சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 சடலங்கள் மீட்பு
ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்
ஜெருசலேமில் இளைஞன் படுகொலை : பிராந்தியத்தில் பதற்ற நிலை
========================================================================
சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
30/06/2014 சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பெண் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் 50 பேர் வரை சிக்கியிருப்பதால் பலியாகியோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

போரூரை அடுத்துள்ள முகலி வாக்கம் பகுதியில் 11 மாடிக ளைக் கொண்ட இரண்டு குடியி ருப்பு கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வந்தன. `ப்ரைம் சிருஷ்டி` என்ற தனியார் நிறுவனம், இக்கட்டடங்களை கட்டி வந்தது. முகலிவாக்கம் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு கட்டடங்களில் ஒரு கட்டடம் முற்றாக இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் கட்டட தொழிலாளர்கள் உட்பட 50 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

காயமடைந்த பலர், மீட்கப்பட்டு சிகிச்சை க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மதுரை யைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் உயிரி ழந்தார். இதேபோன்று, சங்கர் என்ற தொழிலா ளரும் சிகிச்சை பலனின்றி பலியா னார். இதேேவளை கட்டட இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்புப்பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இரும்புச்சாரங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை ஒவ்வொன்றாக வெட்டியெடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரவு நேரம் என்ப தாலும், மழை பெய்திருப்பதா லும் மீட்புப் பணியில் தாம தம் ஏற்பட்டிரு ப்பதாக தெரிகிறது.
இதனால் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 260 பேர் விபத்து நடந்த மவுலிவாக்கம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் உட்பட இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்ப ட்டன. முதியவர் ஒருவரின் சடலம் முதல் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தரமற்ற பொருட்களால் கட்டடம் கட்டப் பட்டதே கட்டடம் இடிந்துவிழ காரணம் என முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கள் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தை காண பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால், போரூர்- குன்றத்தூர் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நன்றி வீரகேசரி
புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 சடலங்கள் மீட்பு
30/06/2014 இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே குறித்த படகிலில் பயணித்த 600 பேரை இத்தாலியக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த 30 பேரும் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக இத்தாலி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்
02/07/2014 ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்பதல் அளித்துள்ளார்.

ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சுன்னிபிரிவை சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் இராணுவம் பலத்துடன் உள்ள போதும் போராளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
காரணம் அவர்களிடம் அதிநவீன போர்க்கருவிகள் உள்ளன. அவற்றை சுன்னிபிரிவை சேர்ந்த அண்டை நாடுகள் வழங்கி உள்ளன. மேலும் அந்நாடுகள் அவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர். ஈராக் இராணுவத்தில் உள்ள சுன்னிபிரிவு வீரர்களும் போரில் ஈடுபட மறுக்கின்றனர். இது போன்ற காரணங்களால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்கப டைகள் 2011– ஆம் ஆண்டில் வெளியேறின. அதன்பிறகுதான் அங்கு போராளிகள் கை ஓங்கியது. அங்கு முகாமிட்டிருந்தபோது ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பலத்த சேதம் ஏற்பட்டது.
தற்போது நிலைமையை சமாளிக்க மீண் டும் அமெரிக்க உதவியை ஈராக் நாடியது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் உடனடியாக அதில் தலையிட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்ப வில்லை. நிலைமையை உற்று கவனிப்பதாக தெரிவித்தார். இராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்றும் அறிவித்தார்.
அதே சமயத்தில், பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அங்கு முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களை பாதுகாக்கவும்இ அவர்களு க்கு பயிற்சி அளிக்கவும் 300 ஆலோசகர்களை அனுப்புவதாக அறிவித்தார். அவர்களில் பலர் அங்கு சென்று ஈராக் இராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, போராளிகளையும் அவர்களின் இருப்பிடங்களையும் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பற க்க விடப்படும் என ஏற்கனவே அமெரிக்கா அறிவித்து இருந்தது.
அதன்படி தலைநகர் பக்தாத் நகரின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பறந்து வட்டமிட்டு வருகின்றன. அவற்றில் ‘ஹெல்பயர்’ என்ற ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்புக்காகவே இந்த ஆளில்லா விமா னங்கள் பயன்படுத்தப்படுகின்றன என அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில், ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று ஒப்புதல் அளி த்துள்ளார். இதன்படி, ஏற்கனவே ஈராக்கில் உள்ள 275 அமெரிக்க வீரர்கள், பின்னர் அறிவிக்க ப்பட்ட 300 வீரர்கள், தற்போது அறிவிக்க ப்பட்டுள்ள மேலும் 200 வீரர்கள் என சேர் த்து ஈராக்குக்கு அமெரிக்கா அனுப்பும் இரா ணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும் அங்குள்ள அமெ ரிக்க தூதரகங்கள் மற்றும் தலைநகர் பக் தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலை யம் ஆகியவற்றை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ட்டக னின் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கோன் எப் கிர்பி தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
ஜெருசலேமில் இளைஞன் படுகொலை : பிராந்தியத்தில் பதற்ற நிலை
03/07/2014 ஜெருசலேமில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞரின் மரணச்சடங்கு இன்று வியாழக்கிழமை பலஸ்தீனத்தில் இடம்பெற்றது.

மொஹமட் அபு காதிர் என்ற மேற்படி இளைஞன் புதன்கிழமை கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
3 இஸ்ரேலிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழி தீர்க்கும் முகமாக அந்தப்படுகொலை இடம்பெற்றதாக பாலஸ்தீனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து பலஸ்தீன போராளிகளால் இஸ்ரேலின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இஸ்ரேல் பலஸ்தீன் காஸா பிராந்தியத்தின் மீது இன்று வியாழக்கிழமை தொடர்வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காஸாவிலுள்ள 15 தீவிரவாத தளங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படையினர் இன்று வியாழக்கிழமை தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
17 வயதான இளைஞன் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு யூத குடியிருப்பாளர்களே காரணம் என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்படி படுகொலையை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேசமயம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹ_ மேற்படி இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
பலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் சட்டத்தை தமது கையில் எடுக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment