.
மதுரா மகாதேவ்
Indian Cultural Advancement Society Australia Inc (ICASA) இனால் நடாத்தப் பட்ட Indian Dance & Music Extravaganza எனும் நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் பஹாய் சென்டர் இல் தமது வெள்ளி விழாவை கொண்டாடி இருந்தார்கள். ICASA இன் ஸ்தாபகரும் உப தலைவருமான டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை அர்ரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எமது பிரதமரின் சார்பாக பிரதம விருந்தினராகMr Craig Laundy நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது உரையை ஆற்றினார்.
திருமதி தமயந்தி பால்ராஜுவின் மாணவர்களினது கண் கவர் நடனம் இடம் பெற்றது. இதில் குறிப்பாகச் சொல்லப்போனால் பல விதமான நடனங்கள் இடம் பெற்றது. அலாரிப்பு சிவனை போற்றி இடம் பெற்றது. அடுத்ததாக Jugal Bandi என்று சொல்லப் படும் கதக்கும் பரத நாட்டியமும் இணைந்த ஒரு நடனம் இடம் பெற்றது. இந்த நடனத்தை மிகவும் அழகாக நெறியாள்கை செய்திருந்தார் தமயந்தி. இதில் நடனம் ஆடிய அருணா மற்றும் ஷாந்தி மிகவும் அழகாக அந்த Jugal Bandi யை தந்திருந்தார்கள். தொடர்ந்து கோலாட்டம், மற்றும் சல்சா நடனமும் பரத நாட்டியமும் இணைந்த ஒரு Jugal; Bandi யை வழங்கினார்கள் சுமதியும் அலெக்ஸ்சும் இணைந்து நெஞ்சினிலே நெஞ்சினிலே எனும் பாடலுக்கு. தொடர்ந்து ஜனனி பீடிளின் மாணவிகள் ஒரு பாலிவுட் நடனம் ஒன்றை மிகவும் திறம்பட ஆடி பலரது கரகோஷத்தையும் பெற்றார்கள். இந்நிகழ்ச்சியின் பிரதம ஆதரவாளர்களான St George பாங்கின் Strathfield கிளையின் மேலாளரான கீதா ஆனந்தக்ரிஷ்ணன் அவர்கள் அதிஷ்ட லாபச் சீட்டில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்களை வழங்கினார். இன் நிகழ்ச்சியை விகாந்தா நாய்டு அழகாக தொகுத்து வழங்கினார்.
சிட்னியில்
மிகவும்
திறமை
வாய்ந்த
இளம்
வாத்தியக்
கலைஞர்
அமைந்த
ஒரு
இசைக்
குழுவாக
அமைந்தது
லதாங்கி
லயம்
என்னும்
இசைக்
குழு.
அவர்கள்
வயதில்
தான்
சிறியவர்கள்
ஆனால்
அவர்கள்
இசைக்
கருவிகளை
ஒவ்வொரு
பாடல்களுக்கு
ஏற்றவாறு
வாசித்த
விதமோ
மிகவும்
தேர்ச்சி
பெற்ற
கலைஞர்
போல்
இருந்தது.
பாடகர்
பாடகிகளும்
தமது
இனிய
குரல்
வளத்தை
மிகவும்
திறமையாக
காட்டியிருந்தனர்.
செல்வி ஜனனி மயூரனும்
செல்வன்
யதூசன்
ஜெயராசவும்
கீ
போர்டு
இசைக்
கருவியை
வாசித்தார்கள்.
ஜனனி
மிகவும்
திறமையாக
அனைத்துப்
பாடல்களுக்கும்
இசைத்திருந்தார்.
அண்மைக்
காலங்களில்
இந்தியாவில்
இருந்து
வருகை
தரும்
வாத்தியக்
கலைஞர்
சில
பாடல்களை
ட்ராக்கில்
பதிவு
செய்து
அதனை
பலி
பண்ணுகின்றார்கள்.
அனால்
இவர்கள்
அப்படி
எந்தவித
தொழில்
நுட்பத்தையும்
பயன்
படுத்தாது
மேடையில்
நேராகவே
பாடல்களுக்கு
அதன்
இசையை
மீட்டிருந்தார்கள்
என்பது
குறிப்பிடத்தக்க
ஒரு
விடயமாகும்.
யதூசன்
உன்னை
காணாது
என்னும்
அந்த
விஸ்வரூபம்
படப்
பாடலுக்கு
மிகவும்
திறமையாக
கீ
போர்டை
இசைத்திருந்தார்.
செல்வி திவ்யா சர்வேஸ்வரன்
புல்லாங்குழலை
இசைத்திருந்தார்.
அவரின்
திறமையை
நாம்
கடந்த
வருடம்
அன்பாலயம்
நிகழ்வில்
கண்டிருந்தோம்.
மிகவும்
குறுகிய
கால
பயிற்சியின்
மத்தியிலும்
மிகவும்
இனிமையாகவும்
திறமையாகவும்
பாடல்களுக்கு
ஏற்றவாறு
இசைத்திருந்தார்.
Lead Guitar ல் நிக்கில் நாயுடுவும்,
Bass
Guitar ல் ரமணன் மணிவண்ணனும்
தமது
திறமையை
மிகவும்
துல்லியமாக
எடுத்துக்
காட்டியிருந்தார்கள்.
Drums
Kit, Octopad மற்றும் Handsonic
இந்த
மூன்று
இசைக்
கருவிகளையும்
செல்வன்
சேயோன்
ராகவன்
மிகவும்
திறமையாக
வாசித்திருந்தார்.
Whio
is the hero பாடலுக்கு மிகவும்
திறமையாக
Drums
வாசித்திருந்தார்
என்பது
இங்கு
குறிப்பிடத்தக்கது.
Octopad
மற்றும்
மிருதங்கத்தில்
செல்வன்
பிரணவன்
ஜெயராசா
தனது
கை
வண்ணத்தை
காட்டியிருந்தார்.
பாட்டும்
நானே
பாடலுக்கு
மிகவும்
திறமையாக
மிருதங்கம்
வாசித்து
அனைவரதும்
கரகோஷத்தை
பெற்றிருந்தார்
பிரணவன்.
ஹரி
மயூரன்
தபேலா
மற்றும்
Handsonic
வாத்தியங்களை
வாசித்தார்.
உன்னைக்
காணாத
பாடலுக்கு
தபேலாவை
திறம்பட
வாசித்திருந்தார்
ஹரி.
ஐஸ்வர்யா
மெட்ராஸ் சுப்பிரமணியம் மிகவும் இனிமையான குரல்
வளம் கொண்ட ஒரு பாடகி.
அண்மைக் காலங்களில் இவரை பல மேடைகளில்
காணக் கூடியதாக உள்ளது. இவர் பாடிய
மூன்று பாடல்களுமே மிகவும் இனிமையாக பாடியிருந்தார்.
அவற்றில் முன்னி பட்னாம் எனும்
ஹிந்தி பாடல் என்னை மிகவும்
கவர்ந்தது. செல்வி மாயி ராகவன்
தைய தக்க தக்கா என்னும்
பாடலையும் Who is the Hero என்னும் பாடலையும் பாடியிருந்தார்.
என் மனதை மிகவும் கவர்ந்த
பாடல் Who is the hero. மிகவும் இனிமையாக அந்த
பாடலுக்கு தேவையான மாதிரி ஆரம்பத்தில்
இருந்து இறுதி வரை மிகவும்
விறுவிறுப்பாக அந்த பாடலைப் பாடி
எல்லோரதும் பாராட்டைப் பெற்றிருந்தார் மாயி. செல்வி கண்மணி
ஜெகேன்திரனின் அந்த இனிமையான குரலை
நாம் பல மேடைகளில் கேட்டிருகின்றோம்.
மிகவும் உச்சஸ்தாயியில் பாடக் கூடிய ஓர்
பாடகி. அவர் நாளை இந்த
வேளை பார்த்து என்னும் சுசீலாவின் பாடலைப்
பாடி எல்லோரது பாராட்டையும் பெற்றிருந்தார். அத்துடன் ராஜஹம்சமே எனும் மலையாளப் பாடலையும்
மிகவும் திறம்படப் பாடியிருந்தார். செல்வி கேஷிகா அமிர்தலிங்கம்
மாயம் செய்தாயோ என்னும் பாடலை வழமை
போல் மிகவும் விறு விருப்பாகவும்
இனிமையாகவும் பாடி இருந்தார். இவரும்
பல மேடைகளில் பாடி பலரது பாராட்டையும்
பெற்ற ஒரு பாடகி. வாடா
மாப்பிள்ளை என்னும் பாடலை தனது
தம்பி திவேஷ் அமிர்தலிங்கத்துடன் இணைந்து
இருவரும் மிகவும் நன்றாக பாடியிருந்தார்கள்.
சேயோன் ராகவன் தனது திறமையை
வாத்தியக் கருவிகளில் மட்டும் காட்டாது தனது
வலிமையானவும் இனிமையான குரல் வளத்தையும் இந்த
மேடையில் காட்டியிருந்தார். ஏற்கனவே அன்பாலயம் நிகழ்வில்
பாட்டும் நானே பாடலைப் பாடி
பலரது கரகோஷத்தை தன் வசப் படுத்திக்
கொண்ட சேயோன் இந்த மேடையிலும்
அதனை மிகவும் திறம்பட பாடினார்.
அத்துடன் உன்னை காணாது என்னும்
விஸ்வரூபத் திரைப் படப் பாடலையும்
மிகவும் திறம்படப் பாடினார். கண்மணியும் சேயோனும் இணைந்து சொல்லிட்டாலே என்னும்
கும்கி படப் பாடலை இனிமையாக
வழங்கி இருந்தார்கள். Bass Guitar தனது கை வண்ணத்தை
காட்டிய செல்வன் ரமணன் மணிவண்ணன்
ஐஸ்வர்யாவுடன் இணைந்தது தெலுங்குப் பாடலைப் பாடியிருந்தார். அவருக்கும்
ஒரு சபாஷ் போட்டே ஆக
வேண்டும். மொத்தத்தில் லதாங்கி லயம் இசைக்
குழுவினர் ஓர் இனிமையான திறமான
நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த இசைக் குழுவினை
ஒன்று சேர்த்து நெறி அமைத்த திருமதி
குமுதினி ராகவனைப் பாராட்டி ஒரு நினைவுப் பரிசினையும் வழங்கி
இருந்தார்கள் நிகழ்ச்சியின் ஒருங்கமைப்பாளர்கள்.
இந்த நிகழ்வில் இடைவேளையின் முன் மண்டபம் நிறைந்த கூட்டம் காணப் பட்டது. ஆனால் நடன நிகழ்வு முடிந்தவுடன் இடைவேளையின் பின் மண்டபத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப் பட்டது. இது மனதிற்கு சற்று வருத்தத்தை அளித்தது. தமது குழந்தைகளின் நிகழ்ச்சி முடிந்தவுடன் பெற்றோர் நிகழ்ச்சியில் இருந்து போய் விடுகின்றனர். நிகழ்ச்சி தாமதமாக தொடங்கி சரியான நேரத்திற்கு முடிவடையவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு முடிவுற்றது. நடன பாடசாலைகளை நடாத்தும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களது பெற்றோர்களிடம் நிகழ்ச்சி முடியும் வரை இருக்குமாறு கூற வேண்டும். இல்லை என்றால் அவர்களின் நிகழ்ச்சியை இடை வேளையின் பின் நிகழ்ச்சி நிரலில் வைக்க வேண்டும் என்பது எனது கருத்து. தங்களின் பிள்ளைகள் போலவே மற்றவர்களின் பிள்ளைகளும் கஷ்ட்டப் பட்டு நிகழ்ச்சிகளை தயார் படுத்தி வழங்குகின்றார்கள். அதனையும் கண்டு கழித்து அவர்களையும் ஊக்கப் படுத்துவதே நம் கடமை என்பதை தமிழன் மறந்து விடக் கூடாது. எனது இந்தக் கருத்தில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
மதுரா மகாதேவ்
1 comment:
உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது, இது போன்ற விமர்சனங்களால் எங்கள் இளைய சமுதாயம் இன்னும் தம்மை செம்மைப் படுத்தவும், ஊக்கப் படவும் செய்வார்கள் என்பது நிச்சயம். நன்றிகள் மதுரா மகாதேவ்
Post a Comment