இலங்கைச் செய்திகள்


கடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்

 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

இலங்கை வரும் பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்!

17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

ஞானசார தேரருக்கு அமரிக்காவுக்குள் நுழைய தடை

 "சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்திவிட்டனர், எம்மீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்கும்'

பொதுபலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது : இராணுவப் பேச்சாளர்

விசா­ரணைக் குழு­வுடன் தொடர்­பு­கொள்­கின்­ற­வர்கள் பழி­வாங்­கப்­ப­டவோ அச்­சு­றுத்­தப்­ப­டவோ கூடாது :ஐரோப்­பிய ஒன்­றியம்

பயிற்சிகளை இன்று நிறைவு செய்த தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு

புலி சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் கைது : சந்திரிக்காவை கொல்ல முயற்சித்தவரும் அடங்குவதாக தகவல்

இந்தோனேஷியாவில் நான்கு இலங்கையர்கள் கைது

==================================================================

கடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்

01/07/2014   மன்னார் - பொத்துவில் ஊடாக காலி வரையான கடற் பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு இந்த காலநிலை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

01/07/2014  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
இலங்கை வரும் பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்!

01/07/2014   இலங்கைக்கு அடுத்த வருடம் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், வடக்கிற்கும் விஜயம் செய்வார் என மன்னார் ஆயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மடு தேவாலய அதிகாரிகளை நேற்றையதினம் பாப்பரசரின் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மடுத்திருத்தல நிர்வாக உத்தியோகத்தர் அருட்தந்தை எமலியானுஸ்பிள்ளை கலந்துகொண்டார்.
இலங்கைக்கான விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் மடுத்திருத்தலத்திற்கும் விஜயம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மடுத்திருத்தலம் மற்றும் வடக்கிற்கான  பாப்பரசரின் விஜயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் பின்னர் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

01/07/2014  தலை­மன்னார் கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்டு மன்னார் நீதி­மன்றில் ஆஜர்­படுத்­தப்­பட்ட இந்­திய மீன­வர்கள் 17 பேரையும் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறு மன்னார் நீதி­பதி ஆனந்தி கன­க­ரட்ணம் உத்­த­ரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்­ப­ரப்பில் சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்­ட­தாகத் தெரி­வித்து 3 இந்­திய இழுவைப்­ப­ட­கு­களில் மீன்­பி­டியில் ஈடு­பட்ட 17 இந்­திய மீன­வர்­களை தலை­மன்னார் கடற்­ப­டை­யினர் கடந்த சனிக்­கி­ழமை பிற்­பகல் கடலில் வைத்து கைது­செய்து ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4:00 மணி­ய­ளவில் மன்னார் மாவட்ட கடற்­றொழில் நீரி­யல்­வள திணைக்­கள அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தனர்.
குறித்த 17 மீன­வர்­க­ளையும் மன்னார் மாவட்ட கடற்­றொழில் நீரி­யல்­வள திணைக்­கள அதி­கா­ரிகள் நேற்று திங்கள்கிழமை மன்னார் நீதி­மன்றில் நீதி­பதி செல்வி ஆனந்தி கன­க­ரட்ணம் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்தினர்.
இதைத்­தொ­டர்ந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதி­மன்ற நீதி­பதி செல்வி ஆனந்தி கன­க­ரெட்ணம் இவ் மீன­வர்­களை எதிர்­வரும் 4ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்ளார்.
நன்றி வீரகேசரிஞானசார தேரருக்கு அமரிக்காவுக்குள் நுழைய தடை

01/07/2014  பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசா தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்தே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க உயரிஸ்தானிகராலயம் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரியும் ஊடகப் பேச்சாளருமான டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
பொது பல சேனா அமைப்பை தோற்றுவிக்க முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியான வீஸா வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அந்த வீசாவானது மேலும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கப்பட தயாராக இருந்துள்ளது. இந் நிலையிலேயே அமெரிக்க உயரிஸ்தானிகராலயம் ஊடாக அந் நாட்டின் இராஜாங்க அமைச்சின் தடை தொடர்பான விபரம் ஞானசார தேரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலானது கடந்த வாரம் அமெரிக்க உயரிஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஒருவரூடாக தேரருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் வீசா தடை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ' எனது அமெரிக்கா வீசாவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜன நாயகம் தொடர்பில் இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகின்றது. சிங்கள பெளத்தர்கள் இலங்கையில் பெரும்பான்மையானாலும் உலகை பொருத்தவரையில் சிறுபான்மையினராவர். அப்படிப்பட்ட சிறுபான்மை மக்கள் தொடர்பில் குரல் கொடுத்து வரும் எனக்கு அமெரிக்கா செல்வது தடை செய்யப்பட்டுள்ளது' என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கலகொட அத்தே ஞானசார தேரரின் அமெரிக்கா வீசா தடை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க உயரிஸ்தானிகராலயத்துக்கு பொது பல சேனாவும் விஷேட விளக்கம் ஒன்றை அளிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தை கேசரி தொடர்புகொண்டு கேட்ட போது, அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு அமைய தனிப்பட்டவர்களின் வீசா விண்ணப்ப விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கருத்து வெளியிடாது என்று தூதரகத்தின் பேச்சாளர் கிறிஸ்டோப்பர் டீல் தெரிவித்தார்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் வன்முறைகளை தொடர்ந்து கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ள நிலையில் 'பேஸ் புக்' நிறுவனமும் அண்மையில் ஞானசார தேரர்,பொதுபல சேனா அமைப்பின் முகப் புத்தக கணக்குகளை முடக்கியிருந்தது. அந்த நிறுவனத்துக்கு குரித்த கணக்குகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையிலேயே இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது.இந் நிலையிலேயே தற்போது கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி "சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்திவிட்டனர், எம்மீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்கும்'

02/07/2014  இரு தரப்­பி­ன­ருக்­கி­டையே ஏற்­பட்ட சிறிய பிரச்­சி­னை­யினை முழு­நாட்­டிற்கும் பரப்பி சர்­வ­தேச அளவில் முஸ்­லிம்கள் கொண்டு சென்­று­விட்­டனர். பொது­ப­ல­சேனாமீது எவ­ரேனும் கை வைத்தால் முழு­நாடும் கொந்­த­ளிக்கும். எமது தரப்பு நியா­யங்­களை ஜனா­தி­ப­தியும், பாது­காப்புச் செய­லா­ள ருமே செவி­ம­டுத்­தனர். வேறு எவரும் அவற்றைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்று பொது­ப­ல­சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்பினரும் தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்திரித்தனர். ஆனால்இ தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடாக தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாகவே அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொது­ப­ல­சேனா அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததவாது: ஒரு கிரா­மத்தில் ஏற்­பட்ட சிறிய சண்டை இன்று சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு செல்­லப்­பட்­டு­விட்­டது. அளுத்­கம சம்­பவம் ஏற்­பட்­ட­தற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பா­டு­களே காரணம். சிறிய பிரச்­சி­னை­யாக ஆரம்­பித்த விடயம் இறு­தியில் இரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான கல­வ­ர­மாக மாற்­றப்­பட்­டு­விட்­டது. நடந்த சம்­பவம் ஒரு சிறிய சம்­பவம். அதை பெரி­து­ப­டுத்தி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. அது­மட்­டு­மின்றி இந்த பிரச்­சி­னைக்கு சம்­பந்தம் இல்­லாத எம்­மீது இறு­தியில் குற்றம் சுமத்­தி­விட்­டனர்.
இப்­போது ஆளும் தரப்­பி­னரும்இ எதிர்க்­கட்­சி­யி­னரும் பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரையே குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். இது வேடிக்­கை­யா­கவும் எமக்கு வேத­னை­யா­கவும் உள்­ளது. உண்­மை­யி­லேயே இந்த சம்­பவம் ஏன் ஏற்­பட்­டது என்­பதை எவரும் கேட்­க­வில்லை. நாம் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக தெரி­வித்தோம். நாட்டில் முஸ்லிம் மத­வா­தி­களின் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது என. அதை எவரும் கண்­டு­கொள்­ள­வில்லை. முஸ்லிம் அமைச்­சர்­களும் அமைப்­பு­களும் பேரு­வளைஇ தர்கா நகரை அமை­தி­யான நக­ர­மா­கவே தொடர்ந்தும் சித்­த­ரித்­தனர். ஆனால் தர்கா நகர் என்­பது தீவி­ர­வா­தத்தின் மையப் பூமி­யாகும்.
இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் மத­வா­தத்­தையும் அத­னூ­டான தீவி­ர­வா­தத்­தி­னையும் பரப்பி அப்­ப­குதி மக்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக மாற்றி வைத்­துள்­ளனர். அதன் விளை­வா­கவே இன்று அப் பகு­தியில் இனக்­க­ல­வரம் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த பொசன் தினத்­திற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அப்­ப­கு­தியில் பன்­ச­லைக்கு முன்னால் மாடொன்­றினை வெட்டி பெளத்த மதத்தை அவ­ம­திக்கும் வகையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் செயற்­பட்­டி­ருந்­தனர். இது தொடர்பில் ஏன் எவரும் கண்­டனம் தெரி­விக்­க­வில்லை.
நாட்டில் இன்று 30 பெளத்த அமைப்­புகள் உள்­ளன. பெரும்­பான்மை சமூ­கத்தின் எண்­ணிக்­கையில் இது மிகவும் குறைந்த அளவே. ஆயினும் சிறிய தொகை முஸ்­லிம்­க­ளுக்கு இலங்­கையில் 90 முஸ்லிம் அமைப்­புகள் உள்­ளன. இதில் பல அமைப்­புகள் சர்­வ­தேச அளவில் தடை­செய்­யப்­பட்­டவை. இவை தொடர்பில் எந்­த­வொரு முஸ்லிம் அமைச்­சர்­களும் வாய் திறக்­க­வில்லை. நாம் பேசினால் எம்மை இன­வா­திகள் என சித்­த­ரிக்­கின்­றனர். அளுத்­கம சம்­ப­வத்­திற்கு மூல காரணம் நாம் என்றே இன்று அனைத்து முஸ்லிம் தரப்பும்இ அமைச்­சர்­களும்இ எதிர்க்­கட்­சி­களும் குறிப்­பி­டு­கின்­றன.
ஆம் இந்த இனக்­க­ல­வ­ரத்­திற்கு நாம்தான் காரணம். அவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பி­னர்தான் காரணம் என்றால் அதற்­காக எம்மை கைது செய்து சட்ட நட­வ­டிக்­கைகள் எடுங்கள். அதேபோல் கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பாவி சிங்­கள இளை­ஞர்­களை உட­ன­டி­யாக விடு­வித்­து­விட வேண்டும். சம்­ப­வத்தில் ஆயு­த­மேந்­திய முஸ்­லிம்கள் இன்று சுதந்­தி­ர­மாக நட­மா­டு­கின்­றனர். ஆனால், கல­வ­ரத்தை தடுக்க முயன்ற சிங்­கள இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
அர­சாங்­கமும்இ எதிர்க்­கட்­சியும்இ பொலிஸும் நாட்­டிற்கு உண்­மை­யாக நடக்க வேண்டும். அதை­வி­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பின் மீது எவ­ரேனும் கைவைத்தால் இந்த நாடே கொந்­த­ளிக்கும். பொது­ப­ல­சேனா என்­பது வெறு­மனே ஐந்து உறுப்­பி­னர்­களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொது­ப­ல­சேனா என்­பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்­தையும் சிங்­கள மக்­க­ளையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்­பது பெளத்த மக்­களை அழிப்­ப­தற்கு சம­மாகும். இதை அனைத்து தரப்­பி­னரும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.
மேலும்இ இந்த நாட்டில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­ன­ரி­டமும் நாம் எடுத்­துக்­கூ­றினோம். ஆயினும் எவரும் இதை கண்­டு­கொள்­ள­வில்லை. எனினும்இ எமது முறைப்­பா­டு­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் ஜனா­தி­ப­தியும்இ பாது­காப்புச் செய­லா­ள­ருமே கவ­னத்தில் எடுத்­துக்­கொண்­டார்கள். பல சந்­தர்ப்­பங்­களில் நாம் குறிப்­பிட்­டதை கவ­னத்­திற்­கொண்டு நாட்­டிற்கு எதி­ராக ஏற்­ப­ட­வி­ருந்த அசம்­பா­வி­தங்­களை தடுத்­தனர். எனினும்இ இதற்­காக பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் எமக்கும் தொடர்­புகள் இருக்­கின்­ற­தென எவரும் குறிப்­பி­டு­வது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.
இதில் கருத்துத் தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் உறுப்­பினர் சமில லிய­னகே தெரி­விக்­கையில்;
தமிழ் மக்கள் புத்­தி­சா­லிகள், நேர்­மை­யா­ன­வர்கள் என்று வட மாகாண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இதனை முழு­மை­யாக நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். தமிழ் மக்கள் நேர்­மை­யா­ன­வர்கள்இ புத்­தி­சா­லிகள் என்ற நம்­பிக்கை சிங்­க­ள­வர்கள் மத்­தியில் இருந்­ததன் கார­ணத்­தி­னா­லேயே இன்றும் தமி­ழர்­க­ளுடன் ஒன்­றாக வாழ்­கின்­றனர். எனினும் விக்­கி­னேஸ்­வரன் போன்ற பிரி­வி­னை­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளி­னா­லேயே தமிழ் - சிங்­கள சமூ­கத்­தி­டையே பிரி­வினை ஏற்­பட்டு முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.
பொது­ப­ல­சேனா அமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலந்த விதானகே இவ் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்;
பாதுகாப்புச் செயலாளர் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்றோ அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு பொதுபலசேனா அமைப்பு உதவ வேண்டுமென்ற அவசியமோ இல்லை. நாட்டில் 30 வருட காலம் இருந்த விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தை தனியாக அழித்த ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரினால் இப்போது முஸ்லிம் தீவிரவாதத்தினை அழிக்க எமது உதவி தேவையில்லை. அதேபோல் இனப் பிரச்சினையினை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் செய்யப் பார்க்கின்றனர் இதையும் நாம் முழுமையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி


பொதுபலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது : இராணுவப் பேச்சாளர்

03/07/2014   பாது­காப்பு அமைச்சு மற்றும் அதன் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகியோர் பொது பல சேனாவின் பின்­ன­ணியில் உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு வரும் குற்­றச்­சாட்டுக்­களை பாது­காப்பு அமைச்சு முற்­றாக மறுத்­தது. பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடகமத்­திய நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லா­ளர்
கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய மேற்­படிகுற்­றச்­சாட்­டினை முற்­றாக மறுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
பொது பல சேனா அமைப்பின் பின்­ன­ணியில் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ உள்­ள­தாக பல்­வேறு தரப்­பி­ன­ராலும் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. இது அடிப்­ப­டை­யற்­ற­தாகும். இந்த குற்­றச்­சாட்­டுக்­களின் நிமித்தம் அவ்­வா­றா­ன­வர்கள் பயன்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு காலியில் வைத்து எடுக்­கப்­பட்­ட­வை­யாகும். இவை 2013 ஆம் அண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த ஒரு நாளில் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
காலியில் மெத் செவன எனும் கட்­டி­டத்தை திறந்து வைக்க சென்ற போதே இந்த புகைப்­ப­டங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அது பொது பல சேனாவின் நிகழ்வு அல்ல. மதிப்­புக்­கு­ரிய தேரர் கிரம விம­ல­ஜோதி அவர்கள் வைத்த அழைப்­பினை ஏற்றே அவர் அங்கு சென்­றி­ருந்தார்.
அந்த கட்­டி­ட­மா­னது ஜேர்­ம­னியை சேர்ந்த மைக்கல் ஜே.ஏ. கிரைட் மைனர் என்­ப­வரால் பெளத்த கலா­சார மத்­திய நிலை­யத்­துக்கு அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த நிகழ்­வுக்கு ருஹுணு பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப வேந்­த­ரான பல்­லந்­தர விம­ல­ஜோதி தேரர் தல­மை­வ­கித்த நிலை­யிலும் கிரம விமல ஜோதி தேரரின் அழைப்­பி­லுமே அவர் அங்கு அந்நிகழ்­வுக்­காக சென்­றி­ருந்தார்.
மாறாக பொது பல சேனாவின் அழைப்பின் பேரில் அல்ல என குறிப்­பிட்டார் இதன் போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் பல்­வேறு கேள்வி­களை ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணிகசூரி­ய­விடம் முன்­வைத்­தனர்.
கேள்வி: அந்த நிகழ்வு பொது பலசேனா அமைப்­பி­னரால் ஏற்பாடு செய்­யப்­ப­டு­கின்­றது எனவும் அதில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கலந்­து­கொள்­கின்றார் எனவும் ஊட­கங்கள் நிகழ்­வுக்குபல வாரங்­க­ளுக்கு முன்­ன­ரேயே கூறின. அப்போது கூட அது பொது பல சேனாவின் நிகழ்வு என்­பதை மறுக்­காத பாது­காப்பு அமைச்சு அளுத்கம விவ­கா­ரத்தின் பின்னர் இவ்­வாறு திடீ­ரென விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­து­வது ஏன்?
பதில்: விமல ஜோதி தேரரின் அழைப்­புக்­க­ாகவே பாது­கப்பு செய­லாளர் அங்கு சென்­றுள்ளார். வேறு கார­ணங்கள் இல்லை. அப்­படி ஊட­கங்கள் முன்­கூட்­டியே செய்தி வெளி­யிட்­டமை தொடர்­பிலும் அதனை மறுக்­காமை தொடர்­பிலும் எனக்கு கருத்து கூற முடி­யாது.
ஏனெனில் அப்­போது நான் இரா­ணுவப் பேச்­சாளர் மட்­டுமே. நான் பாது­காப்பு அமைச்சின் பேச்­சா­ள­ராக ஏப்ரல் மாதம் முதலே கட­மை­யாற்­று­கின்றேன்.
நன்றி வீரகேசரி

விசா­ரணைக் குழு­வுடன் தொடர்­பு­கொள்­கின்­ற­வர்கள் பழி­வாங்­கப்­ப­டவோ அச்­சு­றுத்­தப்­ப­டவோ கூடாது :ஐரோப்­பிய ஒன்­றியம்

03/07/2014   இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள, சர்­வ­தேச விசா­ரணைக் குழு­வுடன் தொடர்­பு­கொண்டு செயற்­ப­டு­கின்­ற­வர்கள் பழி­வாங்­கப்­ப­டவோ அச்­சு­றுத்­தப்­ப­டவோக் கூடாது என்று ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.
அத்­துடன் இலங்­கையில் ஸ்திரத்­தன்­மை­யையும் சமா­தா­னத்­தையும், ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் இலங்கை அர­சாங்கம் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்றும் தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்­பாக ஐரோப்­பிய ஒன்­றியம் நேற்று விடுத்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது
ஐ.நா. வின் விசா­ரணைக் குழு­வுக்கு பின்­லாந்து அரசின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை வர­வேற்­கின்றோம்.
அந்­த­வ­கையில் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கு­மாறு ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை அர­சிடம் கோரிக்கை விடுக்­கின்­றது. இதே­வேளை மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கின்ற நபர்­களை பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டக்­ கூ­டாது.
அத்­துடன் இலங்­கையில் ஸ்திர­தன்­மை­யையும் சமா­தா­னத்­தையும், ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் அர­சாங்கம் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதன் மூலமே நீண்­ட­கால சமா­தா­னத்தை கொண்­டு­வர முடியும்.
அர­சாங்கம் ஐக்­கிய நாடு­களின் விசா­ரணைக் குழு­வுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்டும். பொறுப்புக் கூறல் மற்றும் நல்­லி­ணக்க விவ­கா­ரங்­களில் இது முக்­கிய நட­வ­டிக்­கை­யாக அமையும்.
இலங்­கை­யா­னது யுத்­தத்­துக்குப் பின்னர் ஐந்து வருடகால நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் எதுவும் நிறுத்தப்படக்கூடாது. இந்த விவகாரங்களில் இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்றது.
நன்றி வீரகேசரிபயிற்சிகளை இன்று நிறைவு செய்த தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு

02/07/2014
இராணுவத்தில் கடந்த மார்ச் மாதம் இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள் தமது மூன்று மாதகால பயிற்சியை இன்றுடன் நிறைவு செய்தனர்.
குறித்த யுதிகள் பயிற்சியை நிறைவு செய்ததை முன்னிட்டு முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆலோசனைக்கு அமைய குறித்த பெண்கள் இராணுவத்தின் பெண்கள் படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 நன்றி வீரகேசரி
புலி சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் கைது : சந்திரிக்காவை கொல்ல முயற்சித்தவரும் அடங்குவதாக தகவல்

04/04/2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கடந்த வியாழக்கிழமை மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலையடுத்தே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேக நபர்களில் ஒருவர் குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினர், முன்னாள்  இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை  செய்ய முயற்சித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
 
மூன்றாம் சந்தேக நபர் அண்மையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரின் சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
நான்காம் சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தகவல்களை திரட்டியவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
 
சந்தேக நபர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 நன்றி வீரகேசரிஇந்தோனேஷியாவில் நான்கு இலங்கையர்கள் கைது

04/04/2014  இந்தோனேஷியாவில் ஏ.ரீ.எம். மோசடியில் ஈடுபட்ட நான்கு இலங்கையர்களும் அவர்களுக்கு உதவி செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சிவா, வினோத், ராஜன் மற்றும் வாலி ஆகிய நான்கு இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த இலங்கையர்கள் கனேடியர்களுடன் இணைந்து சுமார் 32 லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தை மோசடி செய்துள்ளனர்.
 
 கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடமிருந்து 260 போலி ஏ.ரீ.எம் அட்டைகளும் மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கணனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் 50 மில்லியன் பெறுமதியான இந்தோனேஷிய பணமும்  மீட்கப்பட்டுள்ளன.
  நன்றி வீரகேசரிNo comments: