உலகச் செய்திகள்


எபோலா நோயாளர்களை மறைத்து வைத்தால் 2 வருட சிறைத்தண்டனை

இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட்

ஐ.எஸ். போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்க போராளி உயிரிழப்பு

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் சீரமைப்பு=================================================================

எபோலா நோயாளர்களை மறைத்து வைத்தால் 2 வருட சிறைத்தண்டனை

எபோலோ நோய் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு மறைந்து வாழ உதவி செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு வழி­வகை செய்யும் புதிய சட்­ட­மொன்று சியரா லியோன் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
மேற்­படி சட்­டத்தை மீறு­ப­வர்கள் இரு வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­கொள்ள நேரிடும் என அந்­நாட்டு நீதி அமைச்சர் தெரி­வித்தார்.இந்த சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­ப­தியின் அங்­கீ­கா­ரத்தை பெற வேண்­டி­யுள்­ளது.
சியரா லியோ,ன் லைபீ­ரியா, கினியா உள்­ள­டங்­கலான மேற்கு ஆபி­ரிக்க நாடு­களில் பரவி வரும் எபோலா வைரஸ் நோயால் இது­வரை 1,427 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 2,615 பேர் நோய் தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­விக்­கி­றது.
இந்த நோய் பர­வு­வதை தடுக்க ஐவ­ரிகோஸ்ட் கினியா, லைபீ­ரி­யா­வு­ட­னான தனது எல்­லை­களை மூடி­யுள்­ளது.இதை­யொத்த எல்லை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் காபொன் செனகல், கமெரூன், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடு­க­ளிலும் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன.
எபோலா நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் கண்­ட­றி­யப்­ப­டாத நிலை­யி­லுள்ள 'நிழல் வலயம்' என அழைக்­கப்­படும் பிராந்­தி­யங்­களில் உள்ளவர்கள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தை சேர்ந்த மருத்துவ கலாநிதி கெயிஜி புகுடா கவலை வெளியிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 


இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட்

26/08/2014 தற்போது உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விடையம் ஐஸ் பக்கட் சவால், இதனை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அது ஆபத்தில் வந்து முடிகின்றது. அவ்வாறான சம்பவங்கள்  அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த நென்சி ஒலே  என்ற 17 வயது யுவதி ஒருவர் தனது தங்கையுடன் ஐஸ்பக்கட் சவாலை ஏற்பதற்கு ஆயத்தமாகி இருந்ததுடன்,ஷாவ்ன் ஒலே என்ற இவர்களின் சகோதரர் ஒருவர் இவர்களுக்கு ஐஸ் தண்ணீரை ஊற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஷாவ்ன் ஒலே இவர்களுக்கு ஊற்றுவதற்காக பெரிய பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரை வைத்திருந்த போது அவரின் கை தவரி குறித்த யுவதியின் தலையில் பாத்திரம் விழுந்துள்ளது.
 இதன் பின்பு யுவதியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு ஸ்கொட்லான்தை  சேர்ந்த 18 வயதுடைய கெமெரொன் லங்கங்ஸ்டன் என்ற இளைஞர் ஒருவரும் ஐஸ் பக்கட் சவாலை ஏற்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
நன்றி வீரகேசரி 

ஐ.எஸ். போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்க போராளி உயிரிழப்பு


27/08/2014  சிரியாவில் ஐ.எஸ். போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ் மக்கெயின் தாக்குதல் ஒன்றின் போது உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
மக்கெயின் கடந்த வார இறுதியில் சிரிய விடுதலை இராணுவத்தால் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கர்கள் சிலர் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள போராளி குழுக்களுடன் இணைந்து போராடி வருவதாக நம்பப்படுகிறது.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கிறிஸ்தவரான டக்ளஸ் மக்கெயின் இஸ்லாமிய மதத்தை தழுவி வெளிநாடு சென்றிருந்ததாகவும் அவர் துருக்கியில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் நம்பியதாகவும், அவர் சிரியா சென்றது தமக்கு தெரியாது எனவும் அமெரிக்காவிலுள்ள அவரது மைத்துனர் ஜொசெலின் ஸ்மித் கூறினார். 
நன்றி வீரகேசரி

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் சீரமைப்பு

28/08/2014 காணாமல்போன மலேசிய எம்.எச்.370 விமானத்தை தேடும் நடவடிக்கை தென் இந்து சமுத்திரத்தில் ஏற்கனவே தேடப்பட்ட பிரதேசத்தின் தென் பகுதியில் 

முன்னெடுக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
செய்மதி தரவுகளை மேலும் பகுப்பாய்வுக்குட்படுத்தியதன் மூலம் அந்த விமானம் ஏற்கனவே கருதப்பட்டதிலும் தெற்காக பயணித்திருக்கலாம் என நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தை தேடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவும் மலேசியாவும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ள நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரிலிருந்து பீஜீங் நகருக்கு 239 பேருடன் பயணித்த வேளை எம்.எச் 370 விமானம் காணாமல் போனது.
செய்மதி தரவுகளின் பிரகாரம் அந்த விமானம் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கு மேற்கே கடலில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. 
இந்நிலையில் இந்த விமானத்தை தேடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை நெதர்லாந்து கம்பனியான புக்ரோவால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. 
நன்றி வீரகேசரி

No comments: