காந்தி' படத்தின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

.

லண்டன் : 'காந்தி' திரைப்படத்தை இயக்கி, இந்திய மக்களின் இதயங்களில் Richard2நீங்காத இடம் பிடித்த, பிரிட்டன் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ, 90, உடல்நலக் குறைவால்,  லண்டனில் காலமானார். ஹாலிவுட்டில் பிரபல இயக்குனர் களில், ரிச்சர்ட் அட்டன்பரோ முக்கியமானவர். 1942ல், திரைப்பட துறையில் அடி எடுத்து வைத்த இவர், ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கியுள்ளதுடன், 78 படங்களில் நடித்தும் உள்ளார். ஆனாலும், 1982ல் இவர் இயக்கிய, 'காந்தி' திரைப்படம் தான், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, தயாரிக்கப்பட்ட இந்த படத்துக்கு, எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதும், அவருக்கு கிடைத்தது. இந்திய அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றார். ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் வீட்டின் மாடிப் படியில் தவறி விழுந்த அட்டன்பரோவால், நடக்க முடியாமல் போய் விட்டது. இதனால், சக்கர நாற்காலியின் உதவியுடன் வலம் வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர் இறந்தார். அவரின் மறைவுக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், காந்தி படத்தில், காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர், இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

No comments: