சைக்கிள் ஓட்டுவது நல்லதா ?

.


 நடப்பது  ,நீந்துவது ,படகு விடுவது சைக்கிள்  ஓட்டுவது இவையெல்லாம் மிதமான தேகப்பயிற்சிகள் . 
இளைங்கர்களும் ,முதியவர்களும் செய்யக்கூடிய  பயிற்சி சவாரி .சைக்கிள் ஓட்டுவதை  அவசியத்திற்காக செய்யப்படும்  அலுவலாக நினைக்கிறோம் . பயிற்சிக்காக  எவரும் நினைப்பது இல்லை .அமெரிக்காவில் உள்ள பிரபல இருதய நோய் ஆராய்ச்சி கழகம் சைக்கிள் ஓட்டுவதை  ஆராய்ச்சி செய்து இதனால் இருதயநோய்களை போக்கலாம் என்று கண்டு பிடித்திருக்கிறது .அமெரிக்காவில் இருதய நோயாளிகள் பெருகி வருவதால் இவர்களுக்குச் சைக்கிள் சவாரி அவசியம் தேவை என்று சொல்லி இருக்கிறார்கள் .

நாம் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டோ ,நின்று கொண்டோ ,படுத்துக்கொண்டோ  இருக்கும் போது இரு நிமிடத்தில்  இருபது தடவை சுவசிக்கிறோம் .அப்போது சுத்தமான காற்றுஇரத்த குழாய்கள் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை  திரும்புகிறது .இதனால் பிராண வாயு கிரகிக்கப்பட்டு ,கரியமில வாயு  தள்ளப்படுகிறது .




சாதாரண நிலையில் இரத்த ஓட்டம் மந்த கதியில் செல்கிறது .ஆனால் நடக்கும்  போதோ ,ஓடும் போதோ சைக்கிள் சவாரி செய்யும் போதோ இரத்த ஓட்டம் துரிதமாக நடைபெறுகிறது அதிகமான காற்றை சுவாசிக்க வாய்ப்பு ஏற்படுகிறது .இதனால் அதிக  அளவில்கரியமில வாயுவை வெளியிட  முடிகிறது .

சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கைகள் ஹான்டில் பா ரை இப் பார்த்துக் கொண்டு திரும்பும் திசை  எல்லாம் கை அசையவும் ,கால் பாதங்கள் மீதியை அழுத்தி ,பெடல் சுற்றும் போது  கால் எலும்புகளும் ,கெண்டை கால் தசை களும் ,,முட்டி ,தொடைப்பகுதி மற்றும் இடுப்பு பகுதியும் அதோடு சேர்ந்து வயரும்  அசைக்கப்படுவதால் 
கால்களுக்கு வரும் ரத்தம் மேலே தள்ளப்பட்டு இருதயத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகிறது.நல்ல ஜீ ரண சக்தி உண்டகிறது .நரம்புகளுக்கும் ,  எலும்புகளுக்கும் சைக்கிள் சவாரி   வலுவூட்டுகிறது .
மலசிக்கலை போக்கவும் ,உடல் கண த்தை ,ஊளைசதைகளை குறைக்கவும் மிகுந்த நன்மையை செய்கிறது .நீண்ட நேர சைக்கிள் பயணங்களால் மூல நோய் ,விரை வீக்கம் ஏற்படுகிறது என்று சொல்லப்படுவது உண்மையே .எதுவும் அளவை மிஞ்சக்கூடாது .

பியுட்டி கிளினிக்குகளில் கால் சைக்கிள் பயிற்ச்சியும் ஒரு சிகிச்சை முறையாக   சேர்த்து கொண்டு செயல் படுகிறார்கள் .சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்று  சொல்லப்பட்டாலும் இப்போது உடல் நலத்தை கருதி பணக்காரர்களின் வாகனமாக மாறிக்கொண்டு வருகிறது .எல்லா வயதினருக்கும் சாத்தியமான ஓர் உடற் பயிற்சி சாதனம் சைக்கிள் . நம்மை சுமந்து கொண்டே நமக்கு நன்மை  தரும் ஓர் இயந்திரம் சைக்கிள் என்பதை மறந்து விடக்கூடாது .

  எளிய மருத்துவ வழிகாட்டி . என்ற புத்தகத்திலிருந்து .

தொகுப்பு : ச. சுந்தரபெருமாள் .பட்டுக்கோட்டை.தமிழ்நாடு.

No comments: