இலங்கைச் செய்திகள்


சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்

உள்ளூராட்சித் தேர்தல் ஜூனில் நடக்கும்  : அமைச்சர் பைசர் முஸ்தபா

எம்.பி.யாக பதவியேற்றார் சரத் பொன்சேகா

லலித் கொத்தலாவலயின்  மனைவிக்கு விளக்கமறியல்

எச்சரிக்கை : புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு

திருமணம் செய்துகொண்ட சிறுவனும் சிறுமியும் கைது

வடக்கு ஆளுனராக ரெஜினோல் குரே

குவைட்டிலிருந்து திருப்பி அனுப்பிவைப்பு



சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்



08/02/2016 நீண்ட கால­மாக சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் ஒரு பொழு­து­போக்கு வலயம் இல்­லாத குறையை நிவர்த்­திக்கும் முக­மாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழுத் தலை­வ­ரு­மான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது பிர­மாண்­ட­மான பொழு­து­போக்கு வலயம் அமைப்­ப­தற்­கான காணிகள் அடை­யாளம் காணப்­பட்டு இருந்­த­துடன் அதற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.
தற்­போது பிர­மாண்­ட­மான பொழு­து­போக்கு வலயம் அமைப்­ப­தற்­கான அடை­யாளம் காணப்­பட்ட காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான ஆலோ­சனைக் கூட்­ட­மா­னது சம்­மாந்­துறை பிர­தேச செய­ல­கத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலை­மையில் இடம்­பெற்­றது.
இவ்­வா­லோ­சனைக் கூட்­டத்தில் பிர­தேச செய­லாளர் ஏ.மன்சூர், மாவட்ட நில அள­வை­யாளர் ரபீக், உதவி காணி ஆணை­யாளர் திரு­மதி.இப்­திகார் லத்திப், மாவட்ட காணி உத்­தி­யோ­கத்தர் முசம்மில் உட்­பட சம்­பந்­தப்­பட்ட திணைக்­கள அதி­கா­ரி­களும், உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்து கொண்­டனர்.சுவி­க­ரிக்­கப்­படும் 31 ஏக்கர் காணியில் மலர்ப்­பூங்கா, நவீன மய­மான சிறு­வர்­க­ளுக்­கான விளை­யாட்­டுத்­தொ­குதி, நீர்த்­த­டாகம், சுற்­றி­வர நிழல்­தரும் மரங்கள், கடைத்­தொ­கு­திகள் உட்­பட ஏரா­ள­மான பொழு­து­போக்கு அம்­சங்­களை கொண்ட பிர­மாண்­ட­மான வல­ய­மாக உரு­வாக்­கப்­பட இருக்­கி­றது.
குறித்த பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்.சம்மாந்துறையில் அமையப்பெறும் பட்சத்தில் பல்லாயிரக்கனக்கான மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி 












உள்ளூராட்சித் தேர்தல் ஜூனில் நடக்கும்  : அமைச்சர் பைசர் முஸ்தபா

08/02/2016 ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும்  என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணய பணிகள் நிறைவடையவுள்ளன. இது குறித்தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கையளிக்கப்பட உள்ளன. 
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 











எம்.பி.யாக பதவியேற்றார் சரத் பொன்சேகா

09/02/2016 பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










லலித் கொத்தலாவலயின்  மனைவிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சிசிலியா கொத்தலாவல கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
லண்டனிலிருந்து டுபாய் ஊடாக இலங்கைக்கு விமானத்தில் வந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
கோல்டன் கீ நிறுவனம்  நட்டத்தில் வீழ்ந்ததைத் தொடர்ந்து அதன் வைப்பாளர்கள் நிலையான வைப்பொன்றைக் கோரினர். 
இந் நிலையிலேயே 2009 ஆம் ஆண்டு சிசிலியா கொத்தலாவல நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது  கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவருக்கு இன்று நீதிமன்றம் விளக்கமறியல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 











எச்சரிக்கை : புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


09/02/2016 இலங்கையில் வருடந்தோறும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் சுகாதார சேவை அத்தியட்சர் வைத்தியர் மகிபால ஹேரத் தெரிவித்துள்ளார். 
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 25,000 இற்கு மேற்பட்ட புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ்வருடத்தில் இதுவரைக்காலமும் 13,500 க்கு மேற்பட்டவர்களும் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  
இலங்கைப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் கருப்பை புற்றுநேய் தைரோட் புற்றுநோய்கள் காணப்படும் வேளை ஆண்களிடையே வாய்ப்புற்று நோய், குரல்வளைப் புற்றுநோய், சுவாசப் புற்றுநோய் பொதுவாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு




10/02/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி வரை (24.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார்.
கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை  குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











திருமணம் செய்துகொண்ட சிறுவனும் சிறுமியும் கைது




11/02/2016 மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்த சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் கைது செய்த சம்பவம் மூதூரில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை இவர்களை கைது செய்த பொலிஸார் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பாது சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த சிறுவனை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கும் நீதிவான் ஜ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
திருமணம் செய்த சிறுவன் ஸ்ரீநிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதானவர் எனவும் சிறுமி மூதூர், கடற்கரைச் சேனை கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 2015.12.24 ஆம் திகதி திருமணம் செய்துள்ளனர். 
இவர்கள் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை இவர்களை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











வடக்கு ஆளுனராக ரெஜினோல் குரே




14/02/2016 வட மாகாண ஆளுனராக ரெஜினோல் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 
எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 










குவைட்டிலிருந்து திருப்பி அனுப்பிவைப்பு



13/02/2016 குவைட் நாட்டுக்கு பணிப்புரிய சென்று பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கையர்  104   பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இதில் 96 பெண்களும்  8 ஆண்களும்  உள்ளடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
இவர்கள் அனைவரும் அனுராதபுரம், காலி , திருக்கோணமலை , மட்டக்களப்பபு , குறுநாகல் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.   நன்றி வீரகேசரி