சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 2014 - பேச்சுப் போட்டிகள் 07 - 09 - 2014

.
நமது இளைய தலைமுறையினர்க்கு தமிழின் தொன்மையையும், சங்கத் தமிழ் இலக்கியங்களின் சிறப்பைப் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன், தமிழ் இலக்கிய கலை மன்றம் சங்கத் தமிழ் மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் மாதம் நடத்தவுள்ளது. 
மாநாட்டின் ஓர் அங்கமாக, செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி (September 7, 2014) மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளும், பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும் மாநாட்டு மேடையில் அறிஞர்களால் வழங்கப்படும்.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

பிரிவுகள்
பிறந்த திகதி விவரம்
போட்டி - தலைப்புகள்
ஆரம்பப்பிரிவு
(7 முதல் 9 வயதிற்குக் கீழ்)
8.09.2005 முதல் 7.09.2007  வரை பிறந்தவர்கள்
முத்தமிழ்
கீழ்ப்பிரிவு
(9 முதல் 12 வயதிற்குக் கீழ்)
8.09.2002 முதல் 7.09.2005  வரை பிறந்தவர்கள்
தமிழின் தொன்மை
மத்தியப்பிரிவு
(12 முதல் 15 வயதிற்குக் கீழ்)
8.09.1999 முதல் 7.09.2002  வரை பிறந்தவர்கள்
சங்க இலக்கியங்கள்
மேற்பிரிவு
(15 முதல் 19 வயதிற்குக் கீழ்)
8.09.1995 முதல் 7.09.1999 வரை பிறந்தவர்கள்
சங்ககால மக்களின் வாழ்க்கை முறை
பேச்சுப் போட்டிக்கான வசனங்களையும், விண்ணப்பப்படிவங்களையும் நமது www.tikmsydney.org  இணையதளத்திலோ அல்லது இணையப் பத்திரிகையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்கும்படி sangamcompetitions@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது மேலே உள்ள மன்றத்தின் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும். பங்குபற்றும் நபர் ஒருவருக்கு நுழைவுக் கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தன்று பெறப்படுகின்றது.
மேலதிக விவரங்களுக்கு:
திருமதி க ஜெகநாதன்    - 02 9649 1294

திருமதி பி ராஜலிங்கம்   - 0432 259 414
திரு அன்பு ஜெயா        - 0423 515 263

திரு பஞ்சாத்தரம்         - 02 9643 5224
திரு கு கருணாசலதேவா  - 0418 442 674








 

விண்ணப்பப் படிவம் – கடைசி நாள் : 31 ஆகஸ்டு 2014.


சங்கத் தமிழ் - பேச்சுப் போட்டி 2014



கீழே குறிப்பிட்டுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் நடைபெறும். 

பங்குபற்றுபவரின் பெயர் :

தமிழில்


In

English


பிறந்த திகதி :


பெற்றோரின் பெயர் :


விலாசம் :




தொலைபேசி இலக்கம் :


Email Address:



பின்வரும் அட்டவணையில் பொருத்தமான இடத்தில் புள்ளடி இடுக :

பிரிவுகள்

பிறந்த திகதி விவரம்

X

போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்

போட்டித் தலைப்புகள்

X

ஆரம்பப்பிரிவு

(7 முதல் 9 வயதிற்குக் கீழ்)


8.09.2005 முதல் 7.09.2007  வரை பிறந்தவர்கள்



7-09-2014

பிற்பகல் 2.00 மணி


முத்தமிழ்


கீழ்ப்பிரிவு

(9 முதல் 12 வயதிற்குக் கீழ்)


8.09.2002 முதல் 7.09.2005  வரை பிறந்தவர்கள்



7-09-2014

பிற்பகல் 2.30 மணி


தமிழின் தொன்மை


மத்தியப்பிரிவு

(12 முதல் 15 வயதிற்குக் கீழ்)

8.09.1999 முதல் 7.09.2002  வரை பிறந்தவர்கள்



7-09-2014

பிற்பகல் 3.00 மணி


சங்க இலக்கியங்கள்


மேற்பிரிவு

(15 முதல் 19 வயதிற்குக் கீழ்)


8.09.1995 முதல் 7.09.1999 வரை பிறந்தவர்கள்



7-09-2014

பிற்பகல் 3.30 மணி


சங்க கால மக்களின் வாழ்க்கை முறை


நான் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் போட்டி விதி முறைகளுக்கிணங்க நடந்து கொள்வேன்.



பெற்றோரின் கையொப்பம்



திகதி
ஆரம்பப்பிரிவு.
முத்தமிழ்
நாம் தமிழர். நமது தாய்மொழி தமிழ். நமது மொழி அழகுடையது.. இனிமையானது. இது செந்தமிழ், சங்கத்தமிழ், பைந்தமிழ், முத்தமிழ் என்று போற்றப்படுகிறது. தமிழ் மன்னர்கள் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள். புலவர்கள் தமிழைப் பாடினார்கள்.
இவர்கள் யாவரும் வளர்த்துத் தந்தது முத்தமிழையே. தமிழ் இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவுகளாக வளர்ந்தது. பேச்சும் உரையும் இயற்றமிழ் (இயல் + தமிழ்) எனப்பட்டது. பாடலாகப் பாடப்பட்ட தமிழ் இசைத்தமிழ் ஆனது. பேச்சும் பாட்டும் அபிநயத்தோடு சேர்ந்த போது நாடகத்தமிழ் உதித்தது.
எமது நாளாந்த வாழ்க்கையில் பேச்சு, பாடல், உடல் அசைவுகளோடு கூடிய உரை இயல்பானதே. இதையே முத்தமிழ் என்று எம் முன்னோர் கூறினர். சங்ககாலத்தில் புலவரும் பாணரும் கூத்தரும் முத்தமிழை வளர்த்தனர். இன்று நாமும் முத்தமிழைப் பயன்படுத்துகிறோம். தமிழில் பேசுகிறோம். தமிழில் பாடுகிறோம். தமிழில் நாடகம் நடிக்கிறோம்.
வாழ்க முத்தமிழ்.
Send application forms to: sangamcompetitions@gmail.com or to the above address by 31 August 2014.
கீழ்ப்பிரிவு
தமிழின் தொன்மை
நமது தாய்மொழி தமிழ் மிகப் புராதனமானது; பழைமையானது, தொன்மையானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இன்றும் நிலைபெற்றுச் செம்மொழியாகி நிமிர்ந்து நிற்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!.
உலகில் மிகப் பழைமையான மொழிகள் ஆறு என்பர். அவற்றில் நம் தமிழ்மொழியும் ஒன்றாகும். வடமொழி, இலத்தீன் ஆகியன இன்று பயன்பாடு இல்லாமல் போய்விட்டன. தமிழ் இன்றும் வாழ்கிறது. இது பெருமை அல்லவா!
உலகில் மிகப் பழைய நூலாக, மொழி ஆய்வாளர்கள் இன்று கண்டது எமது தொல்காப்பியத்தையே. தொல்காப்பியம் சங்கத்தமிழ் நூல் ஆகும். அது கிறிஸ்துவுக்கு முற்பட்டது. அது தமிழின் தொன்மையைப் பறைசாற்றி நிற்கிறது.\
வேறெந்த மொழியிலும் காணாத அளவில் மிகத் தொகையான இலக்கியங்களை நாம் கொண்டுள்ளோம். இந்த இலக்கியக் குவியல் எம் மொழியின் தொன்மைக்கும் சான்றாகும்.
இத்தகைய நீண்ட பாரம்பரியம் கொண்ட மொழி எம்முடையது. தமிழ் அரசர்களும் புலவர்களும் வள்ளல்களும் ஆதரித்து வளர்த்த மொழி எம்முடையது. இத்தகைய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்று பெருமை கொள்வோம். இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் தமிழ் வாழ, தமிழைப் பேசுவோம், தமிழைக் கற்போம், தமிழைப் பேணி வளர்ப்போம்.   வளர்க தமிழ்.
Send application forms to: sangamcompetitions@gmail.com or to the above address by 31 August 2014.



மத்தியப் பிரிவு

சங்க இலக்கியங்கள்

சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்கள் அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.  இவற்றை அகம், புறம் என இரு பிரிவுகளாகப் பகுத்தனர்.

ஓர் ஆணும் பெண்ணும் உள்ளம் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள் அகப்பாடல்கள் எனப்பட்டன. போர், வீரம், ஆட்சி அமைப்பு, கொடை போன்றவற்றை விவரிக்கும் பாடல்கள் புறப்பாடல்கள் என்ற பிரிவில் அடங்கின.

பண்டைய இலக்கியங்களில் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகிய இலக்கண நூல்களே நமக்குக் கிடைத்த நூல்கள். மற்ற நூல்கள் அழிந்துபோயின.

அந்தக் காலத்தில் புலவர்கள் அவ்வப்போது பல பாடல்களைப் பாடினார்கள். நாளடைவில் அவை மறைந்து போய்விடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று.  ஆதாலால், கடைச்சங்கக்  காலத்தின் இறுதியில் ஆங்காங்கு வழங்கிய பாடல்களைத் தொகுத்து ஒழுங்கு படுத்தினார்கள்.  அவற்றை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று வகைப்படுத்தினார்கள்.

நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்ற எட்டு நூல்கள் எட்டுத்தொகை நூல்களில் அடங்கும். திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி. குறிஞ்சிப்பாட்டு போன்ற பத்து நூல்கள் பத்துப்பாட்டில் அடங்கும். ஒப்புயர்வற்ற சங்க காலத்தினை தமிழரின் பொற்காலம் என ஆசிரியர்கள் போற்றிப் புகழ்கின்றனர்.

Send application forms to: sangamcompetitions@gmail.com or to the above address by 31 August 2014.


மேற்பிரிவு

சங்க கால மக்களின் வாழ்க்கை முறை


சங்க காலம் தமிழரின் பொற்காலம் என்று கூறப்பட்டது. சங்க காலச் செய்யுட்கள் மூலமாக அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறியலாம்.

சங்க காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர்.

காடும் காட்டைச் சார்ந்த இடத்தை முல்லை என்றும்,

மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும்,

வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும்,

கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அந்த நிலங்களை ஒட்டியே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

இவற்றில் குறிஞ்சி, முல்லை நிலங்கள் வறண்ட பகுதிகளாக மாறும்போது பாலை என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்தனர்.

இல்லற வாழ்க்கையைப் சங்க காலத்தில் அகம் எனக் குறிப்பிட்னர். இதற்குச் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை,  கலித்தொகை, போன்ற அகப்பொருளைப் பாடும் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

சங்க காலத் தமிழர்கள் களவு, கற்பு எனத் தம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். தாமாகக் கூடுவது களவு வாழ்க்கை என்றும், பெரியோர்களால் கூட்டப்பட்ட வாழ்க்கை கற்பு வாழ்க்கை என்றும் கொண்டிருந்தனர்.

அக்காலத்தில் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர்.  கல்வி எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது. கல்வி கற்பவன் மன்னனாகவும் இருக்கலாம் அல்லது எளிய குடியில் பிறந்தவனாகவும் இருக்கலாம். பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன. கல்வி பயிலும்போது மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.

அக்காலத்தில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகிய கலைகள் மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்ததாகத் தெரிகிறது. நாட்டியம், கூத்து ஆகிய கலைகளைப் பற்றிய பல விரிவான நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன.

மேலே கூறப்பட்ட செய்திகளில் இருந்து நாம் சங்க காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி ஓரளவு அறிய முடிகிறது.

-----------------------------

Send application forms to: sangamcompetitions@gmail.com or to the above address by 31 August 2014.





No comments: