இந்த காலத்திலயும் இப்படி நடக்குது

.

அஜித் - விஜய் ரசிகர்களின் 'கெத்து'ப் போட்டி முடிவு என்ன?


ஜூலை 27ம் தேதி அஜித் - விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட 'கெத்து'ப் போட்டியின் முடிவு என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே ஜூலை 27ம் தேதி ட்விட்டர் தளத்தில் பெரும் போட்டி நிலவியது. அன்று மதியம் விஜய் டி.வியில் 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியில் விஜய்க்கு சிறந்த பொழுதுபோக்கிற்கான விருது வழங்கியது ஒளிபரப்பட்டது. அதே நேரத்தில் சன் டி.வியில் அஜித் நடித்த 'வீரம்' ஒளிபரப்பட்டது.
நடிகர் விஜய் வாங்கிய 'சிறந்த பொழுதுப்போக்கு நடிகர்' விருதா அல்லது அஜித் நடிப்பில் ஒளிபரப்படும் 'வீரம்' திரைப்படமா என்று அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே யார் கெத்து என்ற போட்டி நிலவியது. அன்று காலை முதலே ட்விட்டர் தளத்தில் #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உடனே #VIJAYFavHeroForever என்ற ஹாஷ்டேக் உருவாகி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள்.


தற்போது எந்த டி.வி சேனல் 2 மணி முதல் 6 மணி வரை அதிகமாகப் பார்க்கப்பட்டது என்ற நிலவரங்கள் வெளியாகியுள்ளது. அன்று சென்னை நிலவரப்படி விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 11 புள்ளிகளும் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு அளவில் விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 9 புள்ளிகளும் கிடைத்திருக்கிறது.
அதற்கு முந்தைய வாரமான 20ம் தேதி விஜய் டி.வியில் 'விஜய் விருதுகள்' நிகழ்ச்சியும், சன் டி.வியில் 'சிங்கம் 2' திரைப்படமும் ஒளிபரப்பட்டது. அன்றைய டி.ஆர்.பி நிலவரப்படி விஜய் டி.வி சென்னையில் 11 புள்ளிகளும், தமிழ்நாட்டில் 13 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன. சன் டி.விக்கு சென்னையில் 11 புள்ளிகளும், தமிழ்நாட்டில் 9 புள்ளிகளும் கிடைத்திருக்கிறது.

No comments: