உன் சமையல் அறையில் - தமிழ் திரைப்படம் - ரமேஷ் நடராஜா

.


இன்று Auburn Reading திரை அரங்கில் Jaffna Hindu Ladies OGA (யாழ் இந்து மகளிர்) இனால் திரை இடப்பட்டது.
பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் , பாதிக்கபட்ட மக்களுக்காகவும் இந்த நிதி சேகரிக்கும் முயர்ட்சியில் அவர்கள் இந்த திரைப்படத்தை திரையிட்டு  இருப்பார்கள் .

என்ன நோக்கதித்காக செய்து இருந்தாலும் அவர்கள் தேர்வு செய்த திரை படத்திற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நன்றி.

ஆஹா ...என்ன ஒரு அருமையான, நேர்த்தியான திரைப்படம்.

பிரகாஷ்ராஜ் என்றாலே யதார்த்தம் , அதில் இளயராஜாவும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா ?

காதல் எவ்வளவு புனிதமானது - அதை கொச்சை படுத்தாமல் எவ்வளவு தத்ரூபமாக, அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள். 


சிறு பிள்ளை வேளாண்மை ( பிரகாஷ் ராஜின் மருமகன் பெண் பார்க்கப் போகும் விடயம்) , தாழ்வு மனப் பான்மை ( பிரகாஷ் ராஜ் museum வாசலில் வைத்து சொல்லும் வசனங்கள் ) ஆதி வாசிகள் , காடுகள் அழிந்து போவது போன்ற விடயங்களை தத்ரூபமாகவும் , வன்முறை இல்லாமலும் மிகவும் அழகாக தயாரித்து வழங்கி இருக்கிறார்கள்.


ஒரு படத்தை எவ்வாறு தூக்கி என்னுமோர் தளத்திட்கு கொண்டு செல்லலாம் என்பதட்கு இளயராஜா வின் இசை ஒரு உதாரணம். ராஜா ராஜா தான். 

ஒரு அருமயான திரைப்படத்தை தேர்ந்து எடுத்து எமக்கு காட்டிய பழய மாணவர் சங்கத்திட்கு (எனது தாயார் படித்த பாடசாலை) எனது மனமார்ந்த நன்றிகள்.

பின்குறிப்பு: ஒரு சிறு வருத்தம் :
10 seat 15 seat பிடித்து வைத்திருப்போரை எவ்வாறு சமாளிப்பது ?
முருகா/யேசுவே/அல்லாவே இவர்கள் திருந்தவே மாட்டார்களா ? அம்மாவுக்கு ஒரு seat , மனைவிக்கு ஒரு seat , அல்லது குழந்தைகளுக்கு 2 seat பரவாயில்லை. ஒட்டு மொத்த row !!! சிந்தியுங்கள் தோழர்களே. இது சரியல்ல.


ரமேஷ் நடராஜா 
சிட்னி


1 comment:

putthan said...

[quote]அம்மாவுக்கு ஒரு seat , மனைவிக்கு ஒரு seat , அல்லது குழந்தைகளுக்கு 2 seat பரவாயில்லை. ஒட்டு மொத்த row !!! சிந்தியுங்கள் [quote]


மாமா,மாமி,மச்சாள்மாருக்கு,மச்சான்மாருக்கு, யாராம் சீட் பிடிக்கிறது?? கி..கி ...ரமேஸ்......கே.கே.எஸ்சில் ஏறி புகையிரதத்திற்கு இடம்பிடிச்ச பரம்பரை .....நாங்கள்......