ஈழத்து மிருதங்கமேதை சந்தான கிருஷ்ணனுக்கு அஞ்சலி - - நல்லை க. கண்ணதாஸ்

.

லயவுலகின்  உயர்  நட்சத்திரம்!
மிருதங்கக்
கலையுலகின்  கண்கண்ட  தெய்வம்!
சந்ததமெம்  செவியில் - நாதத்தை
சத்துணவாய்  தந்த  ஐயா !
சந்தான கிருஷ்ண  மாமேதையே  - உலகில்
வந்தான  காரியம் முடிந்ததென்று
வழிபார்த்துச்சென்றீரோ !?
சொல்லடிக்கும்  அழகும் -சுந்தரமாய்
சிரிப்புதிர்க்கும் நெகிழ்வும் -நினைவில்
வந்துவந்து - எமை
வாட்டுதையே .
லயமதே  உயிர்மூச்சாய்   கொண்டு- பாடகர்
தரமறிந்த 'பக்கா' வாத்தியத்தில்
நிகரிலாத்தனிக்கலைஞனாய்
நிமிர்ந்து நின்ற பெருங் கலைஞ ! -ஈழத்து
மண்ணின் கலைவரலாற்றில்
எண்ணிட  முடியாச்சாதனைகளாய்
ஒவ்வொரு மேடைகளையும்
ஒப்பற்ற கணக்குகளால்
ஔிர வைத்த உன்னதக்கலைஞர் நீங்கள்.
உங்களது உழைப்பின் தொடர்ச்சியும்
இடைவிடாத ஆற்றுகைத்தேடலும்
எங்கும் பரவவென

இறையருள் வேண்டுகிறோம் .


Funeral Ceremony Details.
Viewing: On Date 15th Feb 2016 (Monday)
Time between 06:00 PM to 08:00 PM
At Guardian Funerals, 1 First Avenue, Blacktown, NSW 2148
Cremation: On Date 17th Feb 2016 (Wednesday)
Time between 02:00 PM to 04:00 PM
At Pinegrove Memorial Park, “North Chapel”,
Eucalyptus Drive (OFF Kington Street), Minchinbury, NSW 2770, Australia.