­லையில் நட­னத்­தினை மாத்­திரம் வைத்தே உங்­க­ளுக்கு ஏற்­பட்ட நெருக்­க­டி­களை சமா­ளிக்க முடிந்­ததா?
நான் மதுரை தியா­க­ராசர் மேல்­நிலைப் பள்­ளியில் பயின்ற பொழுது என்­னு­டைய அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத பால்­நிலை குறித்து பல இக்­கட்­டு­களை நான் சந்­தித்­துக்­கொண்­டி­ருந்­தாலும், அங்­கி­ருந்த தமி­ழா­சி­ரி­யர்கள் என்­னு­டைய கலையை அதி­க­மாக வளர்த்­தார்கள்.


அது எனக்கு அதி­க­மாக தமிழ் இலக்­கி­யங்கள் மீதான ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அச்­ச­ம­யங்­களில் மக்­களின் மத்­தியில் என்­னைப்­போன்­ற­வர்கள் ஒரு கேலிப்­பொ­ரு­ளா­க கிண்­ட­லாக அழைக்­கப்­படும் பொழுது எனக்குள் பல விட­யங்கள் தோன்­றின.

மூன்றாம் பாலி­னமாய்ப் பிறந்­ததில் எங்­களின் தவறு ஒன்றும் இல்லை. எங்­க­ளுக்கும் சுய­ம­ரி­யாதை, உணர்­வுகள் உண்டு என்­பதை மக்­களும் அறிந்­து­கொள்ள வேண்­டு­மென்ற ஒரு தாக்கம் இருந்­து­கொண்டே இருந்­தது.

இதனால் நான் தமிழ் இலக்­கி­யங்கள் மற்றும் இலக்­கி­யங்கள் சார்ந்த விட­யங்­களைக் கற்­றுத்­தேர்ந்தேன். அந்த அறிவைக் கொண்டு, இன்று உலகம் முழு­வதும் உள்­ள­வர்கள் மூன்றாம் பாலி­னைத்தைச் சார்ந்­த­வர்­க­ளுக்கு ஒரு அடை­யா­ள­மாகக் குறிப்­பிடும் 'திரு­நங்கை’ என்னும் வார்த்­தையை உரு­வாக்­கினேன். அதை அர­சாங்­கமும், பொது­மக்­களும், சக திரு­நங்­கை­களும் ஏற்று வழக்­க­மாக்­கி­யி­ருப்­பது எனக்கு மிகவும் மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது.

அப்­போ­தி­ருந்தே எனக்கு கிடைத்த கௌர­வ­மாக நான் என்னை மற்­ற­வர்­க­ளிடம் திரு­நங்கை நர்த்­தகி நட­ராஜ் என்று என்­னு­டைய நங்கைத் தன்­மைக்கு 'திரு' என்று மரி­யாதை அளித்து அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொள்ளத் தொடங்­கினேன்.

தற்­போ­தைய பர­த­நாட்­டிய அம்­சங்­க­ளான அலா­ரிப்பு, ஜதீஸ்­வரம், சப்தம், வர்ணம், தில்­லானா போன்­ற­வற்றை வடி­வ­மைத்த தஞ்­சாவூர் நால்வர் வழித்­தோன்­ற­லான இசைப் பேர­றிஞர் கே.பி.கிட்­டப்பா பிள்ளையின் மாண­வி­யாக எப்­படி இணைந்­தீர்கள்?
சிறு வயதில் சினி­மாவை மட்டும் பார்த்து ஆடிக்­கொண்­டி­ருந்த என்­னிடம் பலரும் வந்து உன்­னு­டைய நடன குரு யார் என்று கேட்கத் தொடங்­கி­னார்கள்.

அந்த வயதில் எனக்கு பர­த­நாட்­டி­யத்தின் ஒப்­ப­னை­களோ அல்­லது அது குறித்த சாரம்­சங்­களோ எது­வுமே தெரி­யாமல் இருந்­தது.
சினி­மாவில் நான் அதி­க­மாக வைஜெ­யந்­தி­மா­லாவின் நட­னத்­தினை விரும்­பு­வ­துண்டு.

அப்­போது நான் வைஜெ­யந்­தி­மா­லாவின் குரு இருக்­கி­றாரா, இல்­லையா என்­பது கூடத் தெரி­யாமல் யதார்த்­த­மாக நான் இசைப் பேர­றிஞர் கே.பி.கிட்­டப்பா பிள்­ளை­யிடம் தான் கற்­றுக்­கொள்ள விரும்­பு­கிறேன் என கூறினேன்.

அதன்பின் ஒரு வாரத்தில் சென்னை தமிழ் இசைச் சங்கம் கே.பி.கிட்­டப்பா பிள்ளை க்கு இசைப் பேர­றிஞர் விருது வழங்­கி­யுள்­ளது என்­பதை ஒரு பிர­ப­ல­மான பத்­தி­ரி­கையில் கண்டு மகிழ்­வுற்றேன்.

பர­தத்தின் தந்தை என்று அழைக்­கப்­படும் நால்வர் வம்­சத்தில் பிறந்த கே.பி.கிட்­டப்பா பிள்ளை தஞ்­சையில் தான் இருக்­கிறார் என்­பதை அறிந்து உடனே தஞ்­சைக்கு விரைந்தேன்.

அவரிடம் கற்­றுக்­கொண்டு இன்று உல­க­ளவில் பிர­ப­ல­மா­கி­யி­ருக்­கிறேன் என்­பது மிகவும் பெரு­மை­ய­ளிக்­கி­றது.
ஒரு கலை­ஞ­ருக்கு அவ­ரது கலைப்­ப­ய­ணத்தில் கிடைக்கும் மாபெரும் அங்­கீ­காரம் மற்றும் ஊக்கம் அவ­ருக்குக் கிடைக்கும் விரு­துகள் தான். உங்­களை கலைப்­ப­ய­ணத்தில் ஊக்­கு­வித்த விரு­துகள் பற்றிக் கூறுங்கள்?
உல­க­ளவில் எனக்கு எண்­ணற்ற பட்­டங்­களும் விரு­து­களும் கிடைத்­துள்­ளன. அதில் முக்­கி­ய­மாக தமி­ழக அரசு எனக்கு  'கலை­மா­மணி' பட்டத்தை வழங்­கி­யுள்­ளது.

மேலும், பர­த­நாட்­டி­யத்தில் இப்­பட்­டத்தை பெற்ற முதல் திரு­நங்கை நான் தான் என்று தமி­ழக அரசு தனது அரசு குறிப்­பே­டு­களில் இட்டு வைத்­துள்­ளது எனக்கு மேலும் மகி­ழச்­சி­ய­ளிக்கும் ஒன்று. இத்­தோடு கூட கலை­ஞர்கள் மிகவும் பெரு­மை­யாகக் கருதும் இந்­திய அரசின் சங்­கீத நாடக அகா­ட­மியின் புரஸ்கார் விருதும் எனக்கு கிடைத்­துள்­ளது.

அத்­தோடு சென்னை ஸ்ரீ கிருஷ்­ண­கான சபாவின் நிருத்ய சூடா­மணி விருதும், இந்­திய வெளி­யு­றவுத் துறை அமைச்­ச­கத்தின் சிறந்த நட­னக்­க­லைஞர் எனும் தர­வ­ரிசைப் பட்­டி­யலில் இடம் பெற்­றி­ருப்­பது எனக்கு மேலும் பெரு­மை­ய­ளிக்கும் ஒன்று.
இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு கம்பராமா­யணம் படிப்­ப­தற்கோ அல்­லது புரா­ணங்­களைக் கற்­றுத்­தேர்­வ­தற்கோ அதி­கப்­ப­டி­யாக ஆர்வம் இல்லை. அவர்­க­ளுக்கு இதை எவ்­வாறு கொண்டு போய் சேர்க்க முடியும்? அதற்கு நீங்கள் என்ன வழி­மு­றைகள் செய்­தி­ருக்­கி­றீர்கள்?
இன்று இசை­ஞானி இளை­ய­ரா­ஜாவின் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தனின் இசை - இவை­யெல்லாம் கடந்து மிகவும் மாறு­பட்ட ஒரு இசை­யையே இன்­றைய தலை­மு­றை­யினர் அதி­கப்­ப­டி­யாக விரும்­பு­கி­றார்கள்.

அதே­போல, இன்­றைய குழந்­தை­க­ளுக்கு தேவாரம், திரு­வா­சகம், நாலா­யிர திவ்­வி­ய­பி­ர­பந்தம் போன்­ற­வற்றை எடுத்­துச்­செல்­வது மிகவும் கடி­ன­மான ஒன்று.

இருப்­பினும் இன்று இதை மக்­க­ளி­டையே எடுத்­துச்­செல்ல பலரும் போராடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதற்­காக நான் என்­னு­டைய நட­னத்தை எளி­மைப்­ப­டுத்தி பழம்­பெரும் செய்­யுள்­களில் பாடல்­களை எடுத்து நட­ன­மா­டு­கிறேன்.

என்­னு­டைய நட­னத்தை ரசிப்­ப­வர்கள் நிச்­சயம் அந்தப் பாடல்­க­ளையும் ரசிப்­பார்கள்

. அப்­படி ரசிப்­ப­வர்கள் அது என்ன பாடல் என்று நிச்­சயம் தேடு­வார்கள். அதுவே எனக்குக் கிடைத்த ஒரு வெற்­றி­யாக நான் கரு­து­கிறேன். 
இலங்­கையில் வாழும் தமி­ழர்கள் கலை சார்ந்த விட­யங்­களை அதிகம் விரும்­பு­வ­துண்டு. அவர்­க­ளுக்கு நீங்கள் உங்கள் பங்­காகச் செய்­து­கொண்­டி­ருப்­பது என்ன?
இலங்கைத் தமி­ழர்கள் தமிழின் வேர்­க­ளான பல விட­யங்­களை இன்று இழந்­தி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு தமிழ் சார்ந்த உத­வி­களை என்­னு­டைய கலையின் வாயி­லா­கவும், நட­னத்தின் வாயி­லா­கவும் அளிக்­கிறேன்.

தமி­ழ­ருக்கு தமிழ் உணர்வு என்று ஒன்று உள்­ளது. எனவே, அங்கே இருக்கும் தமி­ழர்­க­ளுக்கு என்னால் உதவி செய்­ய­மு­டியும் என்று எண்­ணித்தான் இலங்­கையில் இருக்கும் குழந்­தை­க­ளுக்கு எனது நடனப்பாடசாலையாகிய வெள்­ளி­யம்­ப­லத்தின் கீழ் பயிற்சிப் பட்­டறை அமைத்­துள்ளேன்.

கலைஞர் டாக்டர். அருந்­ததி ஸ்ரீரங்­க­நாதன், பேரா­சிரியர் மௌன­குரு, கம்­ப­வா­ரிதி இ.ஜெயராஜ் ஆகி­யோரின் ஆத­ர­வினால் தமிழ் இசைக்­கான பயிற்சிப் பட்­ட­றைகள், நடன வகுப்பு நிகழ்ச்­சிகள் எனப் பல­வற்றை அளித்து வரு­கிறேன்.

இலங்­கையில் பல மாண­விகள் இருக்­கி­றார்கள்.

அனைத்து இலங்கை கம்பன் கழ­கத்தின் தாய்க் கழ­கமாய் விளங்கும் கொழும்பு கம்பன் கழ­கத்தில் ஒவ்­வொரு வரு­டமும் என்­னு­டைய நடனம் நடை­பெறும்.

இந்த வரு­டமும் கூட என்­னு­டைய நடனம் அங்கே நிக­ழ­வி­ருக்­கி­றது. 
இன்று உல­க­ளவில் பல்­வேறு இடங்­களில் தமிழ் மக்கள் இருக்­கி­றார்கள். அவர்­களின் மத்­தியில் பரத நாட்­டி­யத்­திற்கு எந்­த­ள­வி­லான வர­வேற்பு இருக்­கி­றது?
புலம்­பெயர் தமி­ழர்கள் என்று அழைக்­கப்­ப­டு­ப­வர்கள் உல­கத்தின் பல்­வேறு இடங்­களில் பர­வி­யி­ருக்­கி­றார்கள்.

அவர்களுக்கு நம்முடைய கலாசாரம் மீது அதிக தாகம் இருந்து வருகிறது.  இதனால் அங்கு இருப்பவர்களும் இக்கலையைக் கற்றுக்கொள்வதில் அதிகப்படியாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதற்காக நான் பிறந்து வளர்ந்த மதுரையில் கால்மாறி நடனமிடும் நடராசரை மனதில் கொண்டு வெள்ளியம்பலம் என்னும் நடனப் பாடசாலை மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டு மாணவியருக்கும் பயிற்சியளிக்கத் தொடங்கியிருக் கிறேன்.

அழகான திட்டமிட லோடு அதில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரை ஆலோசனைகள் சொல்லவும் கற்பிக்கவும் இணைத்திருக்கிறேன்.

மேலும், இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் கலைஞர்களாகட்டும், கர்நாடக இசைக் கலைஞர்களாகட்டும், அல்லது என்னைப் போன்ற பரதநாட்டியக் கலைஞர்களாகட்டும் வெளிநாடுகளில் சென்று நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் என்றால், அதற்கு முழுக் காரணமும் உலகம் முழுவதும் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தான்.

அவர்களின் ஆதரவினால் தான் வெளிநாடுகளில் எங்களால் நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது.

அந்தளவிற்கு அவர்களின் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமே. 
 nanntri 
http://kalaikesari.lk/article.php?category=dance&num=808