தமிழ் சினிமா


வடகறி




 தமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை அடைய நினைத்தால், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை சொல்லும் படம் தான் ‘வடகறி'.இப்படம் வருமா? இல்லை வராதா? என 1000 கேள்விகள் சுத்திக் கொண்டிருக்க, ஒரு வழியாக படம் இன்று வந்துவிட்டது.படம் வெளிவருவதற்கு முன்பே எல்லோரும் படத்தை பெரியளவில் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர், இதற்கு முழு காரணம் கவர்ச்சி புயல் சன்னி லியோன் இதில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்பது தான்.

கதை என்ன?

‘மெடிக்கல் ரெப்’பாக வேலை செய்யும் ஜெய்க்கு, சுவாதியைப் பார்த்ததும் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. ‘நல்ல ஃபோன் வச்சிருக்கிறவங்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க’ என ஆர்.ஜே.பாலாஜி கொடுக்கும் ஒரு கேவலமான அறிவுரையால், விலையுயர்ந்த ஃபோனை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ஜெய்.ஆனால், வீட்டு சூழ்நிலை காரணமாக அவரால் விலையுயர்ந்த போனை வாங்க முடியாமல் போகிறது. இந்நிலையில் டீக்கடை ஒன்றில் அனாதையாக கிடக்கும் ‘ஐபோன்’ ஒன்று ஜெய்யின் கைக்கு கிடைக்க, தன்னிடம் வந்த ஐபோனை சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்துவிடலாம் என ஜெய் நினைக்கும்போது, நண்பர்கள் அவர் மனதை மாற்றி அந்த போனை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.அவருக்கும் அது சரி எனப்படவே அதிலிருக்கும் சிம் கார்டை எடுத்துவிட்டு, தன் சிம்மைப் போட்டு அந்தப் போனை பயன்படுத்தத் தொடங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மனம் மாறும் ஜெய், சம்பந்தப்பட்டவரிடமே போனை ஒப்படைத்துவிடலாம் என நினைத்து, பழைய சிம்மை மீண்டும் மாற்றுகிறார்.அப்போது வரும் ஒரு போன் காலுக்கு பதிலளிக்கும் ஜெய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்கின்றன. அது என்ன பிரச்சனை? அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா? என்பதே ‘வடகறி’ படத்தின் மீதிக்கதை!

பலம்

ஜெய்யின் எதார்த்த நடிப்பும், ஆர்,ஜே.பால்ஜியின் டைமிங் டையலாக்கும் தான், படத்தை எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.இவர்களைத் தவிர வெங்கட் பிரபு, கஸ்தூரி, மிஸா கோஷல், அருள்தாஸ் என ஆங்காங்கே சில பிரபலங்கள் வந்து போகிறார்கள். ஒரே ஒரு தேவையில்லாத பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டிருக்கிறார் ‘கவர்ச்சிக் கன்னி’ சன்னி லியோன். இதுவே படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது. படத்தில் அடிக்கடி வரும் அந்த செல்போன் காமெடி கொஞ்சம் எரிச்சலை வரவைக்கிறது.

பலவீனம்

திரைக்கதை இந்த மாதிரி சேஸிங் படங்களுக்கு வேகமாக இல்லாதது பெரிய மைனஸ். பாடல்கள் சுமார் ரகம் தான், யுவன் இசையமைத்திருக்கும் உயிரின் மேலொரு பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் நன்றாகவே உள்ளது.மொத்தத்தில் வடகறியை ஒரு தடவைக்கு மேல் டேஸ்ட் செய்ய முடியாது.

























- cineulagam


















வேலையில்லா பட்டதாரி ட்ரைலர்!



இந்தியன் புருஸ்லீ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் 25வது படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை முதன் முதலாக பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் தனுஷுன் நண்பருமான வேல்ராஜ் இயக்கியுள்ளார்.ட்ரைலர் ஆரம்பத்திலேயே தனுஷ் வழக்கம் போல் ‘ஒரு இண்டர்வியுல போய் நாலு வார்த்தை இங்கிலிஷ் பேசுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’ என்று தன் அப்பாவான சமுத்திரகனியிடம் கேட்கிறார். அதிலிருந்து தொடங்குகிறது, தனுஷுன் அக்மார்க் பார்முலா. பின்பு தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு வருவது போல் அமலா பாலுடன் காதல், பாடல் தான், மீண்டும் பொறுப்பாக ஒரு வேலைக்கு தனுஷ் செல்வது போலவும், அதில் வரும் பிரச்சனை, பின் தொழிலாளர்கள் தலைவன் ஆவது போல் ஏதோ தெரிகிறது. கண்டிப்பாக இந்த படத்தில் திருவிளையாடல் தனுஷை பார்க்காலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் இன்னும் ஸ்பெஷலாக நம் எல்லோருக்கும் பிடித்த விவேக்கும் அவர் பங்கிற்கு வசனங்களில் கலக்குகிறார். ட்ரைலரின் இறுதியாக ‘ரகுவரனை வில்லனாக தான் பார்த்திருப்ப, ஹீரோவா இனி தான் பார்க்க போற’ என்று சொல்லி சிகரெட்டை பற்ற வைக்கும் போது ரஜினி ஸ்டெயில் தெரிகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கப்போவது அனிருத்தின் இசை தான்.மொத்தத்தில் மீண்டும் கலகல தனுஷை பார்ப்பது உறுதி. நன்றி cineulagam


No comments: