1000 கவிஞர்கள் கவிதைகள்

.


உலக கவிதைகள் வரலாற்றில் ஒரு பொக்கிச ஆவணமாய் உலாவரவிருக்கின்றது '1000 கவிஞர்கள் கவிதைகள்' எனும் கவிநூல். அவனியின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தரமிகு கவிதைகளின் தொகுப்பாய் முகம் காட்டவிருக்கும் '1000 கவிஞர்கள் கவிதைகள்' நூலில் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கவிதைகள் இடம்பெறும். ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக எல்லா நாடுகளிலும் செயலாற்றுநர்களும், கவிச்சேகரிப்பாளர்களும் இயங்குவர். இப்பெரு கவித்தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவானது தேர்வுக்குழுவினரால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.
கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்பவே கவிதைகள் ஏற்கப்படும்.

01. எவ்வகையான கவிதைகளும் ஏற்கப்படும். கருப்பொருளுக்கு வரையறை இல்லை. ஏற்கனவே பிரசுரமான, ஒலிபரப்பான கவிதைகளையும் அனுப்ப முடியும்.
02. கட்சிசார், சமூகத்தால் விரும்பப்படா தனிநபர் புகழ்ச்சிசார் கவிதைகள் ஏற்கப்படமாட்டாது.

03. கவிதையின் ஆகக்கூடிய‌ வரிகள் 35 ஆகும். இவ்வரிகளுக்கு குறைவாகவும் கவிதைகள் அனுப்ப முடியும். ஒருவர் ஒரு கவிதையே அனுப்ப முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளினை அனுப்பி, தேர்வுக்குழுவின் விருப்பிற்கு ஒரு கவிதையை ஏற்கச் செய்யவும் அனுமதி உண்டு.

04. பங்கேற்கும் கவிஞர் கடவுச்சீட்டு அளவான புகைப்படம், மற்றும் அவர் சார்ந்த 70 சொற்களுக்குட்பட்ட சுயகுறிப்பினையும் இணைத்து அனுப்பலாம். இக்குறிப்பிலேயே முகவரியும் உள்ள‌டங்கும்.

05. மேலதிக விடயங்களுக்கான தொலைபேசி எண்கள். இலங்கை 0094 775892351/0094 775006796/0094 773407243 சர்வதேசம் 001 416 6661855. 

06. கவிதைகளை tamilkavithaikal1000@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது செயலியக்குநர், 1000 கவிஞர்கள் கவிதைகள், விஜய் அச்சுப் பதிப்பகம், மில் வீதி, வவுனியா, இலங்கை. என்ற முகவரிக்கோ அனுப்ப முடியும்.

07. தொலைபேசி எண், முகவரி இடுதல் விரும்பத்தக்கது. கவிதைகள் தொடர்பாக ஏதும் பேசவேண்டியிருப்பின் இது உதுவும். தொலைபேசி எண் பிரசுரிக்கப்படமாட்டாது. கவிஞர் விரும்பாவிடில் புகைப்படமும் பிரசுரிக்கப்பட மாட்டாது.

08. கவிதையை அனுப்பும் கவிஞர் தாம் ஒரு படைப்பாளர் என்பதனையும், அக்கவிதை தமது சுயகவிதை என்பதனையும் சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய ஒருவரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்புதல் விரும்பத்தக்கது. ஏற்கனவே அறிமுகம் கொண்டவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. 09. கவிதைகள் தொடர்பாக விசாரணை செய்யவும், கவிதைகள் இணைத்தல், நிராகரித்தல் என்பவற்றிற்கும் தேர்வுக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

10. இலங்கை மற்றும் இந்தியாவில் மாவட்ட ரீதியாக செயற்படும் செயலாற்றுநர்கள் ஊடாகவும், பிற நாடுகளின் கவிஞர்கள் அந்நாடுகளில் செயற்படும் செயலாற்றுநர்கள் ஊடாகவும் கவிதைகள் அனுப்ப முடியும். தவிரவும் பொது மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரிக்கும் கவிதைகளை அனுப்ப முடியும். நேரடியாகவும் கவிதைகளை ஒப்படைக்க முடியும்.

11. கவிதைகள் பெறப்படும் இறுதித் திகதி 15.03.2016.

                              செயலியக்குநர்,
                   1000 கவிஞர்கள் கவிதைகள்.