சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டி - 2014 . 14.09.2014

.
இப் போட்டிகள் September மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

பாலர் ஆரம்ப பிரிவு 
01.08.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு 
01.08.2007 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு 
01.08.2005 க்கும் 31.07.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு 
01.08.2002 க்கும் 31.07.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி



மேற்பிரிவு
01.08.1999 க்கும் 31.07.2002 க்கும் இடையில் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு
31.07.1999 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள் 
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி


போட்டிகளுக்கான விண்ணப்படிவம்

போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான கரும பீடத்திலும்; பின்வரும் அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

திருமதி க ஜெகநாதன்        02 9649 1294    
செல்வி பி இராஜலிங்கம் 0432 259 414
திரு அன்பு ஜெயா 0423 515 263
திரு கு கருணாசலதேவா 0418 442 674
திரு செ மகேஸ்வரன் 02 9642 5241
திரு செ பாஸ்கரன் 0407 206 792
திருமதி சி நிஷ்கலா  02 9863 1465
திருமதி அ சாரதா 02 9863 3769
திரு சி தியாகராஜா  0414 631 860
திரு ப பஞ்சாட்சரம்  02 9643 5224
திரு இரவி ஆனந்தராஜா 0424 674 642

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 07 September 2014 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக  durgacomp2014@gmail.com  என்ற மின்னஞ்சல்   முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்திலோ மேற்குறிப்பிட்ட அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமோ கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக  $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.   

போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு பெற்றுக்கொள்ளலாம்.



























No comments: