பரிணாம வழர்ச்சியும் இந்து மதமும் தசாவதாரம் - நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர்

.

மனித சமூக வளர்ச்சியுடன் வளர்ந்த சிந்தனைகளை தன்னுள்ளே கொண்டது இந்து மதம். சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோது சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது. அதைஉணர்ந்த ஞானிகளும் அறிஞர்களும் தமது கருத்துக்களைகூற அதுவே மதக்கருத்துக்களாகவும் கொள்ளப்பட்டதை நாம் அவதானிக்கலாம். இவ்வாறு காலாதி காலமாக வளர்ந்ததே இந்துமதம்

புராணங்கள் மத சிந்தனைகளை தத்துவங்களை மக்களுக்கு இலகுவாக புரியவைப்பதற்கே தோன்றியவை.அதே சமயம் மக்கள் அறிவு கூர்மைப்படாது சிந்தனையை தடைசெய்யும் கருவியாகவும் புராணங்கள் பயன்படுத்தப்பட்டன. முதத்தை மூடத்தனமாக மக்களிடம் திணிப்பதற்கு ஆக்கிய கதையே சிறுத்தொண்டர் புராணம். சுpவனடியார் பிள்ளைக் கறி கேட்டார் பெற்ற பிள்ளையை கொன்று கறிசமைத்தனர் பெற்றோர். கண்ணப்பரோ இறை பொருட்டு இரு கண்களையும் இழக்கத் தயாரானார். இவையாவும் சிந்திக்காது எதையும் இறைபொருட்டுச் செய் என்பதற்காகவே தோன்றிய கதைகள்.சாதாரண குடிமக்கள் அறிவுக் கூர்மை அற்றவராக வாழ்ந்தால் அரசனால் அவர்களை இலகுவில் அடக்கி ஆழ முடியும். இதையே சாணக்கியன் என்ற அரசியல் ஞானி கூறுகின்றான். "அரசனுக்கு மத நம்பிக்கை என ஒன்று வேண்டியதில்லை அதே சமயம் மக்களைப் பயத்திலும் பீதியிலும் வாழவைக்கவேண்டும். அப்பொழுதுதான் அரசாட்சி நடத்துவது சுலபம்”
புராண இதிகாசங்கள் மக்கள் சிந்தனையை மழுங்கடிக்கப்பயன் பட்டதை இந்திய வரலாற்றை ஆழமாகக் கற்றவர் அறிவர.
அதே சமயம் யோகா என்ற உன்னத கலையை உலகிற்கு வழங்கியதும் இந்திய சிந்தனையே.உடலையும் மனதையும் முறையாக வழம்படுத்தும் யோகா இந்துமத சித்தாந்தம் தந்த அழப்பொரிய செல்வம்.யோகா போன்ற பல அறிவியல் (விஞ்ஞான) சிந்தனைகள் வளர காரணமாகவும் இந்துமதம் இருந்துள்ளது.வான சாஸ்திரம் தொட்டு மருத்துவம் வரை இந்தியர் சிறந்து விளங்கியுள்ளனர். இந்திய கணிதவியல் சிந்தனையில் பெரும் சாதனையாக உலகால் போற்றப்படுவது பூச்சியம் அல்லது சுளியம். இதனையும் வளர்த்த பூமியில்தான் மக்களிடம் அறிவை வளரவிட்டால் அடக்கி ஆழ்வது கடினம் என்ற சிந்தனையும் வளர்ந்தது. அறிவை திசைதிருப்ப பல உத்திகள் கையாளப்பட்டது. அதனால் இயற்கையாக வளர்ந்த அறிவியற் சிந்தனைகளும் அழிவை நோக்கி செல்ல நேர்ந்தது.


இன்றோ நாம் இந்துக்களின் சிந்தனையில் பரிணாம வளர்ச்சி எனும்போது புல்லாகி பூடாய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி என்ற சிவபுராணம் பலராலும் கூறப்படுவது நாம் அறிந்ததே. அதே சமயம் விஷ்ணுவின் மகாத்மியங்களைக் கூறும் விஷ்ணுபுராணமும் பகவத புராணமும் தசாவதாரமாக பரிணாம வளர்ச்சி விவரிக்கப்பட்டுள்ளதை பலர் அறியார். இந்திய சிந்தனையில் பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவை நாம் இங்கு காணமுடியும். சுpந்தனைக்கு தடைபோட்ட சமூகம் பரிணாம வளர்ச்சியை இறை அவதாரமகக்கியிருக்க வேண்டும்.

இந்து புராண கோட்பாட்டின் அடிப்படையில். ஊலகின் காலம் மூன்று யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன கிருதாயுகம் திருதாயுகம் கலியுகம் இந்த யுகம் ஒவ்வொன்றின் காலங்கள் 432000 ஆண்டுகள். ஓர அழவிற்கு நாம் 5 லட்சம் வருடங்கள் என நாம் கணக்கிடலாம். முதல் யுகமான கிருதாயுகத்தில் மிருகங்களின் படிமுறை வளர்ச்சியை காணலாம். இன்றைய விஞ்ஞானிகளின் கணிப்பின் படியும் 5 லட்சம் வருடங்களில் இந்த பரிணாம வளர்ச்சியை உயிரினங்கள் அடைந்திருக்குமென கொள்ள இடமுண்டு. மேலே நாம் தசாவதாரத்தில் முதலில் தோன்றிய நான்கு பிராணிகளையும் நோக்குவோம்.

மட்சவதாரம் கிருதாயுகத்திலே உலகு உய்யும் பொருட்டு விஷ்ணு முதல் அவதாரமாக இந்த அவதாரத்தை எடுத்தார். மட்சம் என்பது மீன் பரிணாம வளர்ச்சிலே முதலிலே முள்ளம் தண்டுடன் தோன்றிய உயிரினம் மீன். இது நீர்வாழ் பிராணி உயிர்கள் முதலில் நீரில்தான் தோன்றியது என்பதும் நாம் அறிந்ததே.

கூர்மாவதாரம்


அடுத்துத் தோன்றியது கூர்மாவதாரமான ஆமை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தன்மை வாய்ந்தது.நீரில் மட்டும் வாழாது நிலத்திலும் காலடி எடுத்து வாழ தலைப்பட்டமை பரிணாமத்தின் அடுத்த படிமுறை எனக்கொள்ளலாம்.வராக அவதாரம்


வராகம் என்பது பன்றி நீரைவிட்டு வெளியே வாழ்ந்த பன்றி ஆமைபோல் அல்லாது நான்கு கால்களையும் நிலத்தில் ஊன்றி நின்று நிலத்திலேயே வாழ்ந்து உணவுதேடும் பிராணியாக பரிணாமித்ததைக் காணடகிறோம்.
நரசிம்ம அவதாரம்


நரசிம்ம அவதாரம் பாதி சிங்கம் பாதி மனிதனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு ஒவ்வாதது. இங்கு புத்திக் கூர்மையும் பலமும் வாய்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட காட்டு ராஜா என்ற மதிப்புப்பெற்ற சிங்கத்தையே குறிக்கும்.

மட்ச கூர்ம வராக நரசிம்ம என்ற நான்கு அவதாரங்களும் பிராணிகளின் பரிணாம வளர்ச்சியை காட்டி நிக்கிறன. இந்த அவதாரங்கள் முதல் யுகமான கிருதாயுகத்தைச் சார்ந்தவை. ஆல்லது உலகில் உயிர்களின் படிமுறை வளர்ச்சியை மீனில் இருந்து சிங்கம் வரை தோன்றிய காலத்தை எம்மவர் 432000 வருட பரிணாம வளர்ச்சி என கணித்திருக்கலாம்.

அடுத்துத் தோன்றிய 5 அவதாரங்களும் மனித உருவம் தோன்றியது முதல் படிப்படியாக மனித சமுதாய வளர்ச்சியை காட்டுகிறது. இங்குதான் முதலிலே மனித உருவை காண்கிறோம். இதை எம்மவர் திருதாயுகத்திற்கு உரியது என வகுத்ள்ளார்கள்.

வாமன அவதாரம்
குள்ளமான முழு வளர்ச்சி அடையாத மனித தோற்றம்.

பரசுராம அவதாரம்கையிலே கோடரி ஏந்திய மனிதன். மனித சமுதாய வளர்ச்சியில் பெரும் வளர்ச்சியைக் கண்ட காலம். இது கல்ஆயுதத்தைக் கொண்ட மனித இனம் தன்முயற்சியால் உலோகத்தைக் கண்டறிந்தது. உலோகத்தினால் கருவிகளை ஆக்கிய மனிதன் தன்பலத்தை பன்மடங்காக்குகிறான். இதுவே பரசுராம அவதாரம்.

இராமாவதாரம்


கையிலே அம்புவில்லுடன் காட்சி தரும் அவதாரம். கையில் கோடரி ஏந்தி மரங்களை வெட்டிச் சாய்த்து தன் வாழ்வை பணயம் வைத்து மிருகங்களின் அருகே சென்று கொன்ற மனிதனின் கையில் அம்பும் வில்லும் மாபெரும் தொழில் வளர்ச்சியைக் குறிப்பது. ஆம்பு வில்லு ஒரு விசைக்கருவி தூரப்போகும் மிருகத்தைக் கொல்வதுடன் அபார போர்க்கருவியாகவும் உருவெடுத்தது. தொழில் நுட்பத்தின் ஆரம்பமே இந்த அம்புவில்தானே.


கிறிஷ்ணாவதாரம்
மனிதன் வேட்டையாடி உணவுதேடும் நிலையில் இருந்து வளர்ச்சியுற்று மிருகங்களை வளர்த்து அவற்றின் பால் தயிரை அருந்தி மாமிசத்தை உண்டு வேட்டு வாழ்வில் இருந்து விடுபட்ட அடுத்த படிமுறையே மந்தை மேய்த்தல் இதைக்காட்டி நிற்பதே இடையர் குல தலைவன் கண்ணன் அவதாரம்.

பலராம அவதாரம்


கலப்பையை கையில் ஏந்திய அவதாரம் குறிப்பது நிலத்தை உழுது பயிரிட்டு நிலையான வாழ்வு வாழ தலைப்பட்டு விட்டான் மனிதன். முந்தை மேய்த்த மனித சமுதாயம் நிலையான வாழ்வு வாழ்ந்தமை மனித சமூக படிமுறை வளர்ச்சியே.

கல்கி அவதாரம் மனிதசிந்தனை உழுது பயிடதெரிந்த மனித சமூகத்துடன் நின்று விடவில்லை. கலியுகத்திலே கல்கி தோன்ற இருக்கிறார் மனித சமூகம் மேலும் வளரும் என்ற எதிர்பார்ப்பையும் அழிவு என்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தவர் கல்கியே அழிக்கும் தெய்வமாக தோன்றும் என்றனர்

ஒரு காலத்தில் எம்மவர் பரிணாம வளர்ச்சிபற்றி சிந்தித்துள்ளனர் அந்த சிந்தனையே விஷ்ணுவின் 10 அவதாரங்களாக விஷ்ணுபுராணத்தில் புகுந்துள்ளது அதை இன்றாவது நாம் உணர்ந்தோம் அல்லவா.?

No comments: