‛‛அக்ராஸ் தி ஹால்'' எனும் ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவலாக ‛உன்னோடு நான்', ‛நேர் எதிர்' என ஏற்கனவே இரண்டு படங்கள் சமீபமாக தமிழில் வெளிவந்து, வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டிருந்தாலும், அதே வரிசையில் ‛அக்ராஸ் தி ஹாலை' சுவாகா செய்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, இந்தவாரம் சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‛‛கபடம்'' சற்றே வித்தியாசம்!
கதைப்படி நாயகர் விச்சு எனும் சச்சினுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணான பத்மினி எனும் அங்கனாராய், கணவராய் வரப்போகிற விச்சுவிடம், கல்யாணத்திற்கு அப்புறம் கிடைக்க வேண்டிய நெருக்கத்தையும், கிறக்கத்தையும் முன்கூட்டியே எதிர்பார்க்கிறார். விச்சுவோ, எல்லாம் திருமணத்திற்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். சற்றே வார்த்தையால் பத்மினியை சீண்டவும் செய்கிறார். இதனால் பத்மினியின் தாப பார்வை விச்சுவின் நண்பர் சிவா எனும் ஆதித்யா மீது பாய்கிறது.
விச்சுவிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சிவாவுடன் ஒரு ேஹாட்டலில் ரூம்போட்டு சல்லாபம் கொள்ளுகிறார் பத்மினி! விஷயம் தெரிந்த விச்சு, ேஹாட்டலில் அவர்கள் சல்லாபிக்கும் அறைக்கு எதிர் அறையில் தங்கி எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் ‛கபடம்' படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
சச்சினாக விச்சு, பத்மினியாக அங்கனாராய், சிவாவாக ஆதித்யா, ேஹாட்டல் ரூம் பாயாக ‛காதல்' சரவணன், கவிதாவாக அணிகா, அஸ்வின், ேஹமா என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் விச்சுவாக வரும் சச்சின், அஜீத்தை அறிமுகம் செய்த சோழா எஸ்.பொன்னுரங்கத்தின் தயாரிப்பில் அறிமுமாகியிருப்பதாலோ என்னவோ, அடிக்கடி ‛அமராவதி' அஜீத்தை ஞாபகப்படுத்த முயன்று அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். அல்டிமேட்டாக வாழ்த்துக்கள்!
கே.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, சாஷியின் இசை, எம்.கே.மணியின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஜோதி முருகனின் எழுத்தும், இயக்கமும் ‛அக்ராஸ் தி ஹால்' ஆங்கிலப்படத்தை, தமிழில் மூன்றாவது முறையாக தழுவியிருப்பதால் கள்ளத்தனத்தை சொல்லும் கபடம், நல்ல படமென்றாலும் கள்ளப்படமாகவே தெரிகிறது!
மொத்தத்தில், ‛கள்ளத்தனம் - கபடம் - கலப்படம்!'
நன்றி தினமலர்
No comments:
Post a Comment